- ஹெர்பர்ட் கிரெட்ஸ்மர் ( Herbert Kretzmer )
– தமிழில்: ரவிக்குமார்
கேட்கிறதா மக்களின் பாடல்?
வெகுண்ட மனிதர்கள் பாடும் பாடல்?
அடிமையாய் மீண்டும் ஆக மறுக்கும்
மக்களின் இசையில் மலர்ந்த பாடல்!
பறையின் துடிப்பு உன் இதயத் துடிப்பில் எதிரொலிக்கட்டும்
வாழ்க்கை புதிதாய்
நாளை தொடங்கட்டும்
எம் புனித யுத்தத்தில் இணைந்துகொள்வீர்களா?
யார் அந்த வலியவர் என்னோடு நிற்பவர்?
அரணுக்கு அப்பால் நீ பார்க்க ஏங்கும் உலகம் ஒன்று இருக்கிறதாமா?
அப்படியானால் போராட்டத்தில் இணை சுதந்திரமாய் வாழ அது உரிமையைக் கொடுக்கும்
கேட்கிறதா மக்களின் பாடல்?
வெகுண்ட மனிதர்கள் பாடும் பாடல்?
அடிமையாய் மீண்டும் ஆக மறுக்கும்
மக்களின் இசையில் மலர்ந்த பாடல்!
பறையின் துடிப்பு உன் இதயத் துடிப்பில் எதிரொலிக்கட்டும்
வாழ்க்கை புதிதாய்
நாளை தொடங்கட்டும்
கொடுக்க முடிந்த அனைத்தையும் வழங்கு
முன்னேறிச் செல்லட்டும் நமது பதாகை
வீழலாம் சிலபேர் வாழலாம் சிலபேர்
எழுந்து நிற்பாயா எதிர்கொள்வாயா?
தியாகிகளின் குருதியால் ஈரமாகட்டும்
ஃ ப்ரான்ஸ் நாட்டின் பசும்புல்வெளிகள்
கேட்கிறதா மக்களின் பாடல்?
வெகுண்ட மனிதர்கள் பாடும் பாடல்?
அடிமையாய் மீண்டும் ஆக மறுக்கும்
மக்களின் இசையில் மலர்ந்த பாடல்!
பறையின் துடிப்பு உன் இதயத் துடிப்பில் எதிரொலிக்கட்டும்
வாழ்க்கை புதிதாய்
நாளை தொடங்கட்டும்
( நண்பர் ஸ்ருதி சாகர் யாமுனன் கேட்டுக்கொண்டதறகாக 2014 இல் ஆங்கிலத்திலிருந்து நான் மொழிபெயர்த்த பாடல்)