You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

நூறு மாணவர்களைக் கடந்து ஒரு கிராமத்துப் பெண்

என் வாழ்க்கை, என் அறிவியல், என் போராட்டம்-14

”வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.”

– ஹென்றி வார்ட் பீச்சர்.
Education is the key to open the golden door of freedom.. – George Washingdon Carver.
“Only the educated are free” – Epictetus.
“Education breeds confidence; confidence breeds hope; hope breeds peace.” – Confucius
“Education is not received; it is achieved”

ல்வி என்பது பெற்றுக்கொள்வது அல்ல..அடைவது. Anyone who has never made a mistake has never tried anything new. – Albert Einstein

Mohana3

நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு என்பது எழுத்துக்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படித்துக் காட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். எப்படியாயினும் புத்தகப் படிப்பை ஊக்குவிக்க, சில சமயம் ஒரு தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கு, வாசிப்பு ருசிக்கு யாரோ ஒருவர் தூண்டலாக இருந்திருக்கின்றனர்.. ஆனால், எனக்குப் புத்தகம் படிக்க யார் தூண்டிவிட்டார்கள் என்பது என் நினைவில் இல்லவே இல்லை. ஒருக்கால் எங்க வீட்டுக்கடையில் கிடந்த நாளிதழ்கள், வாரப்பத்திரிகைகளாக இருந்திருக்குமோ, என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் அவற்றை அப்போது ஊரில் கடைக்கு வருபவர்கள் படித்துக் காட்டச் சொல்லியதாலும் இருக்குமோ.. யார் படிக்க வேண்டும் என்ற விதையைத் தூவினார்களோ, வேதிமாற்றத்தை உண்டுபண்ணினார்களோ தெரிய வில்லை. ஆனால் தீயின் மேல் ஊற்றிய பெட்ரோலாக படிப்புத் தீ பற்றிக்கொண்டது, வாழ்நாள் முழுதும். நான் பெரிய படிப்பாளியோ, ஞானியோ இல்லை. ஆனால் கிடைத்ததைப் படிக்கும் பழக்கம்தான், என்னை இப்படி மாற்றி இருக்கிறது. இப்போதுள்ள என் நிலையை எண்ணிப்பார்க்கிறேன். எனக்கு எதிலும் அசாத்திய துணிவு. எப்போதும் எதனையும் thrilling ஆக செய்வதில் படு குஷி.. இன்று வரை.. பிருத்விராஜன் ராணிசமயுக்தையை தூக்கிச் சென்றது, எனக்கு இஷ்டமான கற்பனை.. இதனைத் தந்தது என் படிப்பு மட்டுமே.. எங்கு போராட்டமோ, பிரச்சனையோ, அங்கே நுழை, என மனம் ஆணையிடும். இது என் இயல்பு. யாரும் சொல்லிஅல்ல. அப்படித்தான் இந்தி எதிர்ப்பில் நுழைந்தது; ஆசிரியர் போராட்டம்; சிறை செல்லல், சமுதாய பிரச்சனைகள். துப்புரவுப் பணியாளர்கள் பிரச்சினை, மற்றவர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்வதுஎல்லாம்.. எனக்கு அதில் சந்தோஷம் கிட்டுகிறது. யாருடனாவது கேட்டால், நீ பெண் என்ற முட்டுக்கட்டை வரும். எல்லாம் தனிதான். இப்போதும் எங்கள் வீட்டில் நிறைத்து வைப்பவை புத்தகங்களே.. வீட்டில் இறைந்து கிடப்பவையும் புத்தகங்களே.. வீட்டுக்கு வருபவர்கள் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வந்து எடுத்து படித்துவிட்டு, ஒழுங்காக எடுத்து வைப்பவர்களும், அப்படியே மேஜை மேல் போட்டுவிட்டுப்போவர்களும், சுட்டுச் செல்பவர்களும், தருகிறேன் என்று சொல்லி, எடுத்துப்போய் திருப்பித் தரவே தராத மகானுபாவன்களும், (அவர்களும் படிக்க