ஹிந்தி மூலம்- வர்திகா நந்தா
தமிழில் -கிருஷாங்கினி
சிறைக்கு வெளியே சிறை
சிறைக்கு உள்ளேயும் சிறை
மேலும் அதற்கு உள்ளேயும்
மற்றுமொரு சிறை
வெளியில் இருப்பவர்கள்
அறிவதில்லை அவர்கள்
சிறையில் இருப்பதை
உள்ளிருப்பவன் யோசிக்கிறான்
இது மட்டுமே சிறை என
உண்மையிலேயே முழு
உலகமும் ஒரு சிறை
சிறைக்குள் அடைபட்ட மனிதர்கள்
சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மனிதன்
அவனல்ல, காவல்காரனால்
வலுவில் இழுத்துச் சென்ற
அப்படி ஒரு சிறையில்
நகரத்திலிருந்து எங்கோ தொலைவில்
இருக்கும் காவல்காரன்
அவனுக்கு நம்பிக்கை
வெளிப்புறம் இருந்து பார்க்கிறான்
ஒரு நொடியில் ஒளி குறைந்து
இருக்கும் நட்சத்திரங்கள்
அங்கு முடிவுறுகிறது
கர்வம் கொண்ட உலகத்தில் எல்லை
சிறையில் அடைபட்டிருக்கும் மனிதன்
அவனே அல்ல
வெளியில் இருக்கும் மனிதர்களுக்கு
எங்கே தெரியும்?
அந்த சிறைக்கு வெளியே
இன்னமும் பெரிய சிறைகள் பல
ஒளியிலிருந்து இருள் வரை
சிறைகளே, சிறைகளே
பெரும் பாதைகள்
உயர் கட்டிடங்கள்
தீபகற்பங்கள்,
தீவுகள்
பூகண்டங்கள் வரை
சுயநலம், பிரச்சாரம், பொருள் சார்
சிறைகள்
சிறையில் அடைபட்டிருக்கும் மனிதன்
அவனல்ல
ராணுவ தங்குமிடத்து நுழைந்துவிட்ட
அடைபட்டிருப்பவர்கள் அவர்கள்
இப்போதும் கூட
தானே உருவாக்கிய சிறையில்.
வாழ்க்கை கழிந்துவிட்டது
ஆனாலும் அதை அவன்
அறியக் கூட இல்லை.
சிறை வாழ்க்கை
உல்லாசம் கவலை இன்மை
எதையும் பிடுங்கிக்கொள்ள இயலாது
அந்த நம்பிக்கை
மேலும்
தன்னைத் தானே
புதுப்பித்துக் கொள்ளும்
இடமும் கூட
இருக்கலாம் ஒருவேளை சிறை
நுழைவாயிலின் வெளியே
விடப்பட்ட ஒலி நிறைந்த
சமுதாயத்திலிருந்து விலகி
தன்னைத்தானே பரிசோதித்துக் கொள்ள
அறிந்து கொள்ள ஆஸ்ரமமாகவும் கூட
இருக்கக் கூடும் சிறை
பூட்டுகள், பிரார்த்தனைகள், கருவிகள்
புதியதொரு எல்லை, புதியதொரு சொர்க்கம்
ஒரு சிறையினுள்ளேயும் இருக்கலாம்
பல மடங்கு
வெளியேவிட பெரும் நிம்மதி
அதிகமாக
சிறைப் பெண்
பெண் தன்னைத் தானே
நிரப்பிக் கொள்கிறாள்
வெற்றிடத்தை, ஈரமற்ற இடத்தை
வேறுயாருக்காகவோ
மனதில் உண்டாக்கிக்
கொண்ட பிளவை, மேலும்
வெண்நிற முடிக்குள்
ஒளித்துவைத்த துக்கத்தை
முதுமையோடு சொல்லாமலேயே
துக்கங்களை அழுத்திவைக்கும்
பழக்கம் உருவான பின்
தன் வலிமையைத் தானே
உருவாக்கிக் கொள்ளும்
பெண்ணே-
அவளே முழுமையான
பெண்ணாகிறாள்.
சிந்தூரத்தின் நிறம்
துக்கம் கொண்ட பெண்ணின்
சிந்தூரத்தின் நிறம் இன்னும்
அடர்த்தியாக இருக்கிறது
அவளுடைய மார்பகங்களிலிருந்து
வெளியேறும் வெப்பமும்
கொழுந்துவிட்டு எரிகிறது
அதைப் போலவே
வலிமையற்ற சட்டங்கள்
வாங்கப்பட்ட போலீஸுகளின்
இடையே
துயரம் கொண்ட பெண்களோடு
பிரார்த்தனைகளின் சிறு மூட்டை
ஒன்றும் இருக்கிறது
வலிமையின் சில மந்திரங்கள்
சமுதாயத்தில் மறந்துவிட்ட சில
நிழல்கள்
இந்தப் பெண்களின் கசந்துவிட்ட
நெருக்கம்
மஞ்சள்படிந்த
தாள்கள்
முகத்தின் துயரத்தில்
கல்லின் கோடுகளும்
இணைந்துவிட்டிருக்கின்றன
துயரங்களை அனுபவிக்கும் முகங்கள்
இருக்கின்றன ஒன்று போலவே
துயரத்தைப் பொறுத்துக் கொள்ளும்
மனங்களும் இருக்கின்றன
ஒரேமாதிரியாக
இவர்கள் அனைவரும்
காத்திருக்கின்றனர் காலத்திற்காக.
நானே முழு உலகமும்
இப்போதெல்லாம் நான் பார்ப்பதில்லை
உலகத்தை நோக்கி
நானே முழு உலகம்
இதை அறிந்த பின்னால்
சுவருக்கு இப்புறமும் சிறை
அந்தப்பக்கமும் சிறை
அனைத்து திசைகளிலும்
சிறை மட்டுமே
மனத்தின் உள்ளே சிறை
உறவுகளின் இடையே சிறை
திறந்து விட்டேன் அந்தச் சிறையை
எனவே,
இப்போது நானே முழு உலகமும்
எங்கு
தேடல்கள் முடிந்துவிட்டனவோ
அங்கே தொடங்குகிறது
உலகம்.