You are here
நூல் அறிமுகம் 

புலப்படாத கொள்ளை…

என். சிவகுரு மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றிய சுகுமார் இப்புத்தகத்தை அழகுற எழுதியுள்ளார். மருந்துகளைப் பயன்படுத்தாத மனிதன் இன்று யாரும் இருக்க முடியாது. அதுவும் ஆங்கில மருந்துகளைத் தான் நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஒரு பக்கம் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோய், பத்தில் ஒருவருக்கு, இரத்த அழுத்தம், ஊட்டசத்து இல்லாத குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை, கடன் வாங்கி மருத்துவம் செய்து கொள்ளும் அவலம் என நம்மைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இப்புத்தகம், ஒரு இருள் இந்தியர்களை எவ்வாறு கவ்வுகிறது என சொல்லுகின்றது. நல்வாழ்வு அரசு எனும் சொல்லுக்கு இன்று அர்த்தமே இல்லாத நிலையில் தன் கடமைகளிலிருந்து, அரசுகள் படிப்படியாக ஒதுங்கிக் கொள்கின்றது. மக்களின் அடிப்படைத் தேவைகளை ஓரளவுக்கு செய்து கொண்டிருந்த அரசுகள் தாராளமய காலத்தின் துவக்கத்திலேயே, தனியாரை சேவைத் துறைகளில் கொண்டு வந்து,…

Read More
Uncategorized 

மொழிபெயர்ப்புக்கு மொழி மட்டும் தெரிந்தால் போதாது

சா.தேவதாஸ் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சா.தேவதாஸ் 2015ஆம் ஆண்டிற்கான ஆனந்தவிகடனின் சாதனையாளர் விருதும், 2014ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதும் பெற்றுள்ளார். அரசுப்பணியிலிருந்து 2012ல் ஓய்வுபெற்று, ராஜபாளையத்தில் வசித்து வருகிறார். ‘உரையாடல்’ என்னும் கலை இலக்கிய அமைப்பை நண்பர்களுடன் நடத்துகிறார். 20 மொழியாக்க நூல்களும் 9 ஆய்வு / கட்டுரை / விமர்சன நூல்களும் வெளியிட்டுள்ளார். சிறுபத்திரிகை இயக்கத்துடன்  25 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருபவர். மொழிபெயர்ப்புப் பணியில் எப்போதிருந்து ஈடுபடுகிறீர்கள்? இத்துறையில் ஆர்வமேற்பட்ட பின்னணி என்ன? மொழிபெயர்ப்பு, அறிமுகம் செய்தல், விமர்சனம் /ஆய்வு குறித்த ஈடுபாடு எண்பதுகளில் தொடங்கிவிட்டது எனலாம். முதுகலை எம்.ஏ, முடித்ததும், அடுத்து கல்வி வளாக ஆய்வு, ஆசிரியப்பணிகளில் ஈடுபாடு வரவில்லை. என்போக்கில் அரவிந்தரின் ‘சாவித்திரி’ மார்க்ஸின் ‘மூலதனம்’ தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ என்றெல்லாம் வாசித்துக் கொண்டிருந்தேன். காரணம், “ஒருவன் முழுமனிதனாவதற்கு…

Read More
கடந்து சென்ற காற்று 

மரம் ஏறும் யானை

ச.தமிழ்ச்செல்வன் எ   ம்மாதமும் போல இம்மாதமும் சுழன்றடித்த காற்று எல்லாத் திசைகளிலும்  தூக்கிப்போட்டுக் கொண்டிருந்தது. விதவிதமான கூட்டங்கள் விதவிதமான மனிதர்களுடனான சந்திப்புகள் எனக் கடந்து சென்றது காற்று. மயிலாடுதுறையில் இயங்கும் ஏ.வி.சி. கல்லூரியில் மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் பணம் வசூல் செய்து விளம்பரங்கள் சேகரித்துத் தங்கள் படைப்புகளை வெளியிட ‘இளந்தூது’ என்கிற ஒரு இதழை நடத்தி வருகிறார்கள். அதன்  27 ஆவது இதழை வெளியிட்டுப்பேச என்னை அழைத்திருந்தார்கள்.  120 பக்கங்களுக்கு மேல் கொண்ட பெரிய அளவிலான இந்த இதழில் “இளைஞனே! வீழ்வது வெட்கமில்லை..  வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம்” என்கிற பாணியிலான எண்ணற்ற கவிதைகளும் மாணவ மாணவியர் வரைந்த ஓவியங்களும் அறிவியல் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. ஒரு கூட்டு முயற்சி என்கிற அளவில் இது மிகவும் பாராட்டத்தக்க முன்னுதாரணம். கல்லூரி நிர்வாகத்திடம் பணம் வாங்கினால் சுதந்திரம் போய்விடும் என்பதால்…

