You are here

வாசித்ததில் யோசித்தது

அடிமை
டாக்டர் அம்பேத்கர் | என்சிபிஹெச்
உலக அளவில் உள்ள அடிமை முறை வேறு சாதியப்படி நிலை வேறு என வாதிட்ட இந்து மத துதிபாடிகளுக்கு அண்ணல் அம்பேத்கார் தரும் பதிலடி இந்த உரை. உண்மையில் இரண்டையும் ஆய்வுக்கு உட்படுத்தி சாதி முறையே மிகக்கேடானது. கொடுங்கோன்மை மிக்கது என உலகிற்கு எடுத்து வைக்கிறார். சமூக ஆர்வலர்கள் உட்பட அனைவருமே வாசிக்க வேண்டும்.

sanga kalam adimai-ambetkar

சங்க காலத்து நாணயங்கள்
இரா. கிருஷ்ணமூர்த்தி, தினமலர்
இது ஆங்கில நூல். இருந்தும் நமது புதையலில் இடம் பெறுகிறது. பண்டை கால நாணய புழக்கத்தை உலகிற்கே அறிமுகம் செய்தது தமிழ் மண் தான் என்பதை ஆய்வின்வழி நிறுவி அசத்துகிறார்

இரா. கிருஷ்ணமூர்த்தி, சங்க கால நாணயங்கள் படங்களோடு நூலை அழகுப் படுத்தியிருப்பது தனி முத்திரை. ஆராய்ச்சி நூல் என ஒதுக்க வேண்டியதில்லை. ரொம்ப சரளமாக வாசிக்க முடிந்த எளிய மொழியில் வந்திருப்பது சிறப்பு. நம் வரலாறு இது. கல்லூரி பாடத் திட்டத்தில் இடம் பெறச் செய்ய வேண்டுமே என மனம் பதறுகிறது.

சில நேரங்களில் சில விஞ்ஞானிகள்
முனைவர் மெய்யப்பன், விகடன் பிரசுரம்.
மெய்யப்பன் எழுதும் போது நமக்கு விஞ்ஞானிகளுடன் புது நெருக்கம் உருவாகிறது. காரல் பெடரிக் காஸ் தன் கணித ஆராய்ச்சியின் போது மனைவி உயிருக்குப் போராடுவது குறித்த தகவல் வந்தபோது இந்த ஒரு ஆய்வு முடியும் வரை கொஞ்சம் காத்திருக்கச் சொல்லு. என்றாராம். இது போன்ற நூற்றுக்கணக்கான தகவல்கள் இந்தப் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன.

VKN024-500x500

ஜி. சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்
குருமலை சுந்தரம் பிள்ளை, பாவை பப்ளிசேஷன்ஸ்
ஆங்கில இதழ் தி இந்துவை தொடங்கிய விடுதலைப் போராட்ட வீரரின் சரித்திரம். ‘சுதேசமித்திரன் தமிழ் இதழைத் தொடங்கி பாரதியை தமிழனுக்கு அறிமுகம் செய்தவர் சுப்பிரமணியர். சுதேசி இயக்கம், விதவை மறுமணம், குழந்தை விவாகங்கள் எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம் என பல்துறைகளில் நவீன யுக சிற்பியாக வாழ்ந்தவர் குறித்த நூலை எழுதியவர் குருமலை சுந்தரம் பிள்ளை பதிப்பித்தவர் ஜெயவீர தேவன். பள்ளிக்கூட பாடத்தில் வரலாற்றுப் பாடத்தில் இடம் பெற வேண்டும்.

பறக்கும் பப்பிப்பூவும் அட்டைக் கத்தி ராஜாவும்.
மு. முருகேஷ், அகழி வெளியீடு.
குழந்தைகளுக்கான பன்னிரண்டு கணிதங்கள் உள்ளன. சிறுவர் இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தடம் பதித்தவர் தோழர் முருகேஷ். இக்கதைகள் எளியவை என்பதை விட குழந்தைத் தனம் கொண்டவை. ஒரு ஊரில் பூனையும் சுண்டெலியும், ஒரு நாயும் திக் பிரெண்ட்ஸ் என்றால் பாருங்களேன். நாரைகளின் நண்டு அக்கா, டாம் மச்சான் டூம் மச்சான் போன்ற கதைகள் மிகவும் உயிரோட்டமானவை. விடுமுறை விருந்து.

parakkum pappi poo final

தீரன் திப்பு சுல்தான்
குன்றில் குமார் | சங்கர் பதிப்பகம்.
திப்புசுல்தான் மகா அக்பரை விட மகத்தான, மனிதநேயராகப் படுகிறார். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக அவரது ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை நூல் அலசுகிறது. கூடவே அவர் வெள்ளையர்களுக்கு எதிராக உக்கிரமான போர் புரிந்த மாவீரர். தமிழகத்தின் மாண்பு மிக்க வரலாற்று நாயகராக நாம் அவரைப் பார்க்கிறோம் குன்றில் குமார் பல அடிப்படை விவரங்களுடன் ஒரு வரலாற்று நூலாக இதைப் படைத்துள்ளார்.

