You are here
Ko Veeraiyan அஞ்சலி 

‘செங்கொடி நெஞ்சம்’ – தோழர் கோ.வீரய்யன் – ச. தமிழ்ச்செல்வன்

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒப்பற்ற பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்,விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். காவிரியின் கடைமடைப் பகுதியான நன்னிலம் வட்டத்தில் உள்ள சிற்றூரான சித்தாடியில் 1932ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் பிறந்தவர் தோழர் கோ.வீரய்யன்.அருகமைப்பள்ளி ஏதும் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. உள்ளூர் படிப்பாளி ஒருவரிடம் சில காலமும் திண்ணைப்பள்ளியில் இரண்டு ஆண்டுகாலமும் அவருக்குக் கிடைத்ததுதான் கல்வி.பகலில் மாடு மேய்த்து,குளிப்பாட்டி,மாலையில் தீனி வைத்து,மாட்டுக்கொட்டில் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு இரவில் திண்ணைப்பள்ளியில் படிப்பார்.அந்தக் கல்வியை வைத்துக்கொண்டுதான் அவர் இத்தனை நூல்களையும் பின்னர் எழுதியுள்ளார் என்பது மலைக்க வைக்கும் செய்தியாகும். எட்டு வயதிலிருந்து மாடுகளை மேய்த்துப் பரமாரித்து வந்த வீரய்யன்,பத்து வயதில் பண்ணை வயலில் அரையாளாக வேலை செய்யத்துவங்கினார். 12 வயதில் ஊருக்கு குடிதண்ணீர் கிணறு…

Read More
Muthusamy Image அஞ்சலி 

கூத்தின் ஞானரதம் – ச. தமிழ்ச்செல்வன்

1936ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகிலுள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தவர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி..இரண்டாமாண்டு இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பைத் தொடராமல் சென்னைக்கு வந்துவிட்டார். வெங்கடரங்கம்பிள்ளை தெருவுக்கு அருகிலிருந்த மீனவர் குப்பத்தில் வசித்து வந்தார்.பக்கத்தில் விக்டோரியா ஹாஸ்டலில் தங்கி பிரஸிடன்ஸி கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்த கவிஞர் சி.மணியுடன் நட்புக்கொண்டு இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். சி.சு.செல்லப்பாவின் ’எழுத்து’ இதழே அவருக்கு இலக்கிய ஆசான் என்று அவரே குறிப்பிடுவார். “’எழுத்து’ஒரு லட்சியமாக இருந்தது.’எழுத்து’வின் புதுக்கவிதைகள் லட்சியமாக இருந்தன.புதுக்கவிதைக்கு எதிர்ப்புத் தெரிவிப்போருக்கு எதிராக ஆயுதம் பூண்டு யுத்தத்துக்குத் தயாராக இருப்பவனைப்போல,மன ஆயத்தநிலை கொண்டிருந்தது.சி.சு.செல்லப்பா என்ற தளபதிக்குப் பின்னே அணிவகுத்து நிற்பதைப்போல இருந்தது.சி.சு.செல்லப்பாவிடம் கேட்ட கதை விமர்சனங்கள் ,அவர் எழுதியதைப் படித்ததை விட நேரில் சொல்லக்கேட்ட விமர்சனங்கள் என்னை மெல்ல மெல்லத் தயாரித்துக்கொண்டு வந்திருந்தன” அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு க.நா.சுப்பிரமணியனிடம் முன்னுரை…

Read More
iravatham-mahadevan அஞ்சலி 

‘தமிழ் எழுத்துள்ளவரை இறப்பில்லை’ – ஐராவதம் மகாதேவன் – சுந்தர் கணேசன்

நானும் எனது மனைவியும் ஐராவதம் மகாதேவன் அவர்களைக் காண கடந்த 25ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரால் பேச இயலவில்லை. எங்கள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். சைகையால் ஒரு வெள்ளை அட்டையைக் கேட்டார். அதில் “When shall I die? I. M”. (நான் என்று இறக்க வேண்டும்) என எழுதினார். பின் 26.11.2018 என தேதியைக் குறிப்பிட்டார். அந்த அட்டையை என்னிடம் காண்பித்துவிட்டு தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு எங்களைக் கையசைத்து வழி அனுப்பி வைத்தார். 12 மணி நேரம் கழித்து 26 ஆம் தேதி காலை இறந்து போனார். F.W.எல்லீஸ், ராபர்ட் சீவல் போன்ற அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களுமாக இருந்தவர்கள் வரிசையில் மகாதேவனும் இடம் பெறுவார். மகாதேவனின் தமிழ் பிராமி, சிந்துவெளி குறியீட்டு ஆராய்ச்சிகள் திராவிடவியல் ஆராய்ச்சிக்கான மிகப்பெரிய ஆய்வுக் களஞ்சியங்களாகவும் முதன்மை ஆதார…

