- பி. மதியழகன்
கட்புலமாகும் படிகவசமணிந்து
விரைந்த உலாவுதலில்
வணக்கம் சொல்லிச்சென்றவர்கள்
முகமறிய மூளை பிசையப்படுகிறது.
வித விதமாய் கவசங்கள்
விற்பனை வெளியில்.
முகமணிந்த கவசங்கள்
உயி ர்கவசமாய் உறுதியாக்கப்படுகிறது.
அனைத்தையும் கடந்து
அந்த ஒற்றைச்சொல்லின் படையணி
பலிபீட மேடைகளில்
குருதி குடித்து தாகம் தீர்க்கின்றன.