முன்னத்தி – அ.ஜெகநாதன் மதுரை
ஜான் பாப்டிஸ் திரிங்கால் என அழைக்கப்படும் சேசு சபை துறவி வத்திராயிருப்பு பள்ளத்தாக்கில் உள்ள புதுப்பட்டி எனும் கிராமத்திற்கு 1875-ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். புதுப்பட்டி கிராமத்திற்கு வந்தவர் சமயப் பரப்புரையோடு எழுத்து மரபை உருவாக்குதலிலும்ஈடுபட்டார். ஏற்கனவே வீரமாமுனிவர் எழுதிய எனும் வேதியர் ஒழுக்கம்இ ஞான உணர்த்துதல் நூல்களை லத்தீனில் மொழிபெயர்த்திருந்தார். புதுப்பட்டியில் நான்கு நூல்கள் எழுதினார். அந்நூல்களுள் முக்கியமானது பைபிள் மொழிபெயர்ப்பு. அதுவரை கத்தோலிக்கத் திருச்சபையில் பைபிளின் புதிய ஏற்பாட்டு பகுதி ஒரு முறைதான் மொழிபெயர்க்கப்பட்டது. திரிங்காலின் மொழிபெயர்ப்பு இரண்டாவதாகும். இம்மொழிபெயர்ப்புக்கு மிக்கேல் என்னும் சந்நியாசி உதவி செய்தார். திரிங்கால் சேசு சபையில் சேர்ந்த 50-ஆம் வருடத்தில் பைபிளின் புதிய ஏற்பாடு மொழிபெயர்ப்பு 1890-ஆம் ஆண்டு வெளிவந்தது.
வ. புதுப்பட்டியின் அறிவு மரபின் முன்னத்தியான திரிங்காலின் தமிழக வரலாற்றை அதே ஊரைச் சேர்ந்த பணியாளர் மாற்கு தற்போது நாவலாக எழுதியுள்ளார். இந்தாண்டு மாற்கு அவர்கள் சேசு சபையில் சேர்ந்த 50-ஆவது ஆண்டாகும்.
தமிழ் இலக்கிய உலகில் மாற்குவை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லைதான். யாத்திரை எனும் நாவல் வழி பலரின் கவனத்தை ஈர்த்த மாற்கு அவர்கள், சுவர்கள்இ மறியல் முதலான நாவல்களையும் எழுதியுள்ளார். மாற்குவின் ~~உண்மையா…அது என்ன? || எனும் நூல் சேசு சபையால் 2011-இல் தடை செய்யப்பட்டது. சேசுசபையின் தடைக்குப் பின்னர் சுருண்டு முடங்கிவிடாமல் பாய்ந்தோடும் மானைப் போன்று ஐம்பேரியற்கை எனும் நாவலிற்கு அடுத்து “முன்னத்தி” எனும் பெரும் நாவல் ஒன்றைப் படைத்துள்ளார்.
I. தமிழில் வரலாற்று நாவல்களுக்கு தற்போது ஒருவகை மோகம் தென்படுகிறது. அதுவும் காலனிய காலத்து வரலாற்று நாவல்களுக்கு வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்கோட்டம், அஞ்ஞாடி, குடியேற்றம், கழுதைப்பாதை வரிசையில் முன்னத்தி நாவலும் இணைந்திருக்கிறது.
முன்னத்தி நாவல் வரலாற்று நாவல். சிந்தா வெக்கியா எனும் இத்தாலிய துறைமுகத்திலிருந்து திரிங்கால் பயணத்தை துவங்கியதில் இருந்து 1892-இல் மதுரையில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது வரையிலான 50 ஆண்டு வரலாறு இந்நாவலில் பயணப்படுகிறது. திரிங்காலை மையமாகக் கொண்டு சேசு சபையின் நான்கு நூற்றாண்டு வரலாறும் இந்நாவலில் உருண்டு வருகிறது. அதனோடே நான்கு நூற்றாண்டு சமூக வரலாற்றையும் இந்நாவல் அசைத்து நகர்கிறது.
