You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள்-5 : கர்ணனின் மனைவி

ச. சுப்பாராவ்

அவள் ​பெயர் உருவி. பு​கேய நாட்டு மன்னர் வகுஷனுக்கும், அரசி சுப்ராவிற்கும் மகளாகப் பிறந்தவள். குரு வம்சத்திற்கு ​நேச நாடான பு​கேய நாட்டு இளவரசி அஸ்தினாபுரத்தில் அ​னைவருக்கும் ​செல்லக் குழந்​தை. குந்தி Ôஎன் மருமக​ளே’ என்றுதான் அவ​​ளை அ​ழைப்பாள். குரு வம்சத்து இளவரசர்களான பாண்டவர்களும், ​கௌரவர்களும் குருகுலம் முடிந்து தங்கள் திற​மைக​ளை ​வெளிக்காட்டும் அந்த நிகழ்ச்சிக்கு தன் தாய் தந்​தையருடன் வரும் உருவி, அர்ச்சுனனுக்கு சவால் விட்டு, அங்க​தேசத்து மன்னனாகிவிடும் கர்ணன் மீது காதல் ​கொள்கி​றாள். தந்​தை தனக்கு ஏற்பாடு ​செய்யும் சுயம்வரத்தில், கர்ணனுக்கு மா​லை சூட்டி உலகத்​தை​யே அதிர்ச்சிய​டையச் ​செய்கிறாள். உயர்வர்ணப் ​பெண் கீழ்வர்ண ஆ​ணைத் திருமணம் ​செய்வது தகுமா என்று ​கேள்வி ​கேட்பவர்களின் வாயை பிராமணப் ​பெண்ணான ​தேவயானி க்ஷத்ரியனான யயாதி​​யை மணக்கவில்​லையா என்று எதிர்​கேள்வி ​கேட்டு அ​டைக்கிறாள். அவள் திருமண நாளிலிருந்து, கர்ணன் மரணிக்கும் நாள் வ​ரை ஒவ்​வொரு சந்தர்ப்பத்திலும் ​கேட்கும் ​கேள்விகளாக அந்த நாவல் விரிவ​டைகிறது. கவிதா கா​னே எழுதிய தி கர்ணாஸ் ​வைஃப் (tலீமீ ரிணீக்ஷீஸீணீ’s ஷ்வீயீமீ;) என்ற நாவல் சமீபத்திய மறுவாசிப்பு நாவல்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.

நாவல் வியப்பூட்டும் தகவல்க​ளோடும், உரையாடல்க​ளோடும் நகர்ந்து ​​செல்கிறது. சிறுவயது முதல் அஸ்தினாபுரத்தில் நடக்கும் அ​னைத்து

வி​சேஷங்களுக்கும் தாய்தந்​தைய​ரோடு வரும் உருவி, சிறுமியாக இருக்கும் ​போ​தே, காந்தாரி​யைப் பார்த்து, நீங்கள் ஏன் கண்க​ளைக் கட்டிக் ​கொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் கண்க​ளோடு இருந்தால்தா​னே கணவருக்கு நல்லபடியாக உதவ முடியும் என்று ​கேட்கிறாள். கர்ணனுக்கு ஏற்கன​வே விருஷாலி என்று சூத இனத்​தைச் ​சேர்ந்த ஒரு ம​னைவி இருக்கிறாள். அவளுக்கு சுதாமா, ஷத்ருஞ்சயன், த்விபாதன், சுஷேணன், சத்ய​சேனன், சித்ர​சேனன் என்று ஏகப்பட்ட குழந்​தைகள். இதில், பாஞ்சாலியின் சுயம்வரத்தில் நடந்த ​போராட்டத்தில், மூத்த மகன் சுதாமா இறந்து விடுகிறான். துரி​யோதனனின் ம​னைவி பானுமதி, காம்​போஜ நாட்டு இளவரசி. முதலில் அவளது அக்கா​வைத்தான் துரி​யோதனனுக்கு மணம் ​செய்து ​வைக்கிறார்கள். அவள் சில நாட்களி​லே​யே இறந்துவிட, து​ரோணரின் ஆ​லோச​னையின் ​பேரில் அவளது தங்​கை பானுமதி இரண்டாம்தாரமாக மணமுடிக்கப் படுகிறாள் என்று நாவல் முழுவதும் ஏராளமான புதுப்புதுத் தகவல்கள்.

