You are here
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

மூலதன வாசிப்பு: அறிவுச் சிகரத்தின் உச்சியை எட்டிட…….

என்.குணசேகரன்

Althusser_Balibar_-_Reading_Capital-cbb33718a5d47f9840bdbce369e04e12 balibar (1)

150-ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் மகத்தான படைப்பான, மூலதனம் நூலினை, மார்க்சியர் மட்டுமல்லாது, அறிவுத் தேடல் கொண்ட அனைவரும் வாசிக்கின்றனர்.

அது.வெளிவந்த நாள் முதல், பொருளாதாரம், வரலாறு, தத்துவம் என பல துறை சார்ந்தவர்கள் அதனை எதிர்த்தும், மறுத்தும் கருத்து யுத்தம் நடத்தி வந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் இன்றுவரை தொடர்ந்தாலும், மூலதனம் காலத்தால் அழியாத படைப்பாக இன்றும் நீடிக்கக் காரணம் என்ன?உலகில் பெரும்பான்மையினரான, பாட்டாளி வர்க்கத்திற்கு, உயரிய மனிதம் தழைக்கும் ஒரு பொன்னுலகு படைக்க தத்துவ பலத்தை அது வழங்குவதுதான் முக்கியக் காரணம்.

மூலதன வாசிப்புக்கு உதவிடும் கையேடுகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. 1968-ல் வெளிவந்த மூலதன வாசிப்பு(Reading Capital) நூல் வித்தியாசமானது.

மூலதனத்தை, தொழில்முறை பொருளாதார வல்லுனர்கள் வாசித்து பல விளக்கங்களை நூல்களாக வெளியிட்டுள்ளனர். மார்க்சிய நோக்கு கொண்ட பொருளாதார வல்லுனர்களும் சிறந்த பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். ஆனால் லூயி அல்தூஸர் மேற்கொண்ட இந்த நூலாக்கம்,மூலதனத்தை தத்துவார்த்த நோக்குடன் ஆழ்ந்த வாசிப்பினை மேற்கொண்டு, உருவான படைப்பு.

1965-ஆம் ஆண்டு மார்க்சிய அறிஞர் லூயி அல்தூசர் மற்றும் பல மார்க்சியர்கள் மூலதனத்தை வாசிப்பதற்கான ஒரு ஆய்வுப் பட்டறை போன்ற கருத்தரங்கத்தை நடத்தி,மூலதன நூலின் அடிப்படையான தத்துவப்பார்வையை ஆய்வு செய்து, அதனை ஒரு நூலாகத் தொகுத்தனர்.

இந்த நூல் வெளிவந்த பிரான்சில் மட்டுமல்லாது,உலகம் முழுவதுமே விவாதங்களும்,சர்ச்சைகளும் எழுந்தன. இ.பி.தாம்சன் போன்ற மார்க்சிய அறிஞர்களும் கூட இந்த நூல் மீதான விமர்சனத்தை முன்வைத்தனர்.

ஆனால்,விமர்சனங்கள் பல எழுந்தாலும் 1970-ஆண்டுகளில் மூலதன நூல் வாசிப்பை பன்மடங்கு பரவலாக்கிய பெருமை இந்நூலுக்கு உண்டு.

1970-ஆம் ஆண்டில் அல்தூசர் ,பாலிபர் (Etienne Balibar) ஆகிய இருவரின் கட்டுரைகளை மட்டும் தொகுத்து, ஆங்கில நூலாக வெளிவந்தது மூலதன வாசிப்பு. இன்றளவும் மார்க்சின் மூலதனம் நூலுக்கான முக்கிய ஆய்வு நூலாகத் திகழ்கிறது.

செவ்வியல் பொருளாதாரமும், மார்க்சும்
கடந்தகால செவ்வியல் பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித், டேவிட் ரிகார்டோ ஆகியோரின் பொருளியல் கண்டுபிடிப்புகளை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தினார், மார்க்ஸ்.அவற்றில் எடுத்துக்கொள்ள வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, மேலும் வளர்த்தெடுத்தார்.