முன்னத்தி நாவல் காலனிய மதப் பரப்புனர்களின் அக உளவியலை கவனத்தில நிறுத்தவில்லை. மாறாக காலனிய மதப்; பரப்புனர்களின் புறஉளவியலை அசைத்து நகர்கிறது. காலனிய மதப்; பரப்புநர்கள் இந்திய வெளியில் கற்றுக் கொண்ட பாடங்கள் அவர்களை பண்பாடு ஏற்றல் என்ற சொற்றொடரை உருவாக்க வைத்தது. குறிப்பாக இந்திய மண்ணுக்கேற்ற கிறித்தவம் என்பதில் காலனிய மதப்பரப்புநர்கள் கவனம் குவித்தனர். அது என்ன மண்ணுக்கேற்ற கிறித்தவம்? இந்திய மண்ணில் தொழில்பட்டு திரண்டிருக்கும் சாதியை அங்கீகரித்தல் என்பதைத்தான் அவர்கள் பண்பா;டு ஏற்றல் அல்லது மண்ணுக்கேற்ற கிறித்தவம் என்றனர். நொபிலியிலிருந்து இக்கோட்பாடு தொடர்ந்தது. என்றாலும் சாதியைக் கைவிடுதல் என்பதும் அவர்களுக்குள் பேசு பொருளாகின. பிராமணர்களை மதம்மாற்றுதல் என்;ற; நொபிலியின் கருத்துக்கு நேர் எதிராக பிராமணரல்லாதவர்களை மதம்மாற்றுதல் என்பதpற்காக பண்டார சாமிகளையும் அவர்கள் உற்பத்தி செய்தனர். கோட்பாட்டு ரீதியாக சாதியற்ற; என்ற அறிவுறுத்தலும் செயல்பாட்டு ரீதியிலான சாதியை ஏற்றல் என்ற செயல்பாடும் என்பதான முரணியக்க வழியில் தான் தமிழ்கிறிஸ்தவம் உருண்டு வந்திருப்பதை முன்னத்தி முன்வைக்கிறது.
சேசுசபையின் சாதியை ஏற்றல் ஓ சாதியை ஒதுக்குதல் என்ற முரண்பாட்டோடு சேசுசபையின் துயர நிலைகளையும் முன்னத்தி முன்வைக்கிறது. பதினாராம் நூற்றாண்டில் தமிழகத்திற்குள் தொழிற்பட்ட சேசு சபையினர் பெரும்பாலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் போர்ச்சுக்கல் அரசரோடு முரண்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் இம் முரண்பாடு நிகழவில்லை. உலகளாவிய அரசில் பல்வேறு அரசுகளோடு முரண்பட்டனர். இந்தியாவில் நொபிலியின்; பண்பாடு ஏற்றல், விலகல் எனும் முரண் நொபிலிக்குப்; பின்னரும் தொடர்;ந்தது. இதன் விளைவாக 1773-ஆம் ஆண்டு சேசுசபை உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டது.
1773-ஆம் ஆண்டு சேசு சபை தடை செய்யப்பட்ட போது, சேசு சபை குருக்கள் என்ன ஆனார்கள்? இந்தியப் பகுதியில் 127 சேசு சபையினர் பணியாற்றியுள்ளனர், அவர்களை போர்ச்சுக்கல் அரசு கைது செய்தது. அவர்களனைவரையும் சிறிய கப்பலில் ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி வைத்து லிஸ்பன் நகருக்கு நாடு கடத்தியது. பிணக்குவியலால் நிரப்பப்பட்ட கப்பலிலிருந்து24 பேர்கள் இறந்துள்ளார்கள். மீந்தமுள்ளவர்கள் லிஸ்பன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறனர். அமெரிக்காவிற்கு ஆட்டு மந்தையாக கடத்தப்பட்ட ஆப்ரோ அமெரிக்கர்களின் கதை இங்கிருந்து பெறப்பட்டிருக்குமோ?