Read More
அஞ்சலி 

கார்ல் மார்க்ஸ் நூலகர் ச.சீ.கண்ணன்

லதா ராமகிருஷ்ணன் சிறந்த சிந்தனையாளர், சீரிய சமூகப்பணியாளர், மாசறு மனிதநேயவாதி என முழுமையான மனிதராக வாழ்ந்தவர் திரு. எஸ்.எஸ்.கண்ணன். அங்கீகாரம் என்பதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டேயில்லை. ஆரவாரமில்லாமல் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பார்வையற்றோருக்கு, குறிப்பாக பார்வையற்ற மாணவர்களுக்குச் செய்த உதவிகள் ஏராளம். பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான CSGAB (COLLEGE STUDENTS AND GRADUATES ASSOCIATION FOR THE BLIND) என்ற அமைப்பின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர். பார்வையற்றவர்கள் தங்கள் நலவாழ்வுக்கான அத்தியாவசியத் தேவைகளை அரசிடமிருந்து சலுகையாகப் பெறவேண்டியதில்லை; தங்கள் அடிப்படை உரிமையாகப் பெறலாம் என்ற விழிப்புணர்வைத் தமிழகத்திலுள்ள பார்வையற்ற மாணாக்கர்களிடையே ஏற்படுத்தி தங்கள் உரிமைகளுக்காக ஒருங்கிணைந்து போராடும் துணிவை அவர்களிடம் உருவாக்கியவர். அவருடைய வீட்டில் அவர், அவருடைய மனைவி சகோதரி என எல்லோருமே பார்வையற்ற மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகங்களையும் தேவைப்படும் மற்ற புத்தகங்களையும் வாசித்துக்காட்டும் பணியைத்…

Read More
அஞ்சலி 

தோழர் சுந்தா அஞ்சலி

‘சுந்தா’ என்கிற சுந்தரம், காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் – கலைஞர்கள் சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவர். வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்தாலும் அவருடைய உள்ளார்ந்த ஈடுபாடு முற்போக்கு இலக்கியச் செயற்பாடுகளின் மீதே இருந்தது. தமுஎகச-வின் மாநில நிர்வாகிகளுள் ஒருவராக இறுதிவரை சுந்தா ஆற்றி வந்த பணிகள் அளப்பரியவை. அவருக்கு புத்தகம் பேசுதுவின் சிரம் தாழ்ந்த அஞ்சலி.

Read More
அஞ்சலி 

அலிகர் பல்கலைக் கழக ‘நவீன இந்திய மொழிகள்’ துறைத் தலைவர் பேராசிரியர் மூர்த்தி மறைவு

சமுதாயத்தின் துயரம், காவியங்களில் ஒலிக்கலாம். அத்துயர ஒலி, எதிர்காலத்தின் விடிவுக்கு அழைப்பு மணியாக இருக்க வேண்டுமேயொழிய துயரத்தையே நியாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது. கவிஞர்கள், தனிமனித வாழ்வின் துயரங்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பொதுவான அமைப்பு முறைகளால்தான் ஏற்படுகின்றன என்பதை உணர வேண்டும். இல்லையெனில் தன் துயரத்தைப் பற்றியே பெரிதுபடுத்திப் பாடிக் கொண்டிருக்கும் கையறு நிலைக் கவிஞர்களாகி விடுவர். மனித குலச் சிந்தனை வரலாற்றில் புதிய திருப்பத்தை, புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தத்துடித்த ஒவ்வொரு சிந்தனையாளனுக்கும், செயல் வீரனுக்கும், கவிஞனுக்கும் காலம் முதன் முதலில் அளித்த பட்டம், ‘பைத்தியக்காரன்’ என்பதே ஆகும். தனிமனித நலன்களைச் சமுதாய நியாயங்களாக்கச் சிலர் துடித்தபோது, சமுதாயச் சிந்தனைக் கொதிப்பில் அறிஞர்களும் கவிஞர்களும் தோன்றினார்கள். தோன்றுவார்கள். அவர்களின் நெருப்புப் பார்வையில் நெருஞ்சிக் கொடுமைகள் பொசுங்கிப் போகும். கால ஓட்டத்தில் அந்த அறிஞர்கள் மறையலாம். அவர்கள் மூளையோடு மட்டுமே தொடர்பு…