இதனை wற விளக்குகிறார்.அறிவியல்பூர்வமாக தான் வந்தடைந்த கருத்தாக்கங்களை ஆடம் ஸ்மித்,டேவிட் ரிகார்டோ ஆகியோரின் கருத்தாக்கங்களோடு உரசிப்பார்த்து தனது கருத்தாக்கங்களின் உண்மைத் தன்மையை மார்க்ஸ் நிரூபிக்கிறார்..தனது கருத்தாக்கங்களோடு அவர்கள் ஒத்துப்போகாத இடங்களையும் அலசி ஆராய்ந்து,விமர்சிக்கிறார்.

மார்க்சின் இந்த விவாதங்களை மதிப்பு,உழைப்பு மதிப்பு, உழைப்புச்சக்தி ஆகிய கருத்தாக்கங்கள் பற்றிய விவாதங்களில் காணலாம்.
ஆடம் ஸ்மித்,டேவிட் ரிகார்டோ போன்ற அறிஞர்களின் பங்களிப்போடு பொருளியல் வரலாறு வளர்ந்தது. அந்த பொருளியல் வரலாற்றின் வளர்ச்சியில், தனது அரிய கண்டுபிடிப்புகளோடு தன்னை பிரம்மாண்டமாக நிலைநிறுத்திக் கொண்டார் என்று அல்தூசர் விவரிக்கிறார்.

தத்துவ நோக்கு
இதற்கு மார்க்சின் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் தத்துவ நோக்கு சிறந்த கருவியாகப் பயன்பட்டது.

மூலதனம் நூலில் கையாளப்பட்டுள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வுமுறை பற்றி பாலிபர் தனது கட்டுரையில் விரிவாக விளக்குகிறார்.மூலதனத்தின் மையக் கருத்தாக்கமே உற்பத்தி முறையின் (mode of production)வளர்ச்சி என்பதுதான் என்பதை நூலாசிரியர்கள் விமர்சனக் கண்ணோட்டத்துடன் விவாதிக்கின்றனர்.

புதிய அறிவியல்
குறிப்பாக,செவ்வியல் பொருளாதாரம் அதிகக் கவனம் செலுத்தாத பல அம்சங்களில் உட்புகுந்து தனது சொந்தக் கண்டுபிடிப்புகளை மார்க்ஸ் உருவாக்கினார். பணத்தின் தோற்றம்,ஸ்மித், ரிக்கார்டோ இருவரும் ஆராயத் தவறிய மூலதனத்தின் இரு கூறுகள் (மாறாத மூலதனம்+மாறும் மூலதனம்:c+v);மூலதனக் குவியலின் பொது விதி,நில வாடகை போன்றவை மார்க்சின் மகத்தான கண்டுபிடிப்புகளாக விளங்குகின்றன.

இதனை, எங்கல்சிற்கு எழுதிய கடிதத்தில் மார்க்ஸ் சுருக்கமாக குறிப்பிடுகிறார்;

….1)பயன் மதிப்பு அல்லது பரிவர்த்தனை மதிப்பு என்ற இரண்டு தன்மைகளில் வெளிப்படுகிற உழைப்பின் இரண்டு குணாம்சங்கள்,: (மூலதனம் நூலின் முதல் அத்தியாயம்.)

2)இலாபம்,வட்டி,நிலவாடகை என்கிற குறிப்பிட்ட வடிவங்களை எல்லாம் தாண்டி நிற்கும் உபரி மதிப்பு……

மார்க்சின் உற்பத்திக் கட்டமைப்பு பற்றிய ஆய்வு நீண்ட பொருளியல் வரலாற்றில் ஒரு புரட்சிகர முறிப்பு என்கிறார் லூயி அல்தூசர்.அதனை அவர், ஒரு புதிய அறிவியலாகக் காண்கிறார்.

நூலின் நிறைவுப்பகுதி, சமூக உற்பத்தி முறையின் மாற்றம் குறித்து விவாதிக்கிறது. இந்த முக்கியமான அத்தியாயத்தினை பாலிபர், எழுதியுள்ளார்.மார்க்ஸ் முதலாளித்துவத்தின் இயங்குமுறையை ஆராய்ந்து உருவாக்கியுள்ள கருத்தாக்கங்கள் முதலாளித்துவத்தின் அடுத்த சமூகநிலை பற்றிய புரிதலுக்கு இட்டுச் செல்கின்றன.