II. சேசுசபையின்; தடைக்குப் பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரஞ்சுப் பகுதியில் இருந்து சேசுசபையினர் தமிழகம் வந்துள்ளனர். மதம் பரப்பும் போது பாதிரியார்கள் பலர் 42 வயதிற்குள் மரணத்துக்குட்பட்டனர். பெர்ராண்ட் எனும் சேசு சபை பாதிரியாரை கோவன் குருக்கள் என அழைக்கப்படும் கத்தோலிக்கப் பாதிரியார்களே விசம் வைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இவருக்கு முன்னர் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் வடபகுதியில் வேலை செய்த மோதுஇ எனும் பாதிரியாரை பிராமணர்கள் உணவில் நஞ்சை வைத்து கொன்றிருக்கிறார்கள். ராபார்ட் – தெ – நொபிலியை நாயக்க மன்னர் சிறையில் தள்ளிவிடுகிறார். வீரமாமுனிவர் நாயக்கர் மன்னருக்கும் நவாப்பிற்கும் இடையே நடைபெற்ற போருக்கிடையில் உழன்று சுழன்றுள்ளார். அருளானந்தர் எனும் சேசுசபை துறவியை சேதுபதி மன்னர் குழாம்; படுகொலை செய்துள்ளது. இவையனைத்தும்; நாவலில் விரவிப் படர்கிறது. இந்திய மண்ணில் நிகழ்ந்த இடையீடுகள் சில மட்டுமே பதிவாகியுள்ளன. அதைப் போன்று சொந்த நிலத்தில் இருந்து புறப்படும் போது உருவான மனக்கிளர்ச்சிகள், குடும்பம், உறவு, நண்பர்கள், பண்பாட்டு வெளிகள் குறித்தான நினைவுச் சிதறல்கள் போதுமானவாறு பதிவு செய்யப்படவில்லை. அத்தோடு புதிய நிலத்தின் அலங்கோலங்களால் உருவாக்கப்படும் பண்பாட்டு நினைவுகளும் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
சேசுசபையின் இரண்டாம் வருகையின் போது அவர்களுக்கு சாதி குறித்தான புரிதல்கள் இருந்திருக்கின்றன. தமிழக கிறிஸ்தவ அமைப்பு சாதியாய் சிக்குண்டிருந்ததையும் நேரடியாக கண்ணுற்றுள்ளனர். பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், எனும் கோட்பாட்டை உள்வாங்கி வந்த இரண்டாம் குழவினர் சட்டதிட்டத்தின்படி சாதியை மறுத்துள்ளனர். கோவில்கள் சாதியைப் பாதுகாக்கும் இடங்களாக இருக்கக்கூடாது என அறிவித்துள்ளனர். சேசுசபையின் அகில இந்தியத் தலைவர் சாதியோடு சமரசம் செய்யக்கூடாது என்ற உறுதி மொழியை ஒவ்வொரு சேசுசபையின் பாதிரியாரும் எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். ஆனால் தமிழக சேசு சபையினர் சாதியோடு சமரசம் செய்தனர். சாதியோடு சமரசம் செய்யமாட்டோம் என உறுதிமொழி எடுத்ததாக பொய் அறிக்கை கொடுத்திருக்கின்றனர். உச்சபட்சமாக 1845-இல் நாகப்பட்டிணத்தில் உருவாக்கப்பட்ட கல்லூரியில் பறையர்களை சேர்க்கக்கூடாது என தீர்மானமும் இயற்றியுள்ளனர். இவையனைத்தையும் முன்னத்தி நாவலில் மாற்கு மறைக்காமல் பதிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
III.
நாவலின் மையப்பாத்திரமான திரிங்கால் குறித்து இனிப் பார்க்கலாம். திரிங்காலின் தமிழக வருகையை பறையர்களோடு இணைப்பதில் முன்னத்தி முயல்கிறது. நாவலின் தொடக்கத்தில் திரிங்காலுக்கும் வண்டியோட்டி அந்தோணிக்குமான உரையாடலும்@ பாண்டிச்சேரியில் பெயர் தெரியாத படை வீரனுக்கும் திரிங்காலுக்குமான உரையாடல் மூலமாக பறையர்களின் கிறிஸ்தவ சூழல் உணர்த்தப்படுகிறது. இதனால் கிறித்தவப்; பறையர்களுக்காக சேவையாற்ற திரிங்கால முடிவு செய்கிறார். திரிங்கால் நாகபட்டிணத்தில் முதலில் தனது பணியை தொடங்குகிறார். நாகப்பட்டிணத்தில் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பி திரிங்கால் பறையர் குடிசைக்குச் செல்கிறார். வழக்குத் தமிழை பறையர்களிடமும், இலக்கணத் தமிழை நாகப்பட்டிணக் கல்லூரியின் தமிழ் பண்டிதரிடமும் கற்க முயற்சி செய்கிறார். பறைச் சேரியில் தங்கி பேச்சுத் தமிழை கற்கும் திரி;ங்காலின் பகுதி இந்நாவலின் ஆகச்சிறந்த படைப்பாகத்தின் ஒரு பகுதியாக மிளிர்கிறது.
