பேருந்துகளின் இரைச்சலிலும் குழந்தைகள் உறங்குகின்ற நடைபாதைகள் கொண்ட நாடு! அரணற்ற படித்துறையில் இழைத்த மஞ்சளை சிறுவர்கள் விழிமலர்த்த அக்குளில் பூசி நீச்சல் அடிக்கின்றனர் பெண்டிர் அவர்தம் மேனித் தகிப்பால் மீன்கள் மேலெழும்பும் வாவிகள் கொண்டது எம் ஊர்! ஏனோ என் தோழி கொண்டையும் நனையா குழாய்நீரில் ஆசைவைத்தாள் கொல்லை வாழையில் குருத்து இலை அசைகிறது காற்றிலும் கிழியலாம் விருந்து வந்தால் அறுபடலாம் காலத்தில் வந்தால் கறிசோறு சாப்பிடலாம்
previous post