இது குழந்தைகளின் வகுப்பறை
சூ. ம.ஜெயசீலன் | அரும்பு வெளியீடு
கல்வி குறித்த பாதிரியார் சூ.ம. ஜெயசீலனின் பார்வை வசீகரமானது. மாணவர்க்காக எதையும் விட்டுக் கொடுப்பதே ஆசிரியரின் மரியாதைக்கான நிரந்தர சிம்மாசனம் என்பதை ஆணித்தரமாக வெளிக் காட்டும் அற்புதக் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. அவசியம் ஆசிரியர்களும் கல்வி ஆர்வலர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

இது மடக்குளத்து மீனு
ஷாஜகான், என்சிபிஹெச்
தன் பிறந்த மண்ணை விட்டு பிழைப்பிற்காக பல மைல்கள் கடந்து வாழ்வை வேறொரு மண்ணில் ஒன்றிக் கொண்டவர் ஒன்றா இரண்டா. இவை தரும் முற்றிலும் வேறான அனுபவங்களை குட்டிக் குட்டிக் கட்டுரைகளாக தருகிறார் ஷாஜகான். ரொம்ப சுவாரசியமாக ஒரு பயண நூல் படிப்பதுபோல மனித வலிகளை வாசிக்கும்போது வாழ்வின் மீது ஒரு புறம் ஆர்வமும் மறுபுறம் அளவு கடந்த துக்க நிலையும் ஒரு சேர ஏற்படுவது இந்த எழுத்தின் சிறப்பு.

இப்போதே தீர்மானிப்போம்
21ம் நூற்றாண்டின் சோசலிஸம்
மைக்கேல். எ. லெடோவிஸ், பாரதி புத்தகாலயம்
பதினெட்டாம் நூற்றாண்டில் முதலில் பூத்த சிவப்பு மலரான சோஷலிசம் தான். இறுதி அரசியல் வடிவம் என்பது உலகம் அறிந்ததே. 21ம் நூற்றாண்டின் வெற்றித்தத்துவமாய் நடைமுறை அரசு அமைப்பாய் உழைக்கும் மக்கள் அதிகாரம் செலுத்தும் ஒன்றாய் அது மலரும் சாத்தியங்களை மார்க்சிய சிந்தனையாளர் லெபோவிச் அலசுகிறார்.

வேந்தனின் சிறுகதைகள்
வேந்தன், பன்மொழி பதிப்பகம்.
சிரில் என்றாலே சிலிர்க்கும். சாதாரண தொழிலாளியாக வாழ்ந்தும் சிறுகதை உலகில் முதல் இடதுசாரிக் குரலாய் ஒலித்த எழுத்து முத்துக்கள் இவை. தோழர் சிரிலின் புனைப் பெயர்தான வேந்தன். உழைக்கும் வர்க்கத்தின் தர்க்க நியாயங்களை ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் முன் வைக்கிறது. இந்த உலகமே இருப்போருக்கும் இல்லாதோருக்குமான பெரும் போராட்டமாக எப்படி அமைய முடியும் என்பதை நாம் தமிழக மார்க் கார்க்கியான வேந்தனை வாசித்தே உணர முடியும்.

பெண்ணின் மறுபக்கம்,
டாக்டர் ஷாலினி, விகடன் பிரசுரம்
தந்தை பெரியார் கையிலெடுத்த பிரமாண்ட விவாதத்தைத் தொடரும் நூலாசிரியர் பெண் ஏன் அடிமையானாள்? என்பதை நவீன கூறுகளுடன் விவரிக்கிறார். பெண் யாவற்றிலும் முதன்மையானவர் என்பதற்கு ஒரு நூறு ஆதாரங்கள் இந்த நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. பாலியல் போராட்டத்தின் அறிவியல் மீண்டும் பெண் பக்கம் திரும்புகிறது என்று நூல் முடிகிறது.

mpmp wf

தமிழக ஆறுகளின் அவலநிலை.
பேரா. ஜனகராஜன், பாரதி புத்தகாலயம்
கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு வாட்டி வதைக்கும் இந்த கடுங்கோடையில் அவசியம் நாம் வாசிக்க வேண்டிய நூல் இது. நொய்யல் நதிகள் 80 சதவிகிதம் இறந்துபோய்விட்டன. நதி நீர் மணல் கொள்ளை. சூழலியல் நச்சு என்று நூல் அலசுவதோடு பல ஆறுகளின் பழைய பயன்களைத் தொட்டுக் காட்டும்போது ரொம்ப சுடுகிறது.