நாகப்பட்டிணத்தில் இருந்து திருச்சிக்கு மாற்றலாகிறார் திரிங்கால். கெனோஸ் அவர்களின் வழிகாட்டுதலின் வழியாக பறையர் சிறுவர்களுக்கான மரியன்னை பள்ளியை ஏற்று நடத்துகிறார். அத்தோடு திருச்சி கண்டோன்மன்ட் கத்தோலிக்க படை வீரர்களைக்; கவனிக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இங்கு தான் இவர் சதிமாதாவாக்கப்பட்ட பெண்களின் துயர்மிகு வரிகளை வாசித்தறிகிறார். சேதுபதி மன்னர் இறப்புக்கு பின்னர் உடன்கட்டை ஏறிய 43 மனைவிகளின் துர்நாற்றம் பிடித்த வரலாற்று நிகழ்வுகளை முன்னத்தி நாவல் பதிவு செய்துள்ளது. கடித வரிகளின் மூலமாக மேலெழுந்து வந்த பெண்களின் பெரும் கூக்குரல் திரிங்காலை விதவைத் திருமணத்தை நடத்தி வைக்க முன்நகர்த்துகிறது. உடன்கட்டை பிரச்சனைக்கு உள் நுழைவதற்காக மாற்கால் பின்னப்பட்டிருக்கும் கற்பனை வடிவங்கள் இந்நாவலின் ~ மேஜிகல் ரியலிச;| வகையின் உச்ச வடிவமாகும்.
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக மதுரைக்கு திரிங்கால் வந்து சேர்கிறார். மதுரையில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இங்குதான் திரிங்காலின் முழுப்பரிணாமும் வெளிப்படுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான தனி மையம் ஒன்றை ஆரம்பித்தார். மதுரை வீதிகளில் தூக்கி வீசப்பட்ட நோயாளிகளுக்கான ஆதரவு மையத்தை உருவாக்கினார். சித்த மருந்தகம் ஒன்றையும் உருவாக்கினார். வழிப்போக்கர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் வழி சமைத்தார். இவையனைத்தும் ஒன்றொடொன்று தொடர்புகொண்டது. இதன் இறுதி எல்லை மதம் மாற்றுவதான்.; என்ற போதும் அதுவரை மதுரை மண்ணில் கைவிடப்பட்டவர்களின் அடைக்கல நிலம் ஒன்று இல்லாமல் இருந்ததை திரிங்கால் சமன் செய்தார்.
மதுரையின் முதல் நவீனப் பள்ளியை திரிங்கால் உருவாக்கினார். கூடவே விடுதியையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், அறிவியல், கணிதம் முதலான நவீன கல்வியை அறிமுகப்படுத்தியதோடு கால்பந்து முதலான நவீன விளையாட்டையும் அறிமுகப்படுத்தினார். இப்பள்ளியில் படித்த சந்தியாகு வாயிலாக கர்நாடக சங்கீதம் கத்தோலிக்க திருச்சபைக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மரியன்னை பள்ளிக்கு இருந்த போதும் பறையர்கள் அப்பள்ளியில் படிக்காதது திரிங்காலின் முரண்பாடா?
மதுரைப் பணியின் போதுதான் பங்கிற்கான சுதேச மூலதனத்தை உருவாக்கினார். சுதேச மூலதனம் நிலமாகவும், வண்டிப் பேட்டையாகவும் உருவெடுத்தது. சைவ ஃ வைணவ மடங்கள் நிலத்தின் வழியாகவே தங்களது பண்பாட்டு மேலாண்மையை நிலைநிறுத்தின;. இதனை அறிந்தோ அறியாமலோ திரிங்கால் விவசாய நிலத்தின் மூலதன வருமானத்தில் கவனம் குவித்தார். அதன் வாயிலாக மதுரைக்கு அருகே கொண்டமாரி கிராமத்தில் கணிசமான ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினார். அங்கிருந்து கிடைத்த மூலதனம் மதுரைப் பங்கை செழிப்பாக்கியது. அதைப் போன்று விருதுநகரிலும், உசிலம்பட்டியிலும் வணிகர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான பேட்டைகளை உருவாக்கினார். ~பேட்டை| எனும் வடிவம் நாடார்களிடமிருந்து திரிங்கால் பெற்றாரா?, அல்லது திரிங்காலிடமிருந்து நாடார் சாதி பெற்றதா?.