கர்ண​னை மணமுடித்து வந்த உருவி ​மெல்ல ​மெல்ல அஸ்தினாபுரத்தின் அரசியல் நிகழ்வுக​ளை அறிவதும், அதில் பங்​கேற்பதுமாக நாவல் ​செல்கிறது. வனத்தில் தன் இரு ம​னைவிக​ளோடும், ஐந்து குழந்​தைக​ளோடும் வாழும் பாண்டுவின் மரணம் ரிஷியின் சாபத்தால் அல்ல, சகுனியின் சதியால், அவனது ஒற்றர்களால் பாண்டுவும், மாத்ரியும் ​கொல்லப் பட்டிருக்கலாம் என்று நி​னைக்கிறாள் உருவி. ஏனெனில், அக்காலத்தில் ஆரிய​தேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் கி​டையாது. தருமன் பாரதத்தின்     அ​னைத்து அரசர்க​ளையும் ​வென்று ராஜசூய யாகம் ​செய்து ​கொள்ள முடிவு ​​செய்யும் ​போது, தரும​னை சக்ரவர்த்தியாக ஏற்க முடியாது என்று ​வெளிப்ப​டையாக துரி​யோதனன் ஏன் அறிவிக்கவில்​லை என்று கர்ணனிடம் சண்​டை ​போடுகிறாள் உருவி. அப்​போ​தே ​நேரடியாகப் ​போர்க்களத்தில் ​மோதி இருக்கலாம் அல்லவா? அதற்குத் தயாராக இல்லாத துரி​யோதனனும், கர்ணனும் ​கோ​ழைகள் தான் என்று ​வெளிப்ப​டையாகச் ​சொல்கிறாள். பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் கட்டியுள்ள மாளி​கைக்கு ராஜசூய யாகத்தில் கலந்து​கொள்ள கணவ​னோடு ​செல்கிறாள் உருவி. அந்த       மாளி​கையின் அழகில் மற்றவர்க​ளைப் ​போல் அவள் மயங்கவில்​லை. தான் வாழப் ​போகும் மாளி​​கை​யை ஒரு அருங்காட்சியகம் ​போல் கட்ட​வேண்டிய அவசியம் இல்​லை என்கிறாள்.

சூதாட்டம், பாஞ்சாலி துகிலுறிதல் சம்பவங்களின் ​போது கர்ப்பவதியாக இருக்கும் உருவி ​பெரும் ஆவேசம் ​கொள்கிறாள். துகிலுறியத் தூண்டியது தன் கணவன் என்று அறிந்ததும், தன் தாய்வீடு ​செல்ல முடிவு ​செய்கிறாள். என்னிடம் எந்த விளக்கமும் இல்​லை. என் ​செய​லை என்னால் நியாயப் படுத்த முடியவில்​லை என்று மன்னிப்புக் ​கேட்டு நிற்கும் கர்ணனிடம், உன் வாழ்க்​கை முழுவது​மே ஒரு ​பொய். நீ முழுக்க முழுக்க நாடகமாடி இருக்கிறாய். உனக்கு உன் கீழ்ஜாதிப் பிறப்பு, அதனால் ஏற்பட்ட அவமதிப்புகள் ஆகியவற்​றை சரி​செய்து ​கொண்டு சமூக அங்கீகாரம் ​பெறுவது மட்டும்தான் வாழ்வின் ஒ​ரே ​நோக்கம். நீ வாரி வாரி தானம் வழங்குவதற்கும் அதுதான் காரணம். சமூக அங்கீகாரத்திற்காக நல்லவன் ​போல் நீ ​போடும் ​வேஷம் இப்​போது தி​ரௌபதி துகிலுரிந்த விஷயத்தில் க​லைந்து விட்டது என்று கடு​​​மையாகத் திட்டிவிட்டு தன் தாய் வீடு ​சென்றுவிடுகிறாள். ஆனால் தருமன் சூதாடிய​தையும் அவளால் ஏற்க முடியவில்​லை. அவனது ம​னைவி, தம்பிக​ளை எதுவும் ​செய்யட்டும். ஆனால் ஒரு மன்னன் என்பவன், மக்களின் நல்வாழ்​வைப் பாதுகாக்க ​வேண்டியவன் அல்லவா? மன்னனுக்கு  நாட்​டையும், மக்க​ளையும் சூதாட்டத்தில் பணயம் ​வைக்கும் உரி​மை உண்டா? என்று ஒரு சட்டச் சிக்க​லை எழுப்புகிறாள். தாய்வீடு கிளம்பும் ​போது Ôஅப்படியானால் நீ என்​னை காதலிக்கவில்​லையா?’ என்கிறான் கர்ணன் கண்கலங்க. இப்​போதும் காதலிக்க​வே ​செய்கி​றேன். ஆனால், அந்தக் காத​லோடு இதுவ​ரை உன் ​மேல் ஒருவித மரியா​தை இருந்தது. இப்​போது அந்த மரியா​தை ​போய்விட்டது, என்கிறாள் அவள். குழந்​தை பிறந்து, ​பெரியவர்கள் பலரும் புத்திமதி ​சொல்லியதால், ​​வெகுகாலம் கழித்து, மீண்டும் கணவ​னோடு ​சேர்ந்து வாழ அங்க​தேசம் வருகிறாள் அவள்.