Read More
நூல் அறிமுகம் 

புத்தகங்களின் வழியே விரியும் பார்வைகள்

 கமலாலயன் புத்தகங்களை எழுதுவோரின் பார்வைகள், கற்பனை, அநுபவங்களின் பிழிவு, மொழியாளுமை, அரசியல் – இலக்கியக் கொள்கைகள் ஆகிய அம்சங்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் விளைவுகளாய் அமைகின்றன. புத்தகங்களை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும், அவரவர் கண்ணோட்டங்களுக்கு ஏற்ப சில கருத்துகள் உருக்கொள்கின்றன. சக நண்பர்களுடனான உரையாடல்களின் போது அவை திட்டவட்டமான வடிவம் பெறுகின்றன. உரையாட உரையாட மேலும் செழுமையடைகின்றன. எழுத்தாற்றல் பெற்றவர்கள் தமது பார்வைகளை அறிமுகக் கட்டுரைகள், திறனாய்வுகள், மதிப்புரைகளின் வாயிலாகப் பதிவு செய்கின்றனர். தான் வாசித்து மகிழ்ந்த 33 புத்தங்களைப் பற்றிய தன் எண்ணங்களை ‘வெளி’ ரங்கராஜன் மிகச் சுருக்கமாகவும், செறிவாகவும் பதிவு செய்திருக்கிறார். ‘கூத்துப்பட்டறை’ நிறுவனரான ந.முத்துசாமி எழுதிய பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றை சி.அண்ணாமலை உருவாக்கித் தந்திருக்கிறார்.   தமிழில் நவீனத்துவம் சார்ந்த ஒரு காலகட்டத்தின் வெளிப்பாடுகள் இவை. நாடகம், ஓவியம், சினிமா என கலைத்துறைகள்; அவற்றைக் கலாபூர்வமாக…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

ஒரு தோல்வி ஏற்படுத்திய உலகப் பேரழிவு

என்.குணசேகரன் “தோல்வியடைந்த புரட்சிகளை நாம் மறந்து போகிறோம்” என்று வருத்தத்துடன் எழுதினார்  மார்க்சிய அறிஞர்,கிரிஸ் ஹார்மன். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஜெர்மானியப் புரட்சியும் மறந்து போன ஒன்றாக மாறிப்போனது. இந்தப் புரட்சி எழுச்சிகள்  1919 – 1923-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தன. அந்தப் புரட்சி வெற்றியடைந்து நீடித்திருந்தால், உலகின் வரலாறு மாறியிருக்கும். கீழ்க்கண்டவை மாற்றங்கள் நிகழ்ந்திருக்ககூடும். ஹிட்லர் ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது. பாசிசப் பேரழிவும் நடந்திருக்காது; இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்திருக்காது. ரஷியாவில் நடந்த சோசலிசப் புரட்சி, பொருளாதார, அரசியல் துறைகளில் ஜெர்மனியின் பக்கபலத்தோடு புத்துயிர் பெற்றிருக்கும். சோவியத் சோசலிசப் பரிசோதனைகளின் வெற்றி, உலகத்தின் சமுக மாற்றம் காண விழையும் இயக்கங்களுக்கு, புதிய வீர்யத்தை ஏற்படுத்தியிருக்கும். இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய வரலாறு வித்தியாசமாக இருந்திருக்கும். இத்தகு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் புரட்சியை கிரிஸ் ஹர்மன் தனது  “வீழ்ச்சியடைந்த புரட்சி”…

