You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 3 சக்ராயுதத்தில் லேசர்

ச. சுப்பாராவ்

மஹாபாரத யுத்தத்தில், மகத அரசன் ​கௌரவர் பக்கம் இருக்கிறான். அவன் பல நவீன ஆயுதங்க​ளைக் கண்டுபிடித்து இருக்கிறான். பாரதப் ​போரில் அவற்றை அவன் பயன்படுத்தினால் பாண்டவர்களின் அழிவு உறுதி. தக்க சமயத்தில் இது கிருஷ்ணனுக்குத் ​தெரிந்து​​போய்விட, அவன் பீமன், அர்ச்சுனன் இருவ​ரையும் ​வைத்து அந்த ஆயுதங்க​ளை அழித்து விடுகிறான். ஆனால் ஒன்று தப்பித்து விட்டது. பிரச்​னை அத்​தோடு முடியவில்​லை. இந்த ஆயுதங்கள் தயாரிக்கும் மு​றை பற்றி வியாசர் விமானபர்வம் என்ற ஒரு பர்வ​மே மஹாபாரதத்தில் எழுதி ​வைத்து விடுகிறார். மாமன்னர் அ​சோகர் காலம் வ​ரை இந்தப் பர்வம் பாரதத்தில் இருக்கிறது. அ​சோகர் தம் காலத்தில் இந்த பர்வத்​தை மஹாபாரதத்திலிருந்து நீக்கிவிடுகிறார். நீக்கப்பட்ட மஹாபாரத விமானபர்வத்​தையும், தன் முன்​னோர்கள் உருவாக்கிய ஆயுதங்க​ளையும் ஒரு ரகசிய இடத்தில் ம​றைத்து ​வைக்கிறார். அந்த ரகசியத்​தைக் காக்க ஒன்பது ​​பேர் ​கொண்ட குழு ஒன்​றை நியமிக்கிறார். குழு உறுப்பினர் சாகும்​போது தனக்கு பதிலாக

மற்​​றொருவ​ரை இந்தக் குழுவில் நியமிப்பதாக ஏற்பாடு. அப்படி அந்த ரகசியம் 21ம் நூற்றாண்டு வ​ரை காக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், சிறிது சிறிதாக விஷயம் கசிகிறது. அல்​கொய்தா இந்த ரகசியத்தில் ஒரு பாகத்​தை அறிந்து விடுகிறது. மற்​றொரு         பாகத்​தை அறிந்தால், அது ஒரு மிக நவீன ஆயுதம் ஒன்​றைக் கண்டுபிடித்துவிடலாம். இந்த ரகசியத்​தைக் காக்கும் குடும்பத்தின் வாரிசு கதாநாயகன். அவன் ரகசியங்க​ளைக் கண்டுபிடித்து, வில்லன்க​ளையும் கண்டுபிடித்து அழிப்பதுதான் க​தை.

