You are here
Ilaiyor Ilakiyam Kalandhuraiyadal ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

‘இளையோர் இலக்கியம்’ கலந்துரையாடல்

கருத்தாளர்கள்:
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,உளவியலாளர் சுமதி சந்திரசேகரன் அருணா ரத்னம், சாலை செல்வம், விழியன், பிரியசகி, கலகலவகுப்பறை சிவா,விஷ்ணுபுரம் சரவணன், ஜெயஸ்ரீ, வித்யா, அக்சயா, நாகராஜன், ராஜன் போன்ற கருத்தாளர்கள் இலக்கியம் பற்றிப் பறிமாறிக்கொண்ட நிகழ்வு இது.

15.09.18 – கலந்துரையாடலும் முடிவுகளும்
இளையோருடனான அனைவரின் அனுபவங்களும் இந்நிகழ்வில் பகிரப்பட்டன.
இளையோருக்கான கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், பாடல்களின் தேவை குறித்தும் , அவை பிரச்சாரங்கள், முன்மாதிரிகள், வழிகாட்டுதல்கள் கொண்டவையாக இருக்கலாம் ஆனால் அறிவுரை கூறுவதாகவோ அல்லது முடிவுகளைத் திணிப்பதாகவோ இருக்கக் கூடாது என்றும் பேசப்பட்டது.
ஏற்கனவே வெளிவந்த சிறந்த படைப்புகளை மீண்டும் மறுபதிப்பு செய்யலாம் என்று பேசப்பட்டது. மேலும் ஆங்கிலத்தில் Young Adult Literature / Juvinile Literature எப்படி இருக்கின்றது, எது பரபரப்பாக விற்பனையாகின்றது, அதன் பொதுத்தன்மைகள் பற்றி விழியன் கூறினார்.

அழகிய பெரியவன், தொ. பரமசிவம், அ. சிவசுப்பிரமணியன், பெருமாள் முருகன், நகுலன், சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன் ஆகியோரின் கதைத்தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகளை தேர்வு செய்து பதின் பருவத்திற்கு ஏற்ற படைப்புகளை வெளியிடலாம் என பேசப்பட்டது. மேலும் ஏற்கனவே தமிழில் என்னென்ன புத்தகங்கள் வெளிவந்துள்ளன என்ற பட்டியல் தயாரிக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் உள்ள இளையோர் இலக்கியங்கள் குறித்த பட்டியலும், ஆங்கிலம் மற்றும் ரஷ்ய இலக்கியங்கள் குறித்த பட்டியலும் இருந்தால் மொழிபெயர்ப்பாளர் -களுக்கு எளிதாக இருக்கும். அச்சடித்த புத்தக வடிவில் மட்டுமல்லாமல் ஒலி வடிவிலும் புத்தகங்களை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப் பட்டது. இளையோரின் பிரச்சினைகள், தீர்வுகள் குறித்த உளவியலாரின் கருத்துகளையொட்டி எதிர்த்தும் ஆதரித்தும் விவாதங்கள் எழுந்தன. வித்யா, அக்சயா போன்ற இளையோர் அவரது கருத்துகள் தமக்கு மிகவும் உடன்பாடாக உதவியாக இருந்ததாகக் கூறினர்.

இளையோருக்கான திரைப்படங்கள் குறித்தும் பேசப்பட்டது. பாலியல் தொடர்பான அறிவியல் கருத்துகளை பல ஆசிரியர்கள் வகுப்பில் பேசுவதேயில்லை, பாலியல் வன்முறைகள் இளையோர் மீது அதிகம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, ஜாதியின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டன.

வித்யா, அக்சயா தாங்கள் எழுதுவதாக இருந்தால் சூப்பர் பவர், தன்னால் நிஜத்தில் சாதிக்க முடியாத விஷயங்களை சாதிப்பதாக, நண்பர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடனான உறவுகள், உரசல்கள் என்பனவற்றைப் பற்றி எழுதுவோம் என்றனர். மதியம் மனநல மருத்துவர் தாம் செய்யும் பணிகளைப் பற்றி கூறினார். ச.தமிழ்செல்வனும் உடனடியாக என்ன புத்தகங்களை கொண்டுவரலாம் எனக் கூறினார்.  மருத்துவர் பாஸ்கரன் ஜெயராமன் கலந்துரையாடல்:
பங்கேற்றோர் – நாகராஜன், ராஜன், விழியன், பிரியசகி, கலகலவகுப்பறை சிவா, விஷ்ணுபுரம் சரவணன், ஜெயஸ்ரீ, பரமேஸ்வரி, ஹாலாய்ஸ்யன், வித்யா, அக்சயா கலந்து கொண்டனர்.

மருத்துவரும் எழுத்தாளருமான ஜெயராமன் இளையோரின் சரும, நரம்பியல் பிரச்சனைகளுக்கான காரணங்கள், தீர்வுகள் குறித்து பேசியது பயனுள்ளதாக இருந்தது. அரசியல் சார்ந்த புரிதலுக்கு என்ன செய்யலாம் என்பது குறித்து ராஜன் பேசினார்.

முடிவுகள்:
இளையோர் இலக்கியம் என தனி முகநூல் பக்கம் ஆரம்பிக்க வேண்டும்.
பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்து அவர்கள் என்ன வாசிக்க விரும்புகின்றார்கள் என்ன எழுத விரும்புகிறார்கள் என்று கலந்துரையாட வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் என்ன வாசிக்கவும், எழுதவும் விரும்புகிறார்கள் என்பது பற்றி கட்டுரைப் போட்டி வைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் என்ன வாசிக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைக்க வேண்டும்.

ஒலி வடிவிலும் தம் கருத்துகளைப் பதிவு செய்து அனுப்பலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு அல்லது பயிலரங்கு நடத்த வேண்டும்.

தொகுப்பு – ப்ரியசகி, விழியன்

Related posts

Leave a Comment