ஆயிஷா நடராசனால் எழுதப்பட்டுள்ள அறிவியல் தேசம் நூல் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையல்ல. பெரியவர்களும் அறிந்திராத பல்வேறு Science Data தரப்பட்டுள்ளது இந்தபுத்தகத்தின் தனிச்சிறப்பு.
நம்மைப் போன்றவர்கள் ரயில் பயணம் மேற்கொள்ளும்போது கவலைப்படும் ஒரு விஷயம் கீழ்படுக்கை, Seat No…. இதைத்தாண்டி நம் மூளைக்குள் ரயில் செல்லவில்லை. குழந்தைகள் மறந்துபோன ஒன்றாக ரயில் சேவை சமீபகாலமாக கொரானா மூலம் மாறியுள்ளது. எனினும் ரயில் பயணத்திற்கான டிக்கெட் (இந்த புத்தகம்தான்) NO TTR, நீங்களே ரயிலுக்கு பாதுகாவலன் என்ற அறிமுகத்துடன் கீழடி, மொகஞ்சதாரோ நாகரீகம் சிந்து சமவெளிவரை நாம் உணர்ந்துள்ள விஷயங்களை ஆசிரியர் இணைத்திருப்பது பாராட்டு அம்சமாகும். திப்புவின் போர் அறிந்த நமக்கு அவரது வானியல் அறிவு தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வுியடன் எத்துனை வகை கரிய பட்டாகிலன் அவர்கள் வாசித்த புத்தகம் வரை நம்மை (வாசகரை) யோசிக்க வைத்துள்ளது இந்த புத்தகம். JRD Tata 1932இல் துவங்கிய Science அறிவு பற்றிய தகவல், முதல் ISRO அமைப்பின் பிரம்மாண்டம், Sputnik உள்ளிட்ட வி்ண்கலன்கள் பற்றிய நோக்கம் செயல்பாடு ஆகியவற்றை எளிதில் உணரச் செய்துள்ள புத்தகம். இன்று செயற்கை கோள்களால் 26a என்ற நிலையை நாம் எட்டியுள்ளது நமது தேச சிறப்பு. வானியல் அறிவு போர் காலத்தில் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்ட விதம், முதல் உலகப்போருக்கு முன்பே நாம் இதில் கைதேர்ந்து உள்ள ரகசியம், சீர்குலைவு வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட கண்ணிவெடிகளை செயலிழக்கச் செய்ய நாம் கடைபிடித்த அணுகுமுறை ஆகியவை விவரிக்கப்பட்டுள்ள விதம் நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது. அனாஸ்திரா, விஜயந்தா, திவ்ய திருஷ்டி, புரணி, ராஜேந்திரா, அஜயா போன்ற வாசகங்களை கண்டுபிடித்தலும் அதில் அடங்கியுள்ள இராணுவ பெருமைகள் பற்றி நூலாசிரியர் சொல்லியிருப்பதும் புதிய முறை மட்டுமல்ல. சிறப்பான முறையாகும்.
நிலவியல் அறிவியல் நாம் எத்தனை தூரம் முன்னேறியுள்ளோம் என்பதை ஜார்கண்ட், ஹிமாச்சலப் பிரதேச பகுதிகளில் உற்பத்தி உருவாக்கப் பகுதிகளில் நம் தன்மையை உணர முடிந்தது.
ரயில்தேசத்தில் பயணித்த குழந்தைகளுக்கு மெருகூட்டப்பட்ட வகையில் தலைமையேற்று நடத்திய பிரபா டீச்சர் மறக்க இயலாத பெயராக நூலில் அமைந்துள்ளது சிறப்பு.
பல்வேறு மாநிலங்கள், குஜராத், பஞ்சாப், ஹரியானா, உ.பி, தமிழகம் போன்றவைகளில் உள்ள விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை நூலில் வாசிக்க செய்த முறை நூலின் தனிச்சிறப்பு.
காசு பணம் துட்டு அறிவியல் என்ற சொற்றொடர் மூலம் நம் பணம் அச்சாகும் அறிவியல் விஸ்வஸ்வரய்யா, மேக்நாத் சாகா, ஜி டி நாயுடு உள்ளிட்ட ஆளுமைகள் பற்றிய வரலாறு தரப்பட்டுள்ளதும் சிறப்பு.
ரயில்பெட்டியில் விளம்பரம் என்ற வியாபார சிந்தனை உள்ள தேசத்தில், அறிவியல் தேசத்தில் ரயிலில் விஞ்ஞானிகளின் வரலாறு சொல்லப்பட்டவிதம் அதுவஜம் தபோல்கர், நம்மாழ்வார் என்ற இயற்கை விஞ்ஞானி உட்பட அனைவரையும் கொண்டு வந்திருப்பது நமக்கு சமூக சிந்தனை அவசியம் என்பதனை உணர்த்துகிறது.
வெற்றிநடை போடும் ரயில் (3மாதம் 2 வாரம்) இயற்கை சீரழிக்கப்பட்டு உள்ளதனையும் சுட்டிக்காட்டி மூட நம்பிக்கைகளை எதிர்த்து விஞ்ஞான சிந்தனையை அனைவரிடத்தில் கொண்டு செல்வது ரயிலின் பணி என்று முடித்துள்ளது நம்மை வியக்க வைக்கும் உத்தி. நம் தேசம் விஞ்ஞான மேன்மையை சமூக உணர்வுடன் உயர்த்திப்பிடிக்கும் அறிவியல் தேசம் என்பதனையும் இது ஆன்மீக தேசம் என்பது பொய்புரட்டு என்பதையும் உணர்த்துகிறது என்பதே நூலின் சிறப்பு.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்புடன் கொண்டு வந்துள்ள புத்தகம் இது. அனைவரும் வாசிக்க வேண்டியதும் கூட.
previous post