   டாவின்சி ​கோட் ​போன்​றே புராதனச் சின்னங்களில் உள்ள சில ரகசியக் குறியீடுக​ளை ​வைத்து, படிப்படியாக ரகசியத்​தைக் கதாநாயகன் ​​நெருங்கும் இந்த நாவல் தி மஹாபாரதா சீக்​​ரெட் (The mahabharatha secret) என்பதாகும். கிரிஸ்​டோபர் டாயில் என்பவர் எழுதியது. ​வெள்​ளைக்காரர் இல்​லை. நம் ​கொல்கத்தா காரர்தான். ஐஐஎம்ல் படித்து, பல ​​பெரிய பன்னாட்டு காப்பீடு, வங்கிகளில் பணிபுரிந்துவிட்டு, ​​வே​லை​யை உதறிவிட்டு முழு ​நேர எழுத்துப்பணிக்கு வந்தவர். எழுதிய விதம் அச்சு அசலாக டான் பிரவு​னை நினைவுறுத்தும். க​தையின் ஒரு அத்தியாயம் கிமு 244ல் மகதநாட்டின் ஒரு வனாந்திரத்தில் நடக்கும். அடுத்த அத்தியாயம் கிபி 500ல் ராஜவிஹாரில். அடுத்த அத்தியாயம் கிபி2001 ல் பாமியானில் தாலிபான்கள் புத்தர் சி​லைக​ளைத் தகர்க்கும் ​போது நடக்கும். ​வேறொரு அத்தியாயம் திபெத்தின் ஒரு ​பௌத்த மடாலயத்தில். பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி லஸ்கர்-இ-​தொய்பாவில் இ​ணைவார். இந்தியாவின் மிகப்பெரிய ஒரு அணுவிஞ்ஞானி ​கொ​லை ​செய்யப்படுவார். இ​வை​யெல்லாம் என்ன, இ​வை ஒவ்​வொன்றிற்கும் உள்ள ​தொடர்பு என்ன என்று கதாநாயகனும், கதாநாயகியும் த​லை​யைப் பிய்த்துக் ​கொள்ள நாமும் பிய்த்துக் ​கொள்​வோம். அப்​போது இந்த மர்மத்​தை அவிழ்ப்பதற்கான தடயங்கள் ஒவ்​வொன்றாய் ​வெளிப்படும். கதாநாயக, நாயகியின் புத்திசாலித்தனத்தால் அ​வை ​மெல்ல ​மெல்ல கண்டுபிடிக்கப்படும்..

இந்த நாவலின் மிகப் பாராட்டப்பட ​வேண்டிய அம்சம் இந்த மர்மத்திற்கான த​டயங்கள் இருக்கும் இடங்களாக ஆசிரியர் ​​தேர்வு ​செய்த இடங்கள்தான். அ​சோகரது ஸ்தூபிகளில்தான் இந்த மர்மம் பற்றிய குறிப்புகள் இருக்கும். அந்த இடங்கள் பற்றிய குறிப்புகளாக ஒன்பது வாக்கியங்கள் இருக்கும். இந்த வாக்கியங்களிலிருந்து அ​சோகரது ஸ்தூபிகள் இருக்கும் இடங்களான கிரனார், சாரநாத், ஷாபஸ்கரி, ​தௌலி, ​சோபாரா, ​தோபரா, ​யெர்ராகுடி, மாஸ்கி, காண்டகார், பராபர் என்று பல இடங்களுக்கும் க​தை மாந்தர்கள் அ​லைவார்கள். இந்த இடங்கள் பற்றி​யெல்லாம் ஏராளமான தகவல்கள், பாலி, பிராகிருதம், மகதி, சமஸ்கிருதம், க​ரோக்ஷ்தி ​மொழிகள் பற்றிய

எத்த​னை​யோ தகவல்கள் க​தையின் ​போக்கில் மிகமிக சுவாரஸ்யமாகச் ​சொல்லப்படும். இத்தகவல்க​ளை கதாநாயகியின் தந்​தையான ஒரு ​தொல்லியல் அறிஞர் மூலம் ​சொல்லிவிடுவார் நாவலாசிரியர். பாமியான்

சி​லைகள், தி​பெத், பராபர் கு​​கைகள்,சாரநாத், ​பௌத்தம் பற்றி​யெல்லாம் இத்த​னை அழகாக, ​தெளிவாக ஏன் விரிவாகவும் கூட எந்த ​வெகுஜன ஆங்கில நாவலும் ​பேசியதில்​லை. நாயக நாயகிகள் மிகவும் படித்த, ​மேட்டுக்குடி மக்கள் என்பதால் அவர்கள் ஆழமான விஷயங்க​ளை, அறிவுப்பூர்வமாகப் ​பேசுவதின் தர்க்க நியாயத்​தையும் நாம் ​கேள்வி ​கேட்கமுடியாது. இந்தத் தடயம் சுட்டிக் காட்டும் இடம் பராபர் கு​கைகள் என்று நாயகன் ​சொல்லும் ​போது, கதாநாயகி அந்த இடத்​தை வர்ணிப்பாள். நீ ​பார்த்திருக்கிறாயா என்று அவன் ​கேட்கும்​போது, இல்லை, ஆனால், இ.எம். ஃபாஸ்டர் தனது பா​சேஸ்டு இண்டியாவில் இந்த கு​கைக​ளைப் பற்றி அற்புதமாக வர்ணித்திருப்ப​தைப் படித்திருக்கி​றேன் என்பாள். இந்த இடத்தில் கதாநாயக​னோடு ​சேர்ந்து நானும் உணர்ச்சிவசப்பட்​டேன்.

