You are here

மீண்டெழும் மறுவாசிப்புகள் 10 : ஹஸ்தினாபுரத்தின் காற்றுகள்

ச.சுப்பாராவ்     இதுவரை எழுதப்பட்ட மறுவாசிப்புகள் பெரும்பாலும் பாரதத்தின் முக்கிய மாந்தர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றன. அதுவும் பெண் பாத்திரத்தின் வழியான மறுவாசிப்பு என்றால் பாஞ்சாலியைத் தவிர வேறு யாரும் படைப்பாளிகளின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனாலும், அந்த மஹாபாரதத்தில்தான் எத்தனை எத்தனை பெண்கள்! எல்லா வர்ணத்தைச் சேர்ந்த பெண்களும் வருகிறார்கள். எல்லோருக்கும் விதவிதமான துயரங்கள்! ஒருபக்கம் தான் நினைத்ததைச் சாதித்துக் காட்டியவளாக கம்பீரமாக உலா வரும் அதே பாத்திரத்தின் மறுபக்கத்தைப் பார்த்தால், அவள் வெளியே சொல்லாத சோகம் அவளது சாதனைக்கு, சந்தோஷத்திற்கு, வெற்றிக்கு,     இணையாக ஓடிக்கொண்டே இருக்கும். வானுலகிலிருந்து பூவுலகிற்கு வந்த கங்கையானாலும் சரி, மீனவ இனப் பெண்ணாகப் பிறந்து குருவம்சத்தின் பட்டத்தரசியான சத்யவதியானாலும் சரி; வெளியில் சொல்ல முடியாத துக்கம்தான் அவர்கள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அது இன்று ஒரு படைப்பாளியின் கண்களில் பட்டு…

Read More
நூல் அறிமுகம் 

மிக மிக பிற்படுத்தப்பட்டோருக்கான குரல்!!

சாதி – அரசியல் அதிகாரம் நூலை முன்வைத்து ஓர் விவாதம் அ.பகத்சிங்     சாதியம்குறித்த விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. சாதியின் தோற்றம், வரலாறு குறித்து அறுதியிட்ட பொது ஆய்வு முடிவுகள் ஏதும் எட்டப்படாத சூழலில்தான் சாதியத்திற்கு எதிரான கருத்தியல்களும், கள செயல்பாடுகளும் பல்வேறு சித்தாந்த பின்புலத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. சாதி ஒழிப்பு என்ற நெடிய இலக்கை அடைவதற்கு முன்னால் சாதியத்தால் வீழ்ச்சியுற்ற பல்வேறு சமூகப் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மேம்பாட்டிற்காகவும் பலவேறு கருத்தியல்களும், போராட்டவடிவங்களும் முன்வைக்கப்படுகிறது. ஒடுக்குமுறைக்கு உட்பட்ட பல்வேறு சாதிய சமூகங்களின் மேம்பாட்டிற்கான கருத்தியலை முன்வைத்து பல நூல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. அவ்வகையில் தமிழகத்தில் சமூக-பொருளாதார-அரசியல் ரீதியில் பின்னடைவில் உள்ள சில சாதிகளை முன்வைத்து எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் எழுதியுள்ள நூல் ”சாதி- அரசியல், அதிகாரம்”. இந்நூல் முன்வைக்கும்…

