- பி. மதியழகன்
திரட்டிவைத்த வார்த்தைகள்
திடீரென வெடித்து வெளிக்கிளம்பி
கவிதைகளாய் உருமாறும்
சில மணித்துளிகளில்.
அப்படித்தான் ஒருகவிதை
கிறுக்கலாய் விழுந்ததில்
வார்த்தை ஒன்று உருமாறிப்போனது.
மீண்டும்எடுத்தெழுதவார்தையைத்தேடினேன்
கண்டுபிடிக்கவேமுடியவில்லை.
தேடினேன்
தேடிக்கொண்டேயிருக்கிறேன்
மணித்துளிகளால் நேரங்கள் கடந்தவண்ணம்.
இன்னும் கண்டறியப்படவில்லை
அந்தவார்த்தை.
எழுதப்படவில்லை அந்தக் கவிதை.