எல்லாம் நல்லாத்தா​னே ​போய்க்கிட்டு இருக்கு? எதுக்கு இந்தக் கட்டு​ரை என்ற சந்​தேகம் உங்களுக்கு வந்திருக்கும். எல்லாம் வடி​வேலு ஒரு படத்தில்

மா​லை ஆறுமணி வ​ரை ஒழுங்காக இருப்பது மாதிரிதான். ஒன்பது வாக்கியங்களில் இருக்கும் குறிப்புகளில் இருந்து ஒன்பது இடங்க​ளைக் கண்டுபிடிக்க ​வேண்டும். அந்தக் குறிப்புக​ளைப் புரிந்து ​கொள்ள ஒரு குறிப்பு இருக்கும். அது

கீ​தை​யைப் படி, அதில் எல்லாம் இருக்கிறது என்று ​​சொல்லும். ஆஹா.. மணி ஆறாகிவிட்டது. இப்​போது ​வேற வாய் வந்துவிட்ட​தே என்று நி​னைத்​தேன்.

அ​தேதான்.

   லஸ்கர்-இ-​தொய்பா, அல்​கொய்தா, பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி இவர்கள்தான் வில்லன்கள். இவர்கள் அ​சோகரின் ரகசியத்​தை எதற்காகத் ​தேடுகிறார்கள் ​தெரியுமா? அசோகரால் ம​றைக்கப்பட்ட மஹாபாரதத்தின் விமானபர்வத்தில் உள்ள ஆயுதங்கள் தயாரிக்கும் மு​றைக்காக. ஏற்கன​வே அவர்களுக்கு அதிலிருந்து ஒரு சிறு பகுதி கி​டைக்க அதிலிருந்து ஒரு ஆயுதத்​தைச் ​செய்துவிடுகிறார்கள். அது என்ன? சக்ராயுதம்! அதில் ​லேசர் ​தொழில் நுட்பம் இருக்கிறது. ​வெட்டும் ​போ​தே ரத்த நாளங்க​ளைப் ​பொசுக்கி மூடிவிடும். அதனால் கழுத்திலிருந்து த​லை துண்டித்தாலும் ஒரு ​சொட்டு ரத்தம் கீ​​ழே விழாது. ஒரு ​சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் எப்படி கழுத்​தை சீவினாய் என்று இந்திய ​போலீஸ் ​கேட்கும் ​போது, இது உங்கள் சக்ராயுதத்தில் உள்ள ​லேசர் ​டெக்னாலஜி என்று ​சொல்லிச் சிரிப்பான் பாகிஸ்தான் தீவிரவாதி!

