You are here
நிகழ்வு 

திருக்குறள் காலமும் கருத்தும்!

சேலம் “பாலம்” புத்தக நிலையத்தில் வாரந் தோறும் ஞாயிற்று கிழமை நடக்கும் வாசகர் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் 17.11.2013 அன்று எழுத்தாளர் பொ.வேல்சாமி கலந்து கொண்டார். தீதிருக்குறள் காலமும் கருத்தும் என்னும் தலைப்பிலான அவரது உரையிலிருந்து சில பகுதிகள்.

தற்போது தமிழின் அடையாளமாகக் கொண்டாடப் படும் தீதிருக்குறள்பீ 7ஆம் நூற்றாண்டுக்குப் பின் யாரும் அறியாத நூலாகவே இருந்தது. 19ஆம் நூற்றாண்டில்தான் கிறித்தவப் பாதிரியர்கள் அதன் சிறப்பை உணர்ந்து மக்களிடம் மீண்டும் அறிமுகப்படுத்தினர். நன்னூல், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழ் மக்களின் நாகரிகம் மீதான எண்ணங்களை வெள்ளையர்களிடம் அடியோடு மாற்றின. விவிலியத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல குறளின் கருத்துக்களை அவர்கள் பயன்படுத்தினர்.

தொடக்கத்தில் ஒரு சமண நூலாகவே அறியப்பட்ட திருக்குறள் மறுபடியும் புகழ் பெற்ற நூலானபோது சைவம் அது தன்னுடையது என்று வாதிட்டது. பலரும் தங்களுடைய சொந்த வளர்ச்சிக்காக அதைப் பயன்படுத்தினர்.

1949 இல் பதிப்பிக்கப்பட்ட கவிராஜ பண்டிதர் உரை, திருக்குறளை ஒரு ஜைன நூல் என்றே நிறுவியது. அருங்கலச் செப்பு போன்ற ஜைன நூல்களில் காணப்படும் தலைப்புகள் அப்படியே திருக்குறளிலும் காணப்படுகின்றன. 1932 இல் திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைன சித்தாந்த விளக்கமும் என்ற நூல் வெளியானது அதற்கு அரிய முன்னுரை ஒன்றை எழுதிய ஜனநாயகவாதியும் தொழிற்சங்கவாதியுடன் திரு.வி.க. சைவர்களை நோக்கி சில கேள்விகளைக் கேட்டிருந்தார். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு வந்த பக்தி இலக்கியங்கள் எவையும் குறளைக் குறிப்பிடாதது ஏன்? திருக்குறள் சைவ இலக்கியப் பெருநூல் எனில் திருவள்ளுவர் நாயன்மார்களுள் ஒருவராகச் சேர்க்கப்படாதது ஏன்? இவற்றுக்கான பதிலை சைவர்கள் தரவில்லை.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும்

போன்ற குறட்பாக்கள் எதனையும் ஆராய்ச்சி செய்யச் சொல்பவை. இது மதங்களுக்கு முற்றிலும் எதிரானது. ஆக இது மதநூலும் அல்ல.

உவமை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றைக் கூறி அதன் வழி தெரியாத ஒன்றை விளக்குவதாகும்.

பீலிபெய் சாகாடும்

என்ற குறளில் வரும் மயில் தோகை நாமறிந்தது என்றாலும் தீஒரு வண்டி நிறைய மயில் தோகையை ஏற்றுதல் என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

பதி, பசு, பாசம் என கடவுள், மனிதன், உலகம் ஆகியவற்றை விளக்கும் சைவசித்தாந்தத்தில் பதிக்கு, புலனடக்கம் கூறப்படவில்லை. ஆனால் தீபொறிவாயில்பீ ஐந்தவித்தான் என்ற குறள் அதைக் கடவுளுக்குக் கூறுகிறது.

புலால் உண்ணக்கூடிய, கள் அருந்தக் கூடிய தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி (சங்க இலக்கியம்) நெடுகிலும் இச் செய்திகள் உள்ளன. வறுத்த கறியை தெருக்களில் விற்கும் காட்சிகள் கூட பட்டினப்பாலை போன்ற நூல்களில் உள்ளன) இவற்றைத் தவிர்க்க வள்ளுவர் விடுக்கும் வேண்டுகோள்கள், 48 ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து வரும் 40-50 பாடல்களில் வரும் தனிமனித முன்னேற்றக் கருத்துக்கள் கவனிக்க வேண்டியவை.

அனைத்து சாதியினரையும் ஒன்றாகச் சேர்த்து வழிபாடு நடத்திய குற்றத்திற்காகவே தமிழ் அறிஞர் ஜி.யு.போப்; வேத நாயக சாஸ்திரி என்பவரால் துரத்தப் பட்டார் என்பது அன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலையைப் பிரதிபலிப்பதாகும்.

1930 இல் அதுகாறும் வந்த தமிழ் நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்து குறைந்த விலையிலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு திருப்பனந்தாள் காசி மடத்தில் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதற்காக ஒரு லட்ச ரூபாய் (அன்றைக்கு 1 பவுன் 10 ரூபாய் என்றால் இன்றைக்கு அதன் மதிப்பு 25 கோடி ரூபாய்) திரட்டப்பட்டது. நூல்களைப் பதிப்பிக்கும் பணி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சில நூல்களை அது வெளியிடவும் செய்தது. பிறகு அது செயல்படாமல் நின்றுவிட்டது. இப்போது அப்பல்கலைக் கழகத்தை அரசே ஏற்றுள்ளதால், இப்பணியை மீண்டும் தொடர தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். மேலும் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள பதிப்பிக்கப் படாத நூல்களையும் திபெத்தில் உள்ள ஏராளமான பௌத்தச் சுவடிகளையும் (தெ.பொ.மீ. இதைக் குறிப்பிட்டுள்ளார்) இங்கு கொணர்ந்து பதிப்பிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைக்குமாறு பொ.வேலுச்சாமி தமது உரையில் வாசகர்களைக் கேட்டுக் கொண்டார்.

சரவண மணியன்

Related posts