thamizhaga_aarukalin_nilai_copy

மார்க்சிய அரசியல் பொருளாதாரம்
ஆத்ரேயா, மொ.பெ: கி. இலக்குவன், பாரதிபுத்தகாலயம்
அரசியல் பொருள் முதல் வாதம் இயற்கையின் இயங்கியல் இவற்றை பேராசிரியர் ஆத்ரேயா விளக்க வேண்டும். நாம் கேட்கவே வேண்டும். அதிலும் இலக்குவனாரின் எளிய தமிழில் எனும்போது இது அரிய வாய்ப்பு. இளைஞர்கள் கையில் இதைக் கொண்டு சேர்த்தால் பல கன்னியாகுமார்கள் உருவாவது உறுதி. இன்றைய தேவையும் அதுவே.

marsiya_.

மனுசங்க கி.ராஜநாராயணன் – அன்னம்
சீனிநாயக்கர், தூங்காநாயக்கர், நாச்சியாள்… இவர்களை மறக்க முடியுமோ. தமிழ் இந்து நாளேட்டில் மண் வாசனையோடு கி.ரா. படைத்த அற்புதமான மன மருந்து சமூக சாரம் இப்போது நூல் வடிவம் பெற்று உள்ளது. எங்கோ தூரத்து பிரதேசம் போகும் வழியில் பெயர் தெரியாத ஊரில் தங்கி மக்களோடு நட்பு கொண்டது போன்ற – நல்ல காத்து வாங்கி நாளாகிறதே. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு கூட வேறுவேறு ஊரில் வேறு வேறு பெயர்… அப்பப்பா இதுதான் சமூக அறிவியலின் சாரம்.

இது சிறகுகளின் காலம்
கவிக்கோ அப்துல் ரகுமான் – விகடன்
ஜூனியர் விகடனில் வந்த பிரபலமான தொடர் இது. தனது பேனா எனும் மந்திரக்கோலால் உலக தத்துவ வெளியை கவிதாரசனையோடு வழங்கும் அந்த எழுத்து மணம் நம்மை நெகிழவைப்பது. அவரது எழுத்துகளின் ஊடாக பிரகாசிக்கும் வாசிப்பு எனும் அயராத உழைப்பு என்னை வியக்கவைக்கிறது. அவர் எப்படி இப்படி தேடித் தேடி வாசிக்கிறார். தேன் குழைத்து இந்த மருந்து சமூகத்திற்கு முறையாக தருகிறார் எனவும் வியக்கிறேன்.

55

முகிலினி இரா. முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம்.
அற்புதமான சூழலியல் நாவல். பவானி ஆற்றுப் படுகை மக்களின் 60 வருடகால வரலாற்றை மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கோவையின் பஞ்சாலைகளுக்கு மூடுவிழா நடத்துவதற்காகவே தொடங்கிய விஸ்கோஸா ரேயான் இழை ஆலையும் அது ஏற்படுத்திய பேரழிவும் இந்த நாவலில் முன்வைக்கப்படும் அதே வேளையில் இயற்கை வேளான்மையை தழைக்க வைக்கும் போராட்டத்தை இவ்வளவு அழகாக ஆழமாக பேச முடியாது. ஹோடா மலை காடுகளில் வசிக்கும் மக்களின் போராட்டம் தனிக் கதை.

mugilini

சித்தார்த்தன் (நாவல்) ஹெர்மன் ஹெஸ்லே,
த. திருலோக சீதாராம், பாரதி.
சித்தார்த்தன் நாவலை வெறும் புத்தரின் பால்ய கால கதை என நினைத்து வாசித்தபோது நான் அதிர்ந்தேன். அற்புதமான பின்புலத்தில் ஒரு சாமானியன் பார்வையில் அந்தக் கதை அப்பழுக்கற்ற ஒரு ஜீவநதி மாதிரி ஓடுகிறது. மனதில் இன்னமும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

sidhdharthan_copy

சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை.
சீத்தாராம் யெச்சூரி, பாரதி புத்தகாலயம்
அம்பேத்காரின் 125வது ஆண்டு தினத்தில் தோழர் யெச்சூரியின் பாராளுமன்ற உரை இந்த நூல். அரசியல் அமைப்புச் சட்டம் என்ற ஒன்று கொண்டு வரப்பட்ட சூழல், சமத்துவம் சகோதரத்துவம் இவற்றை சரியாக காத்து நிற்க வேண்டிய அரசு சகிப்பின்மை எனும் புதைகுழியில் நாட்டை சீரழிக்கத் துடிக்கும் சூழலில் அற்புதமான வழிகாட்டுதல் இந்த உரையில் உள்ளதைக் காண்கிறோம்.