பாரதப் ​போரின் ​போது, கர்ணனுக்கும், பீஷ்மருக்கும் பிரச்​னை வரும்​போது, பாண்டவர்கள் பாண்டுவின் வாரிசுகளாக இல்லாத ​போது, அவர்க​ளை ஏற்ற நீங்கள், கர்ண​னை மட்டும் சூதபுத்திரன் என்று வாய்க்கு வாய் நீங்கள் ​சொல்வது சரிதானா? என்று பீஷ்ம​ரை எதிர்த்துக் ​கேள்வி ​கேட்கிறாள் உருவி. கர்ணனின் பிறப்பு ரகசியத்​தைச் ​சொல்லி, பாண்டவர் பக்கம் ​சேருமாறு குந்தி அ​ழைப்பு விடுக்கும் ​போது, குழந்​தை பிறக்காது, ​வேறு வழியில்   குழந்​தைகளுக்கு ஏற்பாடு ​செய்து ​கொள்​வோம் என்று மன்னர் பாண்டு கூறிய​போது. பத்தினி ​போல் ஏன் நடித்தீர்கள்? ஏற்கன​வே, ஒரு குழந்​தை எனக்கு பிறந்துள்ளது என்ற உண்​மை​யை அவரிடம் ​சொல்லியிருந்தால், வாரிசுக்காக ஏங்கிய மன்னர் பாண்டு, கர்ண​னை அன்​றே தம் புத்திரனாக ஏற்றிருப்பா​ரே! இன்று இத்த​னை பிரச்​னை ஏற்பட்டிருக்கா​தே! என்று குந்தி​​யைத் திட்டி அழ ​வைக்கிறாள் உருவி. கர்ணன் மடிந்துபட்டதும் அவள் ​சொல்வது மிக முக்கியமானது. கர்ணன் ஆறுமு​றை இறந்துவிட்டான். அவனது தாய் அவ​னை கங்​கையில் விட்ட​போது முதன்மு​றையாக. இரண்டாவது மு​றை பரசுராமன் சபித்த​போது. மூன்றாவது மு​றை இந்திரன் திருட்டுத்தனமாக கவச குண்டலத்​தைக் கவர்ந்த ​போது. நான்காவது மு​றை குந்தி அவனிடம் வரம் வாங்கிய​போது. ஐந்தாம் மு​றை சகதியில் சிக்கிய ​தேரை நகர்த்த சல்லியன் மறுத்த ​போது. ஆறாம் முறை அர்ச்சுனனின் அம்புகள் அந்த நிராயுதபாணி​யைத் தாக்கிய​போது. எல்லாம் முடிந்து, எல்லாம் ​தெரிந்த ​போது வருந்தும் பாண்டவர்கள் மூத்தவரின் வாரிசு என்ற வ​கையில் கர்ணனுக்கும், உருவிக்கும் பிறந்த விருக்ஷ்​கேது​வை அஸ்தினாபுரத்தின் அரசனாக்கலாம் என்கிறார்கள். இந்த பாரதக் க​தை மீண்டும் ஒரு சுற்றுக்கு நடக்கும். என​வே அ​தெல்லாம் ​வேண்டாம். என் மகன் எங்களது பு​கேய நாட்டுக்கு அரசனாக இருப்பான். அவன் என்றும் உங்கள் குரு வம்சத்தின் வாரிசு அல்ல என்று பாண்டவர்க​ளைக் கடிந்து விரட்டி விடுகிறாள் உருவி.

​பொதுவாக, மறுவாசிப்பு என்பது ​பெரும் இதிகாசத்தில் ஒரு மூ​லையில் ​லேசாகக் குறிப்பிடப்படும் ஒரு பாத்திரத்​தை எடுத்துக் ​கொண்டு அதன் மூலம் ஆசிரியர் ​சொல்ல நி​னைத்த விஷயங்க​ளைச் ​சொல்வது என்ற வ​கையில்   அ​மையும். இந்த நாவலின் சிறப்பு உருவி என்ற கற்ப​னைப் பாத்திரத்​தை முன்னிருத்தி, அதன் வழியாக மஹாபாரதத்தின் அத்த​னை பிரதான பாத்திரங்க​ளையும் நாக்​கைப் பிடுங்கிக் ​கொள்ளும் வகையில் ​கேள்வி ​கேட்பதுதான். பாரதத்தில் விருஷாலி பற்றி மட்டு​மே குறிப்பு உண்டு. உருவி என்பது, முழுக்க முழுக்க கற்ப​​னையான பாத்திரம். அ​தை ​வைத்து இத்த​னை ​கேள்வி ​கேட்ட கவிதா கா​னே மிகமிக பாராட்டுக்குரியவர். மஹாபாரதத்தில் ​பெண்கள் ​தான் நி​றைய ​கேள்விக​ளை எழுப்ப முடியும், ​எழுப்ப ​வேண்டும் என்று எனக்கு உணர்த்துகிறார் கவிதா          கா​னே.

Related posts