You are here
நிகழ்வு 

சத்யஜித்ரேயும் ஃபெலுடாவும்!

ஒரு படைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப் போனால், மற்ற மனிதர்களைவிட சற்று முழுமை பெற்ற மனிதன், தன் வாழ்க்கைச் சூழலிலிருந்தும், அதோடு பின்னிப் பிணைந்திருக்கும் அன்றாடக் காரியங்களில் இருந்தும் முழுமையாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவே எந்த ஒரு படைப்பிலும், ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப் பிரக்ஞை என்பது இடம் பெற்றே தீரும்… தனது படைப்புகள் மூலம், அந்த சமூகப் பிரச்சனைகள் பற்றிய பிரக்ஞையை மக்களிடையே ஏற்படுத்துவதுதான் படைப்பாளி பிரச்சனைகளைத் தொடுவதன் நோக்கம். பிரக்ஞையடைந்த மக்கள் தமக்கான தீர்வுகளைத் தாமே சிந்தித்து முடிவு செய்வார்கள்.

-சத்யஜித்ரே

ஒரு படைப்பாளியின் சமூகப் பொறுப்பு குறித்த கேள்விக்கு சத்யஜித்ரே மேற்கண்டவாறு பதிலளித்ததாகத் தமிழ்த் திரைப்பட இயக்குநரான பாலுமகேந்திரா தன் கட்டுரையன்றில் குறிப்பிடுகிறார். 1955 ஆம் ஆண்டில் ரேயின் முதல்படமான பதேர் பாஞ்சாலி வெளிவந்திருக்கிறது. அடுத்த 37 ஆண்டுகளில் 37 திரைப்படங்களையும் எண்ணற்ற ஆவணப் படங் களையும் இயக்கியவர் சத்யஜித்ரே. முதல் படமே 11 சர்வதேச விருதுகளைப் பெற்றது. 1992 இல் ரேயின் வாழ்நாள் சாதனைகளைப் பாராட்டி ஆஸ்கார் விருதும், இந்தியாவின் மிக உயரிய குடிமகன் விருதான பாரத் ரத்னாவும் வழங்கப்பட்டன.

ரேயின் திரைப்படங்களைப் போலவே அவர் எழுதியுள்ள நூல்களிலும் அவருடைய கலை மேதைமையும், வரலாற்று உணர்வும், அறச்சீற்றமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இளம் வயதிலேயே துப்பறியும் கதைகளில், குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களில் மிகுந்த ஈடுபாடுடைய வாசகராக ரே இருந்திருக்கிறார். இதே சாயலில் வங்காள ஷெர்லாக் ஹோம்ஸ் ஒருவரை ஃபெலுடா என்ற பெயரில் படைத்து 35 துப்பறியும் நாவல்களை ரே எழுதியிருக்கிறார். இவற்றில் 20 கதைகள் தற்போது புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடாக நூல் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் இவற்றை மொழிபெயர்த் திருப்பவர் வீ.பா.கணேசன்.

சந்தேஷ் என்ற சிறுவர் இதழை ரேயின் தந்தை வழித் தாத்தா உபேந்திர கிஷோர் ரே நடத்தி வந்திருக்கிறார். அவருக்குப் பின் ரேயின் தந்தை சுகுமார் ரே அதை நடத்தியிருக்கிறார். பொருளாதார இழப்புகளால் இவ்விதழ் நின்று போனது. 1961ஆம் ஆண்டிலிருந்து சத்யஜித்ரே மீண்டும் சந்தேஷ் இதழை ஆரம்பித்து நடத்தினார். டார்ஜீலிங்கில் ஓர் அபாயம் தான் முதலாவது ஃபெலுடா துப்பறியும் கதை. 1965 இல் சந்தேஷில் வெளியான இக்கதைக்கு வங்காள வாசகர்களிடம் கிடைத்த வரவேற்பு ரேயைத் தொடர்ந்து எழுதத் தூண்டியிருக்கிறது. மொத்தம் 35 கதைகளுள் ரேயின் ஆயுட்காலத்திலேயே வெளியானவை – 34 கதைகளாகும். கடைசிக் கதையான மாய உலகின் மர்மம் ரேயின் மறைவுக்குப் பின் 1995 இல் வெளியானது.

ஃபெலுடாவும், அவரது ஒன்றுவிட்ட சகோதரன் தபேஷ் இருவருமே இக்கதைகளின் பிரதான பாத்திரங்கள். தபேஷ் கதை சொல்லியாக வந்து சம்பவங்களை விவரிக்கிறார். தங்கக்கோட்டை கதையில் தொடங்கி, பிந்தைய கதைகளில் லால்மோகன் கங்குலி என்ற ஒரு கதாபாத்திரம் மூன்றாவதாக வரத் தொடங்கியுள்ளது. வங்க மொழியில் ஜனரஞ்சக மர்மக்கதை எழுத்தாளராகப் புகழ் பெற்ற ஜடாயு என்ற புனைப்பெயர் கொண்டவராக கங்குலி சித்திரிக்கப்படுகிறார்.

பிள்ளையாருக்குப் பின்னே ஒரு மர்மம், தங்கக் கோட்டை ஆகிய ஃபெலுடா கதைகளை அடிப்படையாகக் கொண்டு ரே எடுத்த ஜொய் பாபாஃபெலுநாத் சோனார் கெல்லா ஆகிய இரண்டும் சிறுவர்களுக்கான திரைப்படங்கள். ரேயின் புதல்வர் சந்தீப் ரேயும் சில ஃபெலுடா கதைகளைத் திரைப்படங்களாக் கியிருக்கிறார்.