இரண்டு வகை மாற்றங்களை வரலாற்றுரீதியாக விளக்கும் மார்க்ஸின் சிந்தனையை பாலிபர் பதிவு செய்கிறார்.தனிப்பட்ட உழைப்பு,உற்பத்திக் கருவிகளின் தனிப்பட்ட உடைமை என்கிற நிலை மறுக்கப்பட்டு முதலாளித்துவ தனியுடைமை ஏற்படுகிறது.இது பிறரின் உழைப்பைச் சுரண்டும் அடிப்படை கொண்டது.

இரண்டாவதாக வரும் மாற்றம், நிலம் உள்ளிட்ட உற்பத்திக் கருவிகள் பொதுஉடைமையாக்கப்பட்டு, சுரண்டல் இல்லாத ‘ஒத்துழைப்பு’ சார்ந்த உற்பத்தி உருவாகும் மாற்றமாகும்.. இந்த முடிவினை எட்டிட வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கோட்பாடான நிலையின் நிலை மறுப்பு வழிகாட்டுகிறது.

மார்க்சின் தத்துவ வெளிச்சத்தில், மூலதனத்தை வாசிப்பது என்ற நோக்கத்துடன் இந்த நூல் அமைந்துள்ளதால் வாசகருக்கு வாசிப்பதில் சிரமம் ஏற்படக்கூடும்.இது மார்க்ஸ் மூலதனத்தின் பிரெஞ்ச் பதிப்புக்கு எழுதிய முன்னுரையை நினைவுபடுத்துகிறது.

இதுவரை பொருளியல் துறையில் பிரயோகிக்கப்படாத ஒரு ஆய்வுமுறையை நான் கையாண்டுள்ளதால், துவக்க அத்தியாயங்கள் படிப்பதற்குக் கடினமாக உள்ளன.

இதனை ஒத்துக் கொள்கிற மார்க்ஸ், அறிவியலுக்கு இராஜபாட்டை ஏதுமில்லை: கடும் களைப்பினை ஏற்படுத்தும் அந்த செங்குத்தான பாதைகளில் துணிச்சலுடன் தீர்க்கமாக பயணிக்கிறவர்களுக்குத்தான், அதன் ஒளிமிகுந்த சிகரங்களை எட்ட முடியும். என்கிறார்.

புரட்சி இலட்சியம் கொண்டோருக்கு இந்தத் துணிவு கட்டாயம் தேவை.
(தொடரும்)

Related posts

One thought on “மூலதன வாசிப்பு: அறிவுச் சிகரத்தின் உச்சியை எட்டிட…….

 1. Nalliah Thayabharan

  அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
  அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
  தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
  வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
  நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
  உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் “பணநாயகம்” அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
  அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்த விசுவானந்ததேவன், 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.
  எண்பதுகளில் மேற்குலகமும், சோவியத் யூனியனும் பொருந்திக் கொண்டிருந்த போது, சோவியத் யூனியனை வீழ்த்துவதற்காக, ஆப்கானிஸ்தானில் வேற்றுநாட்டு இசுலாமிய தீவிரவாத இளைஞர்களை ஆயுதபாணிகளாக்கி, சோவியத் யூனியனுக்கு எதிராக யுத்தத்தை நடாத்தி வந்த அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இதரநாடுகளுக்கும் எதிர்காலத்தில் அதே இசுலாமிய தீவிரவாத இளைஞர்களால், பலத்த பிரச்சனைகள் வருவதோடு, எதையும் உருப்படியாக மக்களுக்காக செய்யாது அழிவை மட்டுமே செய்கின்ற இசுலாமிய தீவிரவாத இளைஞர்களினால், அதிகளாவினாலான உயிரிழப்புகளையும், அழிவுகளையும் ஏற்படுத்த முடியுமே அன்றி, ஒருபோதும் மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்த இயலாது
  – நல்லையா தயாபரன்

Leave a Comment