Read More
கல்வி புதிய கொள்கைக் கலவை 

கல்வி – புதிய கொள்கைக் கலவை – 3: படிப்பு, வேலை, தொழில்

ராமானுஜம் 1. இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில் ‘மெஹருன்னிசாவை ராக்கெட் ஏற்ற வேண்டும்’ என்று எழுதியிருந்ததற்கு ஒரு நண்பர் எதிர்க் கருத்து தெரிவித்துள்ளார். “இம்மாதிரி ஒவ்வொரு குழந்தையின் கனவுகளையும் நம்மால் நனவாக்க முடியுமா, வேண்டுமா? ஒவ்வொருவரும் பிற்காலத்தில் ஏதோ வேலை, தொழில் செய்வார்கள், அது என்ன என்று இன்றே கண்டறிந்து பள்ளியில் அதற்கான தயாரிப்பைச் செய்ய முடியுமா? இதெல்லாம் போகாத ஊருக்கு வழி தேடுவதுதான்” – என்று அவர் சொல்லவில்லை. ஆனால் என் மனம் நோகக் கூடாது என்று பல பாராட்டுகளுடன் பெரும்பாலும் இதைத்தான் அவர் சொல்கிறார். இது மிகவும் நியாயமான விமர்சனம் என்று நான் கருதுகிறேன். கடந்த இதழில் இக் கருத்தின் மறுபுறமாக கல்வி மீதான வேறொரு விமர்சனத்தையும் முன்வைத்திருந்தேன். “படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை”, “பள்ளிக் கல்வியும் கல்லூரிக் கல்வியும் எந்த…

Read More
ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

சமகாலத்தின் தகிக்கும் எதார்த்தம்…

சம்சுதீன் ஹீரா கேள்விகள்: ச.மதுசூதன் சம்சுதீன் (36) என்பது அவருடைய இயற்பெயர் , ஹீரா என்பது அவரது செல்லப்பெயர். (ஹீரா என்றால் உருது மொழியில் வைரம் என்று பொருள்). படைப்புகளுக்காக இரண்டு பெயர்களையும் சேர்த்து சம்சுதீன் ஹீரா. சொந்த ஊர் திருப்பூர். திருப்பூர் க.சு.செ அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு (கணிதம் அறிவியல்) தேர்ச்சி பெற்று பள்ளியில் நான்காவது மதிப்பெண் பெற்றிருந்தும் மேற்கொண்டு படிக்க அப்போதைய குடும்பச் சூழல் அவ்வாய்ப்பை அவருக்கு வழங்கவில்லை. கதவு கிரில், டையிங், பிரிண்டிங் இயந்திர பாகங்கள் தயாரிக்கும் பட்டறைக்கு வேலைக்குச் சென்றதால், அப்போது பிடித்த சுத்தியல் தான் இப்போது அவரை இடதுசாரியாக இயக்கிக் கொண்டிருக்கிறது. தற்சமயம் ‘ஹீரா எஞ்சினியரிங்’ என்கிற பெயரில் எட்டாண்டுகளாக ஒர்க் ஷாப்  வைத்து நடத்திக்கொண்டு வருகிறார் என்பதோடு, கடந்த பத்தாண்டுகளாக அவர் வசிக்கக்கூடிய பகுதியில் இருக்கும் …

Read More

மகாத்மாவைக் கொன்ற அதே தோட்டாக்கள்…

ஆதிக்க மதங்களின் புகழ்மிக்க அணுகுமுறை ஆயுதங்களாக கருத்து உரிமையை நிலை தடுமாற வைப்பது… நேரடியாகச் சொல்வதானால் முடித்து வைப்பது – நோம் சாம்ஸ்கி (ஐ.நா.உரை) மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரவச்செய்து ஒட்டச் சுரண்டும் அமைப்பாக மதம் இருக்கிறது. அதன் கையில் அதிகாரம் ஆயுதமாய்ப் புரளும்போது, வரலாறு ரத்தக்கறை படிந்ததாக ஆகிறது. பழைய சிலுவைப் போர்களிலிருந்து ஹிட்லரின் யூதப் பேரழிவுவரை அதுவே வரலாறாகி – சாத்தான்களே வேதம் ஓதுகின்றனர் எனும் பிரபல முதுமொழியாகி சமூகத்தை சிதைக்கிறது. இந்தியாவின் இதயம் ‘மதசார்பின்மை’ என்று தனது மகளுக்குக் கடிதமாக எழுதினார் ஜவஹர்லால் நேரு. ஆனால் காந்தியைக் கொலை செய்த அதே தோட்டாக்கள் இன்று வீறுகொண்டு எழுவது இந்திய மதசார்பின்மைக் கொள்கைக்கு விடப்பட்டுள்ள பெரியசவால். தன்னை விமர்சித்த அறிவுஜீவிகளை ஓசையற்ற மரணப் படுக்கையில் தள்ளிய மனித ரத்த வேட்டையாளனான ஹிட்லரின் மறுநிகழ்வு போலவே…

