You are here
மீண்டெழும் மறுவாசிப்புகள் 

மீண்டெழும் மறுவாசிப்புகள் – 1: அதிகரிக்கும் ஆங்கில மறுவாசிப்பு நூல்கள்

ச.சுப்பாராவ்

ஆதிக்க​தைக​ளை இப்படி நடந்திருக்கு​மோ, இப்படி நடந்திருக்கலா​மோ, இது ம​றைக்கப்பட்டு விட்ட​தோ என்று ஒவ்​வொரு ப​டைப்பாளியும் ​​யோசித்து, ​யோசித்து ​வேறு​வேறு வடிவங்களில் எழுதிப்பார்ப்ப​தை மறுவாசிப்பு என்கி​றோம். மறுகூறல் என்பதுதான் சரியான ​சொல் என்றாலும்கூட மறு வாசிப்பு என்ற ​பெயர் நி​லைத்துப் ​போனதால் நாமும் அ​தை​யே பயன்படுத்தலாம். இந்தியாவில் மிகமிக அதிகமான அளவிற்கு மறுவாசிப்பிற்கு உள்ளான  ஆதிக்க​தைகள்  ராமாயணமும், மகாபாரதமும் என்று தனியாகச் ​சொல்ல ​வேண்டியதில்​லை. இ​வை எழுதப்பட்ட காலத்தி​லே​யே மறுவாசிப்பிற்கு உள்ளான​வை. காரணம், சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் இல்லாமல் பல்லாண்டு காலங்கள் வாய்வழியாக​வே இ​வை பரவிய​போது, ​சொல்பவர் சரக்குகளும் இயல்பாக ​சேர்க்கப் பட்டிருக்கும். கிட்டத்தட்ட 10-12 நூற்றாண்டுகளுக்குப் பின் நாட்டில் பக்தி இயக்கம் ​வேகம் ​பெற்று, இக்க​தை மாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றப்பட்டு, பல ​மொழிகளிலும் இ​வை ​மொழியாக்கம் ​செய்யப்பட்ட​போது, நடந்ததும் மறுவாசிப்புதான்.  எனினும், அச்சுப் புத்தகம் பரவலாகி, சிறுக​தை, நாவல் என்ற வடிவங்கள் இந்தியா​வெங்கும் பரவலாக  அறிமுகமான பின்ன​ரே, நாம் முதலில் கூறிய இப்படி நடந்திருக்கு​மோ என்ற கற்ப​னை கலந்த மறுவாசிப்புகள் உருவாகின. அதற்கு முன்னர் வ​ரை க​தைமாந்தர்களுக்கு ​தெய்வாம்சம் ஏற்றும் ஒற்​றை மறுவாசிப்பு பாணிதான்.
சிறுக​தை, நாவல் என்ற இலக்கிய வடிவங்கள் தீர்மானகரமான வடிவம் ​​பெற்ற​போது இந்திய​மொழிகளில் உருவான மறுவாசிப்புகள் அற்புதமானவை. காண்​டேகரின் யயாதி, எம்.டி. வாசு​தேவனின் இரண்டாம் இடம், பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், ​​பைரப்பாவின் பருவம், பிரதிபா ​ரேயின் யக்ஞ​சேனி, ஐராவதி கார்​வேயின் யுகாந்தா, எம்.வி.​வெங்கட்ராமின் நித்யகன்னி, அருணனின் பூருவம்சம், சரயு, சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சயா என்று அங்கொன்றும், இங்​கொன்றுமாக கிட்டத்தட்ட எல்லா இந்திய​ மொழிகளிலும் அவ்வப்​போது மிக அற்புதமான மறுவாசிப்புகள் வந்துள்ளன. புது​மைப்பித்தன், எம்.வி.​வெங்கட்ராம் ​தொடங்கி, ​ஜெய​மோகன், பாலகுமாரன் வ​ரை மறுவாசிப்புச் சிறுக​தைகள் எழுதி​யோரும் பலர் உண்டு. (வாசகர்கள் அனுமதித்தால், இவர்க​ளோடு இந்தக் கட்டு​ரையாளர் ​பெய​ரையும் ​சேர்த்துக் ​கொள்ளலாம்!) இந்த நாவல்களும், சிறுக​தைகளும் கடந்த நூற்றாண்டின் பிற்பாதியில் பல்​வேறு இந்திய ​மொழிகளில் எழுதப்பட்ட​வை. இவற்றில் பல, நி​றைய ​மொழிகளில் ​மொழி​பெயர்க்கப்பட்டு ​வேறு மாநில வாசகர்களுக்கும் கி​டைத்த​ன.