நடைமுறை பற்றி மாசே துங் – என்சிபிஹெச்
கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவை கலைஞர் மாவோ விளக்கும் இரு கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. மனிதரின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? என கேட்கும் மாவோ மக்களிடமிருந்தே என விவரிக்கிறார். சரியான புரட்சிகரமான தத்துவமில்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது எனும் லெனின் கூற்றை அலசும் இடம் அருமை.

வாழும் நல்லிணக்கம் | சபா. நக்வி, காலச்சுவடு
வாழும் நல்லிணக்கம் அறியப்படாத இந்தியாவை தமதடி ஒரு பயணம் எனும் நூல் பன்முகத் தன்மை கொண்ட இந்திய சமூகம் தங்களுக்குள் ஊடாடி எப்படி ஒற்றை அடையாளமாக பொதுப் பிரச்சனைகளை நேரடியாக அலசுகிறது. மத கட்டுமானத்தின் நுட்பங்களை, சிக்கல்களை இத்தனை திறந்த மனதோடு சமீபத்திய பதிவாய் யாரும் முன் வைத்தது இல்லை. சீரடி சாய்பாபா, வீர சிவாஜி பற்றிய பதிவுகள் நம்மை அதிரவைக்கின்றன. அற்புத வரலாற்று ஆவணம்.

வங்கியில் போட்ட பணம்?
சி.பி. கிருஷ்ணன், பாரதி புத்தகாலயம்
எளிய தலைப்பு. ஆனால் ஆழமான கருத்துக்கள் இந்த நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. வங்கித் துறை வரலாறு அரசு மற்றும் பெரு முதலாளிகளால் மக்கள் விரோத வரலாறாகவே உள்ளது. விஜய்மல்லையா போன்றவர்கள் எப்படி பயன் பெற்று கொள்ளைப் பணத்தோடு தப்புகிறார்கள் என்பது இப்போது புரிகிறது.

vangiyil_potta_panam_01

சாதியை ஒழிக்க…
ஐ.நா. அறிக்கை, த. கிருஷ்ணவேணி
சுவாதிகார் – புது தில்லி.
பணி மற்றும் பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டை (சாதி) ஒழிப்பதற்கான ஐ.நா. சபையின் கோட்பாடுகளும் வழிகாட்டுதலும் குறித்த இந்திய பிராந்திய ஐ.நா. அறிக்கையின் தமிழ் வடிவம். உலகில் சாதிப் பாகுபாடு வர்ணாசிரமம், படி நிலையாய் இத்தனை உக்கிரத்தோடு வேறு எங்குமே கிடையாது. உலக அளவில் சமத்துவ சட்டங்கள் அனைத்திற்கும் எதிரானதான இந்த சாதிப் பிரிவினையை ஒழிக்க என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இனி என்ன அணுகுமுறை தேவை என அனைத்தையும் இது அலசுகிறது. ஐ,.நா. உறுப்பு நாடு என்றால் சாதியைத் தூக்கி எறிய வேண்டும் என்று வந்தால் சமத்துவம் சாத்தியம் என்பது நன்றாக உள்ளது.

இந்திய மூலதனம் – தோற்றமும் வளர்ச்சியும்
வே. மீனாட்சி சுந்தரம், பாரதி புத்தகாலயம்
மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளை பொருள் என்று நூல் முதலிலேயே சொல்லி விடுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்ய வந்தவர்கள் மக்களை அடிமைப்படுத்தாமல், சுரண்டலில் ஈடுபடாமல் மூலதனத்தைக் கைப்பற்ற முடியாது என முடிவுக்கு வந்த கதை இது. பணம் என்றால் என்ன என்பதிலிருந்து தொடங்குகிறது. கொடூர முதலாளித்துவம் அவுரி விவசாயக் கூலிகளை சிதைத்த விதம் பற்றி எழுதும் இடங்கள் நம்மை நெக்குருக வைக்கின்றன.

moolathana_thotram_valarsi_01

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்.
ஜெ.வீரபாண்டியன், தோழமை வெளியீடு.
வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைத்துறை பற்றிய விரிவான வரலாற்று நூல் இது. இருவருமே சிற்றரசர்கள்தான். ஆனால் பேரரசர்களின் வீர மரபு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் அதிகம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டுள்ள இந்த நூலில் இடம் பெறும் தேசபற்று. மண் மீதான முழு அர்ப்பணிப்பு, மக்கள் பணி ஏழை, எளியோர்க்கு இரங்குதல் மகளிர் பாதுகாப்பு என இன்றைய இளைய சமுதாயம் அறிய வேண்டிய பல கருத்துக்கள் உள்ளன.

Related posts

Leave a Comment