Read More
நூல் அறிமுகம் 

நீவாநதி என்னும் நாவல் வாழ்க்கை

ச.ஆறுமுகம் வா                டைக்ரீஸ், தேம்ஸ், சிந்து, கங்கை, காவிரி மட்டுமின்றிப் பாலைப் பனிவெளியும், மானாவாரியும் கொங்கும் கரிசலும் நாஞ்சிலும் நொய்யலும் நெய்தலுமெனப் பதிவாகியுள்ள வாழ்க்கைகளை அறிந்த தமிழ் இலக்கிய உலகிற்கு கவிப்பித்தன் எழுதிய “நீவாநதி“ நாவல் தரும் பொன்னையாற்றங்கரையின் எளிய மனிதர்களின் வாழ்க்கை ஒரு புதிய வரவு. ஆந்திர மாநிலத்தின் மலைகளில் பெய்யும் மழை பெருவெள்ளமாக உருமாறி பலமநேரி காட்டைக் கடந்து, சித்தூரைத் தாண்டி, தெங்கால் கிராமத்துக்குச் சற்று முன்னால் தமிழ்நாட்டுக்குள் பொன்னை நதியாக நுழைந்து, பொன்னை, வசூர், மேல்பாடி, திருவலம் வழியாகப் பாலாற்றில் சங்கமமாகின்றது. இந்த ஆற்றின் குறுக்கே 1855-ல் வசூர் கிராமத்தில் வெள்ளைக்காரன் 252.3 மீட்டர் நீளத்துக்கு அணைக்கட்டு ஒன்றினை அமைத்து, அதிலிருந்து இடதுபுற மற்றும் வலதுபுறக் கால்வாய்கள் வழியாக வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 129 ஏரிகளை நிரப்பி 8850…

Read More
நூல் அறிமுகம் 

ஜாதியற்றவளின் குரல்

 பாரதி செல்வா நேர்மையான சிந்தனை இங்கு மாற்று சிந்தனையாகிவிட்டது. அநீதியை எதிர்ப்பவர்களை மாற்று சிந்தனையாளரென அழைக்கிறோம். சமூகத்தின் பிரச்சனையைப் பேசுபவை இங்கே மாற்று ஊடகங்களாகி விட்டன. அப்படியெனில், இந்த பெரும்பான்மைச் சமூகமும் அதன் அரசியலும் பொருளாதாரமும், பொழுதுபோக்கும் வாழ்வியலும் நம்பிக்கையும் எத்தனை நேர்மையற்றதாக, பாகுபாடுகளைக் கொண்டாடுபவையாக இருக்கிறதென பாருங்கள். நீதியும் நேர்மையும் இங்கு மாற்றுச் சிந்தனையெனில் இந்த சமூகத்தின் நேரான சிந்தனை அநீதியும் நேர்மையின்மையும் தானே?” இப்புத்தகத்தின் முன் அட்டையில் முதல் பத்தி நேர்மையான சிந்தனை மாற்றுச் சிந்தனையாக பார்க்கப்படும் சமூக சூழலை விளக்கும், வலுவான வரிகளுடன் தன் பார்வையைப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.  சாதி இந்திய சமூகத்தின் மனித மூளைகளை ஒன்றிணைக்கவிடாமல் அணு அணுவாய் கூறுப்போட்டு வைக்கும் இழி சொல். இந்துத்துவத்தின் ஆணி வேரான வர்ணசிர்ம (அ) தர்மத்தின் அடிப்படையில் உருப்பெற்ற சாதியப் படிநிலை தன்…