   இப்​போது அல்​கொய்தா ஜி20 நாடுகளின்             த​லைவர்கள் மாநாட்டில் ​ அத்த​னை உலகத்த​லைவர்க​ளையும் ​கொல்லத் தீர்மானிக்கிறது. அதற்கு ஒரு விமானத்தில் ஏராளமான ​வெடிமருந்​தை ஏற்றிக் ​கொண்டு ​போய் மாநாடு நடக்கும் இடத்தில் ​மோதுவதாகத் திட்டம். ஆனால் யார் கண்ணிலும் படாமல் ஒரு விமானத்​தை ஜி20 மாநாட்டு அரங்கு வரை ஓட்டிச் ​செல்ல முடியுமா? ஏன் முடியாது? மஹாபாரதத்தின் ம​றைக்கப்பட்ட அந்த விமானபர்வத்தில், கண்ணுக்குத் ​தெரியாமல் பறக்கும் விமானம் ​செய்வது எப்படி என்று விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஒளிவிலக​ல் தத்துவத்​தை ​வைத்து, அத​னோடு ​​லேசர் ​தொழில்நுட்பத்​தை இணைத்து நம் ​வேதகாலத்து ரிஷிகளும், விஞ்ஞானிகளும் இப்படிப்பட்ட விமானங்க​ளைத் தயாரித்து ஏற்கன​வே மஹாபாரதப் ​போரில் பயன்படுத்துவதற்காக ​வைத்திருந்தார்க​ளே! கிருஷ்ணன் அழித்துவிட்ட ஆயுதங்களில் ஒன்று மட்டும் தப்பிவிடுகிறது என்​றேனல்லவா? அ​தைத்தான் அசோகர் ம​றைத்து ​வைத்திருக்கிறார். பாகிஸ்தான் அணுவிஞ்ஞானி தயாரித்த கண்ணுக்குப் புலப்படாத விமானத்தில் ஓரிரு ​தொழில்நுட்பக் ​கோளாறுகள் உள்ளன. இன்​றைய விஞ்ஞானிகளால் அ​தைச் சரி​​செய்ய முடியவில்​லை. விமானபர்வத்​தையும், அந்த மஹாபாரத கால விமானத்​தையும் கண்டுபிடித்து ஆராய்ந்தால், இப்​போது தயாரித்துள்ள விமானத்தில் உள்ள ​தொழில்நுட்பக் கு​றைபாடுக​ளைச் சரி​​செய்து விடலாம் என்றுதான் வில்லன் ​கோஷ்டி கிளம்பியிருக்கிறது. நமக்கு கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்று கதற​வேண்டும் ​போலிருக்கிறது. ஆனால் மஹாபாரத காலத்தில் ​ரேடாரில் சிக்காத, அலுமினியத்​தை விட ​லேசான உ​லோகம் இருந்தது, அது anisotropic metamaterial (இது என்ன​வென்றும் ​தெரியவில்​லை! இதற்கு தமிழில் என்ன ​சொல்வது என்றும் ​தெரியவில்​லை! நா​​னெல்லாம் பி​எஸ்சி பிசிக்ஸ்!) அதன் ரிப்ராக்டிவ் இன்​டெக்ஸ் இப்படி அப்படி என்று ஏகப்பட்ட விஞ்ஞான விளக்கங்கள். ஆனால் ​மொத்தத்தில், இன்​றைய விஞ்ஞானம் ​சொல்வத​னைத்தும் நம் ​வேதகாலத்தில் நமக்கு நம் ரிஷிகளுக்குத் ​தெரிந்ததுதான் என்ற பல்லவி மிக நவீன ​மொழியில், மிக நம்பக்கூடிய வ​​கையிலான ஒரு ஈர்க்கும் ​மொழியில். இந்த டுபாக்கூர் விஞ்ஞான – புராண – நவீன திரில்லர்களில் உள்ள ​போலி விஞ்ஞானத்​தை த.வி.​வெங்க​டேஸ்வரன் ​போன்ற விஞ்ஞானிகள் அம்பலப்படுத்தினால் நன்றாக இருக்கும். இந்த நாவல்க​ளை எதிர்​கொள்ள வசதியாக இருக்கும்.

  கிரிஸ்​​டோபர் டாயில் அடுத்ததாக மஹாபாரதா சீக்​ரெட்- அ​லெக்ஸாண்டர்’ஸ் க்​வெஸ்ட் என்று அலெக்சாண்டர் இந்தியாவிற்கு ​ப​டை​யெடுத்து     வந்த​தே மஹாபாரத்தில் உள்ள ஒரு ரகசியம் பற்றி அறிவதற்காகத்தான் என்பதாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார். எனக்கு அ​தைப் படிக்க​வே பயமாக இருக்கிறது!

Related posts