Read More
நூல் அறிமுகம் 

அறிவதும் எழுதுவதும்

சா. கந்தசாமி இந்த  83 ஆண்டுகளை நான் புரிந்துகொள்ளும் முயற்சியில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டவை. இவை படிப்போருக்கு ரசமாகவும் இருந்தது, நம் காலத்தையே புரிந்துகொள்வது எவ்வளவு கடினமானது என்று நினைக்க வைத்தால் என் முயற்சி பயனில்லாமல் போகாது’ என்று அசோகமித்திரன் குறிப்புடன் வெளிவந்து இருக்கும் புத்தகம் ‘நடைவெளிப் பயணம்’. நடைவெளிப் பயணம் 83-வது வயதில் எழுதப்பட்டதாகக் குறிப்பு ஒன்று இருக்கிறது. எழுத்து என்பது வயது சம்பந்தப்பட்டது இல்லை. இளம்வயதில் நன்றாக எழுதியவர்கள் வயதாக வயதாக ஆற்றல் குன்றி, அறிவு மங்கி எழுதி இருப்பதும், இளம்வயதில் தட்டுத்தடுமாறி, எழுதி எழுதி தன் எழுத்தை மேலாக, தரமாக எழுத்தாக மாற்றிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அசோகமித்திரன் இந்த இரண்டிலும் இல்லை. அவர் ஆரம்ப காலத்தில் இருந்தே தரம் என்றும் மேலான தரத்திலும், சுவாரசியமாகவும் படிக்கத்தக்க விதமாகவும் எழுதி வருகிறார் என்பதற்கு நடைவெளிப் பயணம்…

Read More
நூல் அறிமுகம் 

வாசித்ததில் யோசித்தது

ஆயிஷா இரா நடராசன் 1.குழந்தைமை: புதிரும் அற்புதமும்                 மரியா மாண்டசொரி            தமிழில்: சி.ந.வைத்தீஸ்வரன்   சாளரம் இத்தாலியக் கல்வியாளர் மரியா மாண்டசொரியின் பிரபலமான The Secrets of Childhood நூல் தமிழில் சக்தி காரியாலயம் மூலம் வைத்தீஸ்வரன் (இந்தியா வந்தபோது மேடம் மாண்டசொரியோடு உடன் பணியாற்றியவர்) தமிழாக்கம் செய்து 1949ல் வெளிவந்தது. மறுபதிப்பு இது. கல்வியில் புரளும் யாவரும் கற்கவேண்டிய அறிய புத்தகம். நமது தனியார் ஆங்கில பள்ளிகள் பல மாண்டசொரி முறைபடி நடப்பதாக விளம்பரம் செய்கின்றன. அது மோசடி என்பதை இதை வாசித்தால் அறியலாம். 2.குழந்தைகளுக்கான பாட்டு கதை நாடகம்              தொ.வ.கீதா  /  கோ.பழனி, தாரா புக்ஸ் தாய்மொழியில் கற்றலை சரளமாக்கிட, குழந்தைகளின் சொல்வளத்தை அதிகரித்து கற்பனை சக்தியை ஆழமாக்கும் சிறந்த முயற்சி. களஆய்வு செய்து சேகரித்த படைப்புகள்…

