ஒரு வீரமகளின் பேத்தி வீரமகள் மைதிலி-வே. மீனாட்சிசுந்தரம்
தோழர் மைதிலியின் குடும்பம் அறிவியலை மக்களிடையே கொண்டு செல்லும் ஆரம்ப பள்ளி எனலாம். அவ்வாறு குடும்பம் அமைய பெரும் பங்காற்றியது மைதிலி எனலாம் மைதிலியின் பாட்டி சுப்பலட்சுமியின் வாழ்க்கையை தாய் சொல்லி கேட்டதாலேயே இந்த ஆற்றலை இவர் பெற்றார் என்றே கூறலாம்.
பாட்டி மறைந்த பிறகே அவர் விட்டுச் சென்ற டைரிகுறிப்புகளை பார்க்க நேரிடுகிறது இவரது பாட்டிக்கு 11வயதில் திருமணம், 14 வயதில் முதல் குழந்தை அடுத்தடுத்து பெற்றகுழந்தைகள் மரணம் மீதம் இருந்தது மைதிலியின் தாய்மட்டுமே மகளை படிக்கவைக்க சென்னை வருகிறார். விடுதலை இயக்கத்திலே பங்கு பெறுகிறார் பாரதியார்முதல் பல விடுதலை தலைவர்களை சந்திக்கிறார் பல்கலை கழக நூலகத்தை பயன்படுத்தி ஏராளமாக படிக்கிறார் பின் நாளில் மவுனமாகிவிடுகிறார்.
வீரமும், கவிதைகளும் நிறைந்த டைரி குறிப்புகளை பின்னர் மைதிலி புத்தகமாக வெளியிடுகிறார். பிராமண சமூகத்தில் விதவை படுகிற அவமானம் பற்றி இந்த டைரி பேசுகிறது. இவரது பாட்டி இது பற்றி குறிப்பிடுவது ஒரு சமூக வாழ்க்கையை சித்தரித்துவிடுகிறது. சோர்வு தட்டும் பொழுதெல்லாம் பாரதி மற்றும் தாகூர் கவிதைவரிகளை நாடிச் செல்வதாக வரிகளை குறிப்பிடுகிறார் பாட்டியின் பெட்டியில் டைரி மட்டுமல்ல அன்னாலூயிஸ்ஸ்டராங் எழுதிய ரெட் ஸ்டார் ஓவர் சைனா என்ற புத்தகமும் இருந்தது. இத்தகைய பாட்டியின் பேத்தியாக மைதிலி திகழ்ந்தார்
1960 – 1965 வரை அமெரிக்காவில் படிக்க சென்ற மைதிலி படிப்பை முடித்துவிட்டு ஒரு வேலையில் அமர்கிறவர் அதைவிட்டு ஐ.நா வின் காலனியமிச்ச சொச்சங்களை அகற்றும் குழுவில் பணியில் சேர்ந்தார். இவருடைய ஆற்றலுக்கு அந்தப்பணியில் தொடர்ந்திருந்தால் ஐ. நாவின் உயர்பதவி பெற்று புகழும் சேர்ந்திருக்கும். இவர் பணிபுரிந்த துறை ஏகாதிபத்தியவாதிகள் எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை அறிகிற இடம். அதிலும் இந்தியாவின் நடுநிலை கொள்கையை கைவிடச் செய்ய இந்திய அரசியல்வாதிகளுக்கு, சலுகைகள் கொடுப்பது, திட்டமிட்ட பொருளாதாரத்தை கைவிடச் செய்ய உயர்பதவிலிருப்பவர்களை தயார் செய்வது அமெரிக்க தூதரக அதிகாரிகள் எடுக்கிற முயற்சிகளை அறிய நேர்ந்தது. பாட்டியின் வாழ்க்கையால் பெற்ற ஞானம் அங்கு பணியில் தொடர அவரது மனது ஏற்கவில்லை. இந்திய செல்ல முடிவெடுத்து சென்னை திரும்பினார். வெண்மணி தீ அவரை மார்க்சிஸ்ட் ஆக்கியது. அவரது முதல் பணியாக வெண்மணி கொடுமையை உலகறியச் செய்ததாகும்.
1970ல்லிருந்து 1994வரை சென்னை தொழிற்சங்க இயக்கத்திலே சக போராளியாக நின்றார், 1967ல்லிருந்து, 1994 வரை தொழிற்சங்க இயக்கம் புதிய பரிமாணம் பெற்று ஆதரவு இயக்கமாக தொழிலாளர்கள் ஒன்றினைந்த காலமாகும், அதற்கு களப்பணி ஆற்றியது மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னைமாவட்ட குழுவாகும் தொழிலகத்தை தாண்டிய இந்த இயக்கம் வளர ஏராளமான வர்க்க உணர்வு பெற்றவர்கள் தேவை அதோடு உலக நடப்பு நாட்டு நடப்பு. உள்ளூர் நடப்பு அவைகளுக்கிடையே உள்ள தொடர்பு தெறிந்தவர்கள் சிலராவது வேண்டும். ஆவேசமாக பேசினால் போதாது. உறுதியான போராட்டத்திற்கு அறிவியல் தத்துவ பார்வை தேவை அந்த பார்வை கொண்ட சிலரில் ஒருவராக கிளர்ச்சி பிரச்சாரகர்களில் ஒருவராக மைதிலி இருந்தார். அவரது பேச்சு ஆத்திரமூட்டாத அறிவிற்கு விருந்தாகும் அதிலே எள்ளல் இருக்கும் ஆவடி டாங்க் பாக்டரி முதல் எண்ணூர் தொழிலகங்கள் வரை அவரது பேச்சு பரவும். எதை எடுத்தாலும் நேர்த்தியாக செய்யவிரும்புவார். தன்னை முன் நிறுத்தாமல் கூட்டாக செயல்படுவார்,
ஜனநாயக மதார்சங்கத்தை தமிழ் மண்ணில் நிறுவிட முதல்பங்களித்தவர். ஒரு கட்சியின் வாலாக ஆக்காமல் பெண்விடுதலை, சமத்துவம் இவைகளை இலக்காக வைப்பதற்கு போராடியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டகுழுவின் போராட்டவரலாற்றில் மைதிலி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஒடுக்கபட்ட மக்கள் வாழ்கிற பகுதிகளில் கட்சி கட்டும் பணிக்கு முன்னுறிமை கொடுத்தார். குடிசைப்பகுதிகளில் குற்றங்களை கண்டுபிடிக்கிற சாக்கில் போலிசின் அத்து மீறிய செயலை மக்களின் கவனத்திற்கு கொண்டுவரத்தவறாதவர்.
பிரிக்கில்ன் சாலையிலிருக்கும் குடிசைப்பகுதியில் காவல்துறை புகுந்து பெண்களை அவமானப்படுத்தியதை கண்டித்து இயக்கம் நடத்த நேரடியாக சென்று தேவையான தகவல்களை சேகரித்தார். அன்றைய போலீஸ்கமிஷனரிடம் புகார் கொடுக்க சென்ற போது மக்களை பாதுகாப்பதற்காக போலீஸ் இல்லை, மக்களை பயமுறுத்துவே காவல்துறை என்று கூறி மனுவை அளித்தார். அவர் மைதிலி ஒருகளப் போராளி என்பதற்கு ஏராளமான நிகழ்வுகள் உண்டு.
அவர் சிறந்த மார்க்சிஸ்ட் சொல்லும் செயலும் ஒன்றினைந்த சிறந்த களப்பணியாளர் சிறந்த ஜர்னலிஸ்ட் அவரது எழுத்துக்களால் நம்மோடு வாழ்கிறார். l