- பி. மதியழகன்
கடவுளர்களின் குரல்கள்.
ஒற்றை உயிரிக்கு பயந்து
உலகமே முடங்கிய நேரம்
இது கொரோனா காலயுத்தம்.
எங்கள்இல்லங்களில்
அமைதிமண்டிக்கிடந்தன.
நாங்களும் ஆழ்ந்த உறக்கத்தில்.
எங்களின் தூதுவர்கள்
எப்பொழுதாவது உள்நுழைந்து
உறக்கம் கலைத்தார்கள்
எப்படியாவதுஅழித்து
இந்த மானுடர்களைக் காக்க
அந்த உயிரியைத் தேடினோம்.
எங்களாலும் முடியவில்லை.
தூதுவர்களைக்கண்டு பயமாயிருக்கிறது .
அவர்களால் தொற்று
எங்களையும்பற்றிக்கொண்டால்…….?!
நாங்கள் கேட்கவில்லை
பூசைகளையும் உபசரிப்புகளையும் .
நிர்மாணிப்பதும் நிர்ணயிப்பதும் அவர்கள்தானே!
மானுடர்களின் மனதுக்கு
எங்களின் தேவை வேண்டப்படுகிறது.
அவர்களின் பாவங்கள் இறக்கவும்
தேவைகளை ஏற்றவும்
நாங்கள் சுமப்பவர்களாகிப் போகிறோம்.
பூட்டுகள் திறக்கப்பட்டுவிட்டன
பத்துக்கீழ் அறுபத்துக்குமேல்
மறுக்கப்பட்டுவிட்டன.
அடங்காமல்
ஆசையைத் தூக்கித்திரிபவர்கள்
அனுமதிபெறுகின்றனர்.
எங்களிடமும்இடைவெளிஅவசியம்.
தொடுதல்கூடவேகூடாது.
தீண்டல்நிலைமாறிப்போனதால்
கடைசிவரிசைமுதன்மையாகிப்போனதை
உங்களால்உணரமுடிகிறதா…?