Read More
கட்டுரை 

கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஈர்க்கும் எழுத்துக்கள்…

தொகுப்பு எம்.கண்ணன் எளிய மனிதர்கள். கிராமத்து மனிதர்கள், பாவப்பட்ட ஜனங்களின் அன்றாட வாழ்வின் துயரத்தையும், வலியின் ரணமும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்முன் வந்து செல்கிறது. சிறுவர், சிறுமியர், தொழிலாளர்கள், பெண்கள் என சமூகத்தின் மனித முகங்கள் எப்படி சுருங்கி, விரிகிறது என சொல்லாடல்கள் உரக்கப் பேசுகிறது. குதிங்காலிட்டு உட்கார்ந்து பார்த்தாள், சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தாள். ஒரு காலை சப்பணமிட்டு ஒரு காலை நீட்டியும், இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தாள். ம்கூம் எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது. குதிங்காலிட்டு வயிற்றில் முழங்கால்கள் அழுத்த உட்கார்வதில்தான் கொஞ்சம் பசியும் வலியும் தெரியாமலிருந்தது. ஒட்ட வேண்டிய தீப்பெட்டிப் பெட்டிகள் இன்னும் ரெண்டேதான் இருந்தன…. இப்படியாக தீப்பெட்டி ஒட்டும் பெண்ணின் கந்தக நெடி கலந்த வாழ்க்கை பாவனை என்ற கதையின் கீழ் பற்றி எரியும் வாழ்க்கையை படம் பிடித்து காட்டுகிறது. அதேபோல் ஆண், பெண்…

Read More

தேவை வாசிக்கும் வகுப்பறைகள்

கற்றல் பன்முக நோக்கம் கொண்டது என்பார்  தாண்டைக். பல்வேறு வகை கற்றல் செயல்பாடுகளின் ஒன்றிணைப்பே கற்றல் என்பது உண்மையானால் சொல் சார்ந்த கற்றல், புலன்காட்சி கற்றல், பிரச்சனைதீர்வு கற்றல். கருத்தமைவு கற்றல் என விரியும் அனைத்து கற்றல் முயற்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் சாத்தியம் வாசிப்பு எனும் ஒரு செயல்பாட்டில் எட்டப்பட்டு விடும். பலமணிநேரம் ஆசிரியரின் குரலை செயல்பாட்டை கவனித்தபடி சும்மா இருப்பதாலும் வெறுமனே பதில்களைத் திரும்பத்திரும்ப சொல்வதாலும் நடப்பதல்ல கற்றல். இன்று பல்துறை நுண்ணறிவு (Multiple-Intelligence) என்று பேசுபவர்கள் கூட வாசிப்பு, கற்றலை சமூகப் பயன்பாடாக மாற்றிவிடுவதை ஏற்கிறார்கள். மவுன வாசிப்பிற்கு இணையான மனவளப் பயிற்சி என்பது மனித குலத்திற்கு சாத்தியமில்லை. வாசிப்பு ஸ்கின்னரின் வலுவூட்டி கோட்பாட்டையும், செயல்படு ஆக்கநிலை நிறுத்தத்தையும், பாவ்லவின் ஆக்கநிலை நிறுத்தத்தின் ஐந்து விதிகளையும் கூட உள்ளடக்கிய உலகளாவிய செயல்பாடு என நிரூபிக்க முடியும்….

Read More
நேர்காணல் 

இந்தியக் கல்வியமைப்பு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமான அமைப்பு!

-வே. வசந்திதேவி சந்திப்பு : ஜி.செல்வா வே.வசந்திதேவி 1938ஆம் ஆண்டில் பிறந்தவர். சொந்த ஊர் திண்டுக்கல். வரலாற்றில் முதுகலைப் பட்டமும்  பிஎச்.டி. பட்டமும் பெற்றவர். கல்லூரிப் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1998 வரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார். 2002 முதல் 2005 வரை தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவியாகப் பணியாற்றினார். தற்போது மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவராக உள்ளார். புத்தகம் பேசுது இதழுக்காக சமகாலக் கல்வி நிலை குறித்து அவருடன் நிகழ்த்திய உரையாடலிலிருந்து…. நாங்கள் சுவாசித்த காற்றிலேயே Radicalism இருந்தது… அது மார்க்சியம் என்றோ, இடதுசாரி சித்தாந்தம் என்றோ சொல்ல முடியாது. ஆனால், ஜனநாயகம், சமத்துவம், ஏழ்மை ஒழிப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, மானூட விடுதலை இவற்றிலெல்லாம் பெரும் நம்பிக்கை இருந்தது… நேருவின் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை இருந்தது….

Read More