இருபதாம் நூற்றாண்டின் க​டைசிப் பத்தாண்டு களில் ஏற்பட்ட உலகமயம், பண்பாட்டு, கலாச்சார தளத்திலும் நு​ழைந்த ​போது, இயல்பாக​வே மக்களின் கலாச்சார வாழ்வில் ​பெரிய தாக்கங்க​ளை ஏற்படுத்தியது. இதில் மிக முக்கியமானது, மக்களின் தாய்​மொழிக் கல்வியும், தாய்​மொழிப் பயன்பாடும் சிறிதுசிறிதாய் ம​றைந்து ​போனதாகும். உலகமயச் சூழலில், புத்தக வாசிப்பிற்கான ​பொருளாதார வசதியும், கலாச்சாரப் பின்னணியும் ​கொண்ட நடுத்தர வர்க்கம் ​பெரு நகரங்களுக்குப் புலம்​பெயர்ந்தது. உயர் நடுத்தர வர்க்கத்தினர் ​வெளிநாடுகளுக்கும் புலம்​பெயர்ந்தனர். ​வேற்று ​மொழிச் சூழலில், ஆங்கிலம் என்ற ​தொடர்பு ​மொழி​யை மட்டு​மே அறிந்து, அதன் மூல​மே கற்றுக் ​கொண்டு, அதன் வழி​யே பிற​ரோடு உ​ரையாடிய ஒரு
த​லைமு​றை  இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் கல்லூரிப் படிப்​பை முடித்து, ​வே​லைக்குச் ​செல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. தாய்​மொழி​யோடும், தாய்மண்​ணோடும் ​தொடர்பு அற​வே இல்லாத இந்தத் த​லைமு​றை இயல்பாக​வே நம் நாட்டின் புராதனக் கதைக​ளை, இதிகாசங்க​ளை அறிந்து ​கொள்ளவில்​லை. அதன் காரணமாக ​பெரும் குற்ற உணர்வும் இத்த​லை மு​றையிடம் உண்டு.
தம் அ​டையாளம் குறித்த மனச்சங்கடம், குற்ற உணர்வு ​கொண்ட இப்​பெருங்கூட்டம் (உலகி​லே​யே இ​ளைஞர்கள் அதிக எண்ணிக்​கையில் இருப்பது நம் நாட்டில்தான்) இருவிதமான கும்பல்களுக்கு சாதகமான ஒரு சூழ​லை உருவாக்கியிருக்கிறது. ஒன்று நம் நாட்டின் பல்​வேறு ​மொழி, பண்பாட்டு, கலாச்சார பன்முகத்த​ன்​மைக​ளை மறுதலித்து, ஒரு ஒற்​றைக் கலாச்சார    அ​டையாளத்​தை நி​லைநிறுத்தும் ஒரு வலதுசாரிக் கும்பல். மற்றது, தம் ​வேர்கள் பற்றி தாம் அறியவில்​லை​யே என்ற இவர்களது ஏக்கத்​தைப் பயன்படுத்தி, தம் புத்தகப் பதிப்பு வியாபாரத்திற்கு பரந்த சந்​தை​யை ஏற்படுத்திக் ​​கொள்ளும் ஒரு வியாபாரக் கும்பல். இந்த இரு கும்பல்களும் மறுவாசிப்பு இலக்கியம் என்ற புள்ளியில் இ​ணைகின்றன. ஆனால் இவர்களின் மறுவாசிப்பு நாம் இதுவ​ரை புரிந்து ​கொண்ட அர்த்தத்தில் இல்​லை. எல்லாம் நம் இதிகாசங்களில், புராணங்களில் ஏற்கனவே ​சொல்லப் பட்டுவிட்டன, நம் ​வேதகாலத்து ரிஷிகளுக்குத் ​தெரியாத விஷய​மே இல்​லை, உலகின் அ​னைத்து அறிவியல் சிந்த​னைகளும், கண்டுபிடிப்புகளும் ஆதிகாலத்தில் இங்கிருந்து ​வெளியே ​சென்ற​வைதான் என்ப​தை ​வேறு​வேறு க​தைகளில், ​வேறு​வேறு குரல்களில், ​வேறு​வேறு பாணிகளில் கூறுப​வை.