Read More
மற்றவை 

தமிழும் மலையாளமும் நேருக்கு நேர்

தொகுப்பு: ஜெயஸ்ரீ இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மூன்றாம்தர எழுத்தாளர்களையும் நாமறிவோம். தொப்புள் கொடி உறவுள்ள தமிழின் இலக்கியச் சலனங்களைப் பற்றியோ, கன்னடத்தின் எழுத்து முறைகளையோ நாம் அறிவதில்லை. தெலுங்கின் 5 எழுத்தாளர்களின் பெயர் சொல்ல முடியுமா என்று கேட்டாலும் தெரியாது. இது பெரியதொரு குறைபாடுதான். இலக்கியத்தின், திரைமொழியின், இதர கலைகளின் தமிழ்ப் பார்வைகள் என்ன? அவற்றுடனான மலையாள உறவுகள் எவ்வளவு திடமானது. ‘சந்திரிகா’ ஓணப் பதிப்பிற்காக தமிழ் – மலையாள எழுத்தாளர்கள், சினிமா பிரபலங்கள் திருவண்ணமலையில் பவா செல்லதுரையின் வீட்டில் ஒருங்கிணைந்தனர். பிரபல திரைப்பட இயக்குநர் மிஷ்கின், தமிழ்-மலையாள எழுத்தாளர் ஷாஜி சென்னை, மொழிபெயர்ப்பாளர்களான     கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, தமிழின் இளம் எழுத்தாளன் ராஜகோபால், திரைப்பட செயற்பாட்டாளன் தமிழ் ஸ்டூடியோ அருண், பிரபல தமிழ் இலக்கியவாதி பவா செல்லதுரை, சிஹாபுதீன் பொய்த்தும்கடவு என்று இவர்கள் உரையாடலில் பங்கேற்றனர்….

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

படிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள்…

பேரா.சோ.மோகனா மனிதனின்  ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற போது, தயங்காமல்..புத்தகம் என்று சொன்னாராம்” இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.. “கரண்டியைப் பிடுங்கிவிட்டு , பெண்களின் கையில் புத்தகத்தைக் கொடுங்கள்” என்றார் வெண்தாடி வேந்தரான பெரியார். படிக்காத பாமரனாய்ப் பிறந்து. உலகம் போற்றும்,நடிகனாக ,  உலகை சிரிப்புக்கடலில் மூழ்கடித்த , உலகிலேயே அதிகமாய் ஊதியம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின்,             ”ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்..!” ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் மிகச் சிறந்த பரிசு என்பது புத்தகம் மட்டுமே” ..வின்ஸ்டன் சர்ச்சில்.. அதைவிட இன்னும் முக்கியமானது.. “இருபது வயதோ எண்பது வயதோ கற்பதை நிறுத்துபவன் வயோதிகன்; கற்றுக்கொண்டே இருப்பவனே இளமையானவன். வாழ்வின் முக்கிய குறிக்கோள் மனதை இளமையாக வைத்திருப்பதுதான்.” ஹென்றி ஃபோர்ட்….

Read More
கல்வி புதிய கொள்கைக் கலவை 

மையத்தில் ஒரு முக்கோணம்

ராமானுஜம் படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பரோட்டாவுக்கு மாவு பிசைந்து கொண்டிருக்கும் காட்சி. அழுத்தி நிதானமாக மாவைக் கைகள் பிசைகின்றன. மாவு உருண்டையை அழுத்திப் பிசையும்போது காமிரா அருகே நெருங்க ‘க்ளோஸ் அப்’பில் காட்டுகிறது. அது ஒரு மனிதமூளையாகவும் பரோட்டா மாவாகவும் மாறி மாறித் தெரிகிறது. நம் மனம் அதற்குப் பழகும் போது, கைகள் மாவை நீண்ட குழாய் போல உருட்டிப் பிசைகின்றன. அடுத்த கணம் கத்தி வைத்து அதைச் சிறிய உருளைகளாக வெட்டும்போது, நம் மனம் பெரும் அதிர்ச்சி அடைகிறது. மூளையைப் பிசைந்து வெட்டினால் மனம் தாங்குமா? இது ஒரு படக் காட்சி. ஐஐடி மும்பையில் பணிபுரியும் நண்பர் பேராசிரியர் ராஜா மோஹந்தி 25 வருடங்கள் முன் எடுத்த குறும்படம். “எச்சரிகையாயிரு குழந்தாய், அவர்கள் உன் மனத்தைத் திருடுகிறார்கள்!” என்று பள்ளிக் கல்வி குறித்து எடுத்த…

Read More