- சந்துரு கவிதைகள்
- 1
அவர்கள்
அவர்களாய் இருந்தவரை
காடுகள்
அவர்களிடம் மட்டுமே இருந்தது…
கிளை பிரிந்த நாகரிக நதி
அவர்களின் மூலத்தை
சிதைத்திழுத்துப் போட்டதில்
அவர்கள் வேறொன்றின்
துயரத்தில் நிறுத்தப்பட்டார்கள்…
அவர்கள்
முக்காலத்துக்கும்
முந்தையவர்கள்…
துன்பத்தை தவிர
அனைத்து மகிழ்ச்சியையும்
கானகங்கள் அவர்களுக்கு
ககையளித்திருந்தது
அதில் தேவையைத்தவிர
சிறு துறும்பையும்
சிதைத்ததில்லை அவர்கள்…
குடியேற்ற நியாயங்கள்
அவர்களின் நிலங்களை புணர்ந்து
காடுகளின் இருளுக்குள் அவர்களை
கண்ணீருடன் விரட்டியது…
குடியேற்ற கூட்டங்கள்
அவர்கள் வசிப்பிடங்களின்
குரல்வளை நெறித்தது…
செவ்விந்தியர்களின்
பரந்த தோள்களை
இரக்கமின்றி வெட்டித்தின்று
பசியாறியது…
ஆஸ்திரேலிய பூர்வ குடிகளின்
நிலத்திலும் விலாவிலும்
குத்தீட்டிகளையும்
துப்பாக்கி ரவைகளையும்
செலுத்தியது …
ஆப்ரிக்க வனங்களில்
அடிமைகளை உற்பத்தி செய்தது…
இந்தியக்காடுகளில்
மனிதத்தடயமற்றவர்களாய்
மறுலித்து ஒதுக்கியது…
அடர் வனத்தில் திரிந்த
அரை நிர்வாணத்தினரின் மீது
பூமியெங்கும்
அடிமை நுகத்தடிகளை
மாட்டியதைத் தவிர
எதையும் செய்யவில்லையிந்த
மனித நாகரிகம்…
வேட்டைகள் தடைசெய்யப்பட்ட
கானகத்தில்
அவர்கள் இன்னமும்
கிழங்குகளைத்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்….
அதில் பூர்வத்தின் மகிழ்ச்சியயும்
சேர்ந்தே தேடுகிறார்கள்
கார்ப்பரேட்டுகள்
கால் பதித்த நிலங்களை
தூரத்தில் நின்று அச்சத்துடன்
ஒளிந்துகொண்டு பார்க்கிறார்கள்…
விரட்டப்பட்ட
அந்நிலத்திலிருந்து
தங்கள் முன்னோர்களின்
அழுகுரல்கள் அவர்களை
தேம்பி அழைக்கிறது…
அவர்கள் இப்போது
அவர்களாகவும் இல்லை
இவர்களாகவுமில்லை…
கேட்பாரற்று கைவிடப்பட்ட
சிறு தெய்வங்களைப்போல்
காடுகளின் மூலைகளில்
தொலைந்து கொண்டிருக்கிறார்கள்
அடையாளமற்றவர்களாய்
முத்திரை குத்தப்பட்ட
அவர்கள்தான்
ஆதியிலிருந்தே
இந்த பூமியின்
அனைத்துக்குமான
சொந்தமாய் இருந்தார்கள்…
- 2
- அசைந்தாடிய காலத்திற்கு முன்
வெட்டுக்கத்திகள் கோடாரிகளுடன்
பருத்த மரத்தினடியில் நிற்கிறேன்…
கிளையசைக்கும்
அரூபக் காற்றொன்று
ஆடைகளை உருவிச்செல்கிறது…
அது கைமறைக்கும்
எனது நிர்வாணத்தை
புள்ளியாய் தேக்கி
தந்தையின்
விந்தணுக்கூட்டத்தில் நிறுத்துகிறது…
தந்தையின் கம்பீர முகம்
தாத்தனின் விதைப்பையில்
ஒற்றைத்துளியாய்
மிதந்து ஒதுங்குகிறது…
பின்….
மூதாதைகளின்
மரபணுக்கூட்டங்களுக்கு அது
பின்னிய காட்டுக்கொடிகளைப்போல்
இழுத்துச் செல்கிறதென்னை…
மூதாதைகளின் உயிர்த்திரவம் நழுவி
தாய்மையின் கர்ப்ப வாசல்களில்
மனித வாசனையை
உற்பத்தி செய்யும் காலத்தை கடக்கிறேன்…
காடுகளின் இருள் நோக்கி
நடக்குமென் தடம்
குகை கூட்டத்தில் முட்டி
வெட்கமறியாத
ஆதியின் நிர்வாணத்துக்குள்
ஒடுங்குகிறது…!
மீண்டுமது தேய்ந்து…
நியாண்டர்தால் மனிதர்களின்
ஓசைகளுக்குள் புகுந்து
தாய்க் குரங்கின் வயிற்றை
இறுகப்பற்றிய குட்டியின்
விழிகளில் நிலைக்குத்தி