மதுரையில் தான் ஒற்றைச் கண் அருளப்பன், சவரி முத்து என்ற இரண்டு ஆளுமைகளைக் கண்டெடுத்தார் திரிங்கால். ஓற்றைக் கண் அருளப்பன் வாயிலாக கள்ளர் கிறித்தவம் உசிலம்பட்டி வட்டாரத்தில் உருவாக ஆரம்பித்தது. 1711-ஆம் ஆண்டில் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆரியபட்டியில் கேப்;பெல்லி எனும் சேசுசபை குரு ஒரு கோவிலைக் கட்டியுள்ளார். அதன் பின்னர் கள்ளர் கிறித்தவம் குறித்தான வரலாற்றுத் தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. இப்போது திரிங்காலால் கள்ள;ர் கிறித்தவம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. ஒற்றைக் கண் அருளுப்பனின் மகன் சவேரியார்; சுதேசக் குருவாக உருவாக்கப்பட்டார்.
சவரிமுத்து வாயிலாக விருதுநகர் மாவட்டத்தின் பறையர்கள் கிறிஸ்தவத்திற்குள் இழுக்கப்பட்டனர். வெள்ளுரில் வசித்த சவரிமுத்துவின் மதுரை வருகை திரிங்காலோடு இணைப்பை ஏற்படுத்தியது. மதுரையிலிருந்து சென்ற சவரிமுத்து வெள்ளுர் பறையர்களை கிறித்தவத்திற்கு ஆயத்தப்படுத்தினார்;. அவர் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தைத் தாண்டியும் இருந்த பறையர்கள், சாணார்கள், நாயுடுக்கள ;கொத்து கொத்தாக கிறித்தவம் புகுந்தனர். வெள்ளுர் பறையர்களை ஆதிக்கிறித்தவர்களாக கண்ட திரிங்கால் அவர்களுக்கு மிகப்பெரும் கோவிலைக் கட்டினார். ஆனால் பள்ளியை உருவாக்கவில்லை. ஒருவேளை ஆதிக்கிறித்தவர்களிடம் இருந்து விசுவாசத்தை மட்டும் திரிங்கால் எதிர்பார்த்தாரோ?
1871-ஆம் ஆண்டிலேயே வத்திராயிருப்பு பள்ளத்தாக்கு கிரமமான கான்சாபுரத்திற்கு திரிங்கால் வந்து சேர்ந்தார். கான்சாபுரத்தைச்; சுற்றிய பல ஊர்களுக்கு திரிங்கால் சென்றிருந்தாலும், வ.புதுப்பட்டி கிராமத்திற்கு 1875-ஆம் ஆண்டு தான் சென்றார். பிற ஊர்களில் மக்களோடு பிணைந்திருந்த கோவில் நிர்வாகம் புதுப்பட்டியில் மட்டும் விலகி இருந்தது. எட்டாண்டுகள் புதுப்பட்டியில் இருந்த திரிங்கால் அறிவுப்பரப்பில் நிலைகொள்ளும் எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இங்கிருந்து தான் செவல்பட்டி ஜமீன் எனும் மூர்க்;க மனிதரோடு மோதி பறையர்களை மீட்டார். சங்கரநாச்சியாபுரம் ஜமீனோடு ஊடறுத்;து சாணார்களைக் காப்பாற்றினார். திருவில்லிப்புத்தூரில் பள்ளி ஒன்றை உருவாக்கினார். புதுப்பட்டியிலும் பள்ளி மற்றும் விடுதியை உருவாக்கினார். ஆனால் புதுப்பட்டிப் பள்ளியில் தமிழையும் விவசாயத்தையும் முதன்மைப்படுத்தினார். மதுரை போன்ற நவீனப் பள்ளியை ஒதுக்கி, தமிழ், விவசாயம் முதலானவற்றை முதன்மைப்படுத்திய திரிங்காலின் பணி புனைவிற்குள் நிற்கவில்லை.
l