மாட்டார்கள்), ரெகுலராய் கொண்டுபோய் படித்துவிட்டு தந்துவிட்டு மீண்டும் மீண்டும் எடுத்துப் போகும் அப்பாவிகளும் உண்டு.. மக்கள் படிக்காமல் அடுக்கி அழகு பார்த்து என்ன செய்கிறோம். எங்கள் வீட்டில்.. வீட்டுப்பொருட்களை விட புத்தகங்களே அதிகம். ்அப்பாடா.. என்னருமை புத்தகங்களே.. என் காதல் புத்தகங்களே.. என்னை அடித்துப் புரட்டிப் போட்டவை புத்தகங்கள் மட்டுமே. இப்படி புத்தகங்கள் மேல் ஒரு மீளாக்காதலை உண்டு பண்ணியவை, எனது அண்ணாமலை பல்கலைக் கழக வாழ்க்கை மட்டுமே. என்னில் 360 டிகிரி மாற்றம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஈடுபாடு, ஆர்வம். படிக்க வேண்டும் என்ற வெறி ஏற்பட்டதுக்கு எண்ணெய்; ஊற்றியவர்கள் எனக்குப் போதித்த ஆசிரியர்கள்தான்.அதிலும் B.Scல் கம்பராயணம் நடத்திய SNK சார்தான் நான் தமிழை அழகாக எதுகை மோனையுடன், தகுந்த சொல்லாடலுடன் எழுத விதை தூவியவர். ஆங்கிலத்தில் கவிதைகளை வாசிக்கத் தூண்டியவர் Ode to west wind, Paradise Last IV, Daffodils, she walks in beauty – Byron, உருவாய் நடத்திய சார் பெயர் என்ன? இன்றும் நெஞ்சில் பசுமையாய் நிழலாடுகின்றன. விலங்கியலில் எனக்கு அறுவை செய்முறை காண்பித்தவர்தான் சாயி சார் படத்தில் மைக் முன் பேசுபவர் (போன ஆண்டு 2015,ஆகஸ்ட் 18, போய் ஆசிரியர்களைப் பார்த்து வந்தோம்). அன்றைய 16 வயது குட்டி மோகனா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படு சேட்டை. அண்ணாமலை வளாகத்துக்குள் சுற்றாத இடமில்லை.. நவராத்திரி பட பாட்டுப்போலவே, பகல் முழுதும் ஊர் அளாவுதல்.. இரவு 10 மணிக்கு மேல் படிப்பு.. இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பில் தமிழ் ஆங்கிலம் முடிந்துவிடும்.. நிறைய பேர் அந்த காலத்தில் arrears வைப்பது ஆங்கிலத்தில்தான்.. ஆனால் மோகனாகுட்டி notes வாங்காமலேயே, தானாகப்படித்தும், நண்பர்களுடன் கூட்டு வாசிப்புடனும், ஆங்கில அரியர்ஸ் இன்றி மதிப்பெண் B+. அதாவது,, second class. மோகனா தேர்வு சமயத்தில், தனியாகப் படிக்கும்போது எங்கே உட்கார்ந்து படிப்பாள் தெரியுமா? விடுதியில் உள்ள மரத்தில் ஏறி உட்கார்ந்து ஜாலியாக சாய்ந்து உட்கார்ந்து படிப்பேன். இதெல்லாம் விடுதி வார்டனுக்குத் தெரியாது. அவர்கள் வருவதைப் பார்த்து குதித்து ஓடிவந்து விடுவதும் உண்டு. சில சமயம் சிக்கிக் கொளவதும் உண்டு.. தமிழ்த் தேர்வு முடிந்தது. என் வகுப்பில் என்னைவிட அற்புதமாக தமிழ் படிக்கும் பிஸ்தாக்கள் உண்டு. ராதா சரஸ்வதி, பிரேமா அப்துல் ரஹமான், பால குமார் என பட்டியலிடலாம். 65 பேராச்சே. அப்போதெல்லாம், தேர்வு முடிவு நாளிதழில்தான் வரும். நான் சோழம்பேட்டை கிராமத்தில் இருந்து கொண்டு, விடுப்புக்கு அத்தை வீட்டுக்கு ஓடியாச்சு. அங்கேயும் நிறைய நண்பர்கள் லீவுக்கு வருவார்கள். எல்லாம் எதிர்பாலினம்தான். பெண்பிள்ளைகள் படிக்க வாய்ப்பு இல்லாததால் எங்களுடன் விளையாடவும் வரமாட்டார்கள். அப்போது என்னுடன் அண்ணாமலையில் முதுகலை வரலாறு படித்த, மாவட்ட குடியை வசிப்பிடமாகப் கொண்ட, நண்பர் சோமு, எனக்கு நிறைய புத்தகங்கள் கொண்டுவந்து கொடுப்பார். செம ஜாலிதான். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு எந்நேரமும் படிப்புதான். அலுப்பு சலிப்பில்லாத படிப்பு. ஏராளமான கதைகளும், நாவல்களும்தான்.. சுஜாதா கதைகள், சாண்டில்யன்,ஜெயகாந்தன் கதைகள், சிவசங்கரி, ஜோதிர்லதா கிரிஜா எனப் பட்டியல் கணக்கிலடங்கா.. கோடை விடுமுறை முடியும் நேரம் வந்தது. அத்தை வீட்டிலிருந்து சோழம்பேட்டை வந்தாச்சு. ஓரிரு நாளில் தேர்வு முடிவு வர இருக்கிறது. மனசில் துறை பயம் இல்லை் 1967 – ஜூன் 5 ம் வந்தது. ரிசல்ட் வந்தாச்சு.. கடைக்கு வந்த தினத்தந்தியை எடுத்துப் புரட்டினேன். இரண்டாம் பக்கம் கடைசியில், B.Sc தமிழ், ஆங்கிலத் தேர்வின் முடிவுகள். ஆங்கிலத்தில் second class. தமிழில், என் நம்பரே காணோம் second classல், இல்லை. Third classசில் தேடினால், அதிலும் என் நம்பர் இல்லை. ரொம்ப வருத்தமாகப் போச்சு. இனி என்ன செய்ய, ஐயோ இந்த பாவிகள் கல்யாணம் செய்து வைத்து விடுவார்களே, யாரோ ஒருவனிடம் தள்ளி விடுவார்களே.. இனி படிக்க முடியாதே.. வேலைக்குப்போய் சம்பாதிக்க முடியாதே.. நெஞ்சுப் பதறியது. இனி வாழ்க்கை சூன்யம்தானா.. மனம் பரிதவித்தது. வேதனையை,உணர்வுகளைக்கூட பரிமாறிக் கொள்ளக்கூட யாருமற்ற பாவி நான். ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் விழியிலிருந்து துளிர்க்கவில்லை. உள்ளத்தின் வேறு ஒரு மூலை, நீ ஏன் First class result பார்க்கவில்லை என்றது. சரி என கண்களை மேலே உருட்டி, first class result பார்த்தால்.. நான் உள்ளத்தால்.. அதி உயரத்தில் ஆகாயத்தில் பறந்தேன். ஆமாம். நான் தமிழில் first class. எப்படி இருக்கும்.. அது மட்டுமா? நான் மட்டுமே என் வகுப்பில் முதல் வகுப்பு.. அத்தோடயா.. Botany & Zoology இரண்டு வகுப்புகளுக்கும் சேர்த்து நான் ஒருத்தி மட்டுமே.. 100 மாணவர்களைக் கடந்து ஒரு கிராமத்துப் பெண் பெற்றிருக்கிறாள்.. அதுவும் university ல்…ம் அதெல்லாம் சரி.. இந்த சந்தோஷத்தை நான் யாரிடம் பகிர்ந்து கொள்ள. யாருமே இல்ல சாமி.. இரண்டு நாள் கழித்து என் நெருங்கிய நண்பர் சாவித்திரிக்கு கடிதம் எழுதினேன் ்அப்போது நகை ஏதும் இல்லா புன்னகையை மட்டுமே அணிந்த பெண் மோகனா.. இல்லாமல்தான் அப்ப போடலை.. இப்ப இருந்தும் தேவை இல்லை என்பதால் போடுவதில்லை… இனனொரு விஷயம்,.. படம் எடுத்த ஆண்டு: 1968.. ஜூன் முதல் வாரம் அபபதான் பரீட்சை எழுதி முடிச்சேன்.. அப்பவே இந்தப் பொணணு B.Sc படிச்சு முடிச்சுட்டுது.. ரிசல்ட் அடுத்த மாசமே வந்தாச்சு. தமிழில் zoology & botany ரெண்டு வகுப்புக்கும்.. சேர்த்து மோகனா மட்டுமே First Class… மேலும் zoology ல்,, university III rd rank.. இந்த சந்தோஷத்தை பகிர்ந்து அனுபவிக்கக் கூட அப்ப யாரும் இல்லை. படம் எடுக்கும் போது மோகனாவுக்கு வயது 18..அப்பத்தான் புடவை கொஞ்சம் கொஞ்சம் பழக்கமாக இருந்தது. அப்ப ரொம்ப பேமஸான எலந்த பழம் டிசைன் சேலை..கலக்கலான கலரில். flesh கலர் புடவை..கரும்பச்சை எலந்தம்பழம்//சூப்பர் சேலை.. கருப்பு சட்டை. நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும். “மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. அவன் வார்த்தைகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான்.”
-பாவ்லோ பிரையர்
Nine tenths of education is encouragement.
– Anatole France
“Never Stops learning, because Life never stops Teaching” – S.Mohana.

Related posts

Leave a Comment