10 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களும், பதின் பருவத்தினருமே இக்கதைகளின் இலக்கு வாசகர்கள். அதே வேளை, பெரியவர்களும் இவற்றை விரும்பிப் படிக்கின்றனர். இந்நூல்கள் முப்பத்தைந்தில் இருபதை ஒரே நேரத்தில் வெளிக் கொண்டு வந்திருப்பது பாரதி புத்தகாலயம் தமிழுக்குத் தந்த ஒரு முக்கியப் பங்களிப்பு எனலாம். இவற்றைத் தமிழாக்கித் தந்திருப்பவர் வீ.பா. கணேசன். 1978 ஆம் ஆண்டில் பாட்டாளிகள் வெளியீடு மூலம் தோழர்கள் பாலாஜியும் பாண்டியனும் தொடர்ந்து இடது சாரி அரசியல் – தத்துவ நூல்கள் பலவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தனர். முதன் முதலில் வீ.பா.கணேசன் மொழி பெயர்த்து வந்த சிறு நூல்கள் ஸ்டாலின் எழுதிய ஸ்தாபனத்தைப் பற்றி.. என்பதாகும் அதே ஆண்டில் மாவோவின் கட்சி ஊழியர்கள் பற்றி என்னும் நூலும் டிமிட்ரோவின் கட்சி ஊழியர்கள் பற்றி என்ற நூலும் வீ.பா.கணேசனால் தமிழாக்கம் செய்யப்பட்டு பாட்டாளிகள் வெளியீடு மூலம் வெளியாகின. 1980 இல் புகழ்பெற்ற வங்காளத் திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் எழுதிய சினிமா ஒரு பார்வை என்ற முக்கியமான நூலையும் தமிழில் தந்தார். பிரபாகர் சான்ஸ்கிரி-யின் மார்க்சியப் பார்வையில் அம்பேத்கர் மற்றும் துவாரகா நாத் கோட்னிஸ் எழுதிய வாழ்க்கை வரலாறு ஆகியவையும் அடுத்தடுத்து வெளியாகின.

1983இல் காஸ்ட்ரோ கியூப ராμவ நீதிமன்ற விசாரணையில் முன் வைத்த வாதமான புகழ்பெற்ற வரலாறு என்னை விடுதலை செய்யும் நூலும், 1982 இல் ஃபாசிஸ்ட் நீதிமன்றத்தில் டிமிட்ரோவ் நூலும் வீ.பா.க. மொழி பெயர்த்தவை. 2004இல் எட்கர் ஸ்னோ சீனத் தலைவர் மாவோவைப் பற்றி உருவாக்கிய புகழ்மிக்க நூலான சீனவானில் சிகப்பு நட்சத்திரம் வெளியானது. 2005இல் சுகுமால் சென் எழுதிய இந்திய தொழிலாளி வர்க்கம் உருவாகி வளர்ந்த வரலாறு வந்தது. 2008 இல் மேற்கு வங்கத்தின் முதல்வராக 25 ஆண்டுகள் பணியாற்றி, தானாக முன்வந்து ஓய்வும் பெற்ற அமரர் ஜோதிபாசுவின் சுயசரிதையை Ôநினைவிற்கு எட்டியவரை.. என்ற தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார் கணேசன்.

மலேசியத் தமிழ் நாவல் இலக்கியத்தின் தோற்றமும் – வளர்ச்சியும் என்ற நூலை அவர் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததும் குறிப்பிடத் தக்கது. மேற்கண்ட 13 புத்தகங்களைத் தவிர நூல் வடிவம் பெறாமலே எண்ணற்ற கட்டுரைகளை ஆங்கில மார்க்ஸிஸ்ட் இதழிலிருந்து தமிழ் மார்க்ஸிஸ்ட் இதழுக்கு மொழியாக்கித் தந்திருக்கிறார். 1978-2012 வரையிலான காலகட்டத்தில் இந்தியத் தொழிற்சங்க மையம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், விவசாயிகள் சங்கம் முதலான கட்சி, வெகுசன அமைப்புகளின் மாநாட்டு ஆவணங் களையும் ஏராளமாகத் தமிழில் மொழியாக்கம் செய்து வந்திருப்பவர் வீ.பா.கணேசன்.

ஃபெலுடா கதைகள்- நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு மூத்த பத்திரிகையாளரும், மொழி பெயர்ப்பாளருமான மயிலை பாலு தலைமை வகித்தார். கதை எப்போது தோன்றியது என்று யாராலும் சொல்ல முடியாது. அது தோன்றிய காலத்தை வரையறுத்துச் சொல்ல வாய்ப்பில்லை. கதைக்குக் காலுண்டா? கிடையாது. எங்கும், எப்படியும், எந்த வடிவிலும் செல்லும். நம்மிடம் கதை மரபு ஏகப்பட்ட வீச்சுடன் உள்ளது. பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன், பீர்பால் என இவையெல்லாம் நிறைய உண்டு. Ôகுழந்தைகளுக்காக நாம் எழுத முடியாது. குழந்தைகளே எழுதினால் நன்றாயிருக்கும். ஆனால் அவர்களால் எழுத முடியாது, சொல்லுவார்கள்; நாம்தான் கேட்டு எழுதி வெளியிட வேண்டும் என மயிலை பாலு தம் கருத்துகளை முன்வைத்தார்.

தமிழில் சினிமா ரசனை என்றொரு சிறந்த நூல் உட்பட படைப்புகளின் மூலமும், சினிமா விமரிசனங்களின் மூலமும் திரைப்படரசனை மட்டம் உயருவதற்கு ஒரு கருத்தியல் தளத்தை அமைத்தவரான அம்ஷன்குமார் சுருக்கமான ஒரு வாழ்த்துரை வழங்கினார். ரேயின் ஆளுமை, ஃபெலுடா கதைகளை எழுதி அவர் இயங்