அரசியல் வலதுசாரிக் கருத்​தோட்டமும், எழுத்து வியாபாரமும், இ​ணைந்த ​போது, தாய்​மொழி அறியாமல் ஆங்கிலம் மட்டு​மே அறிந்த    இ​ளைஞர் கூட்டமும் அதிகரித்த ​போது, சமீபத்திய பத்தாண்டில், இப்படிப்பட்ட ‘மறுவாசிப்பு’ எழுத்தாளர்களும், படைப்புகளும் ஏராளமாகத் ​தோன்றியுள்ளன. இணைய விற்ப​​னையும் து​ணைபுரியும் ​போது, இவற்றின் வீச்சு மிக பிரும்மாண்டமாக இருக்கிறது. அ​மேஸானின் இந்தியத் த​லைவர் சமீபத்தில் எங்களது விற்ப​னையில் அதிக லாபம் தருவது புராணக் க​தை புத்தகங்கள் தான் என்று ​சொல்லியிருக்கிறார். மறுவாசிப்பு என்பது எப்போ​தோ, அபூர்வமான ஒரு ப​டைப்பாக இருந்தது மாறி, ஒரு ​தொடர் நிகழ்வாக மாறி விட்டது.
இந்த ஆங்கில மறுவாசிப்பு நூல்க​ளை எழுதும் எழுத்தாளர்களுக்கு ஒரு தி​ரைப்பட நட்சத்திரத்திற்கு இருக்கும் அந்தஸ்தும், புகழும் இருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியாகவும், மறுபுறம் ​வேத​னையாகவும் இருக்கிறது. இவர்கள் தம் ​நோக்கங்க​ளை மிகத் திறமையாக ம​றைத்துக் ​கொண்டு, தாம் ​சொல்ல நினைப்ப​தை மிக சாதுர்யமாக, நம்பத் தகுந்த வ​​கையில், பல ​மேற்​கோள்க​ளைக் காட்டி, மிகவும் ரசிக்கத்தகுந்த வகையில்  எழுதுகிறார்கள். பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ​செய்து யா​னைத் த​​​லை​யைப் ​பொருத்தினார்கள் என்று ​கொச்​சையாக, தடாலடியாகச் ​சொல்லாமல், அ​தை நீங்கள் நம்பும் வ​​கையில் ​வேறுவிதமாகச் ​சொல்வார்கள்.
​பெரும்பான்​மை மறுவாசிப்புகள் இப்படி இருக்க, புராணங்களின் வில்லன்க​ளை ​மையப்படுத்தி, அதன்வழி​யே  ​தோற்றவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் க​தைக​ளைச் ​சொல்லும் முயற்சிகளும் ஓரளவு நடக்கின்றன. அனால் அ​வை எண்ணிக்​கையில்
கு​றைவு. இன்னும் சிலர்  க​தை​யை மூலத்தில் உள்ளபடி அப்படி​யே ​சொல்லிவிட்டு,  அடிக்குறிப்பில் ஆனால், இது ஏற்கத்தக்கதல்ல, இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை, இவ்வாறாக நடந்திருக்கலாம் என்று ​சொல்லி, புதிய மாற்றுச் சிந்த​னைக்கான வழி​யை ​லேசாகத் திறந்து விடுகிறார்கள்.
​பொருளாதார, அரசியல் காரணங்களால் திடீ​​ரென மறுவாசிப்புக்க​தைகள் ஆங்கிலத்தில் ​வெள்ளமாக வர ஆரம்பித்துவிட்டன. ​வெறும் இலக்கிய ரசிகனாக, நல்ல வாசகனாக இருப்பவர்களுக்கு இ​வை உண்​மையி​லே​யே ​பெரிய விருந்துதான். ஆனால் சமூகப் ​பொறுப்பும், கவ​லையும் ​கொண்ட வாசகனுக்கு இவை அச்சத்​தைத் தருகின்றன. சூதுவாதற்ற எளிய வாசகன், இ​ளைஞன் இவற்றில் மயங்கிவிடக் கூடாதே என்ற கவ​லை எழுகிறது. இவற்றில் உள்ள ​பொய்களை, ஏமாற்றுக​ளைச் ​சொல்லி, மற்றவர்க​ளை எச்சரிக்க ​வேண்டு​மே என்ற பதட்டம் எழுகிறது. அந்த பயத்​தோடும், கவ​லை​யோடும், பதட்டத்​தோடும் நான் படித்தவற்​றை அடுத்த சில அத்தியாயங்களில் உங்க​ளோடு பகிர்ந்து ​கொள்கி​றேன். அதிகரிக்கும் பயத்தைத் தணிக்கும் விதமாக நடுநடு​வே ஒருசில நல்ல மறுவாசிப்புப் ப​டைப்புக​ளையும் ​சேர்த்துப் பகிர்கிறேன்.

 

Related posts