Read More
அஞ்சலி 

க.சீ.சிவகுமார் அஞ்சலி

கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் என்ற இயற்பெயருடைய க.சீ.சிவகுமாருக்கு 46 வயதுதான் ஆகிறது. எதிர்பாராத விதமாக பெங்களூரிலுள்ள தனது இல்லத்தில் நிகழ்ந்த ஒரு விபத்தினால் அவர் மரணமடைய நேர்ந்தது ஓர் இழப்பாகும். னந்தவிகடன், தினமலர் போன்ற பத்திரிகை நிறுவனங்களில் சில ஆண்டுகள் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார். கன்னிவாடி, ஆதிமங்கலத்து விசேஷங்கள், குணச்சித்தர்கள், உப்புக் கடலைக் குடிக்கும் பூனை, க.சீ.சிவகுமார் குறுநாவல்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். மிகக் குறுகிய காலத்தில் 150க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியவர்.

Read More
அஞ்சலி 

மணவை முஸ்தபா அஞ்சலி

அறிவியல் தமிழ் நூல்களிலும், அகராதிகள் உருவாக்கத்திலும் முன்னோடி அறிஞரான மணவை முஸ்தபா அவர்கள் பிப்ரவரி 6 அன்று சென்னை அண்ணாநகரில் காலமானார். அவருக்கு வயது 92. அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம், கணினித் துறை சார்ந்த எட்டு கலைச் சொல் அகராதிகளைத் தொகுத்து வெளியிட்டார். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழ் 30 மொழிகளில் வெளியான ஒரு சர்வதேச இதழ். அதன் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றியவர் மணவை முஸ்தபா. கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி உட்பட 31 நூல்களை எழுதியவர்.என் சைக்ளோ பீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் திறம்படப் பணியாற்றியுள்ளார்., செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர், அறிவியல் தமிழ்மன்றத் தலைவர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், தமிழ் அறக்கட்டளைத் தலைவர் உட்பட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தந்தை பெரியார்…

Read More
அஞ்சலி 

கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள்.

 சி. தெட்சிணாமூர்த்தி (1943 – 2016) வேலூருக்கு அருகிலுள்ள குடியாத்தம் நகரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவரான தெட்சிணாமூர்த்தி, 1966 ஆம் ஆண்டில் சென்னை ஒவியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக க்ராய்டன் காலேஜ் ஆப் டிசைன் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் பிரிண்ட் மேக்கிங் கற்றார். சிற்பி தெட்சிணாமூர்த்தியின்மா ணவரான ஓவியர் க. நடராசன் அவரைப் பற்றி தி இந்து தமிழ் கட்டுரையில் இவ்வாறு நினைவுகூர்கிறார்: “சென்னை ஓவியக் கல்லூரிக்குள் இந்தியக் கலை மரபு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்துகொண்டிருந்த 1950-60களின் காலப் பொழுதில்தான் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். அவர்களுள் தட்சிணாமூர்த்தி முக்கியமானவர். பின் புலமற்ற சாமானியர்களின் முதலாம் தலைமுறையின் படைப்புகளைச் சமூகம் எந்தக் கேள்வியுமின்றி உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற…

Read More
அஞ்சலி 

மக்கள் பாடகர் சங்கை திருவுடையான் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் கைநெசவுக் குடும்பத்தில் பிறந்து தனது குரலால், கருத்தாய்வு மிக்க பாடல்களால் தமிழகத்தின் முற்போக்கு மேடைகளுக்கு செறிவூட்டியவர் மக்கள் பாடகர் சங்கை திருவுடையான். கரிசல் குயில் இசைக் குழுவின் தபேலா கலைஞராக அறிமுகமானவர். பின்னாளில் தபேலா இசைத்துக் கொண்டே கணீர் குரலில் திருவுடையான பாடத் துவங்கினார். தமிழா, தமிழா நீ பேசுவது தமிழா இப்பவெல்லாம் எவன்டா சாதி பாக்குறான்னு அப்பாவி போலவே கேக்குறான்னு ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்த போல என பெண்ணுரிமை சமூகநீதி, மொழிபற்று, தேசப்பற்று ஆகிய முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் பாடல்களை தமிழகமெங்கும் இசைத்து வந்தவர் மக்கள் கலைஞர் சங்கை திருவுடையான். சேலத்தில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பும் வழியில் 29.08.2016 அன்று சாலை விபத்தில் அகால மரணமடைந்தார். கடந்த கால் நூற்றாண்டுகளாக தனது பாடல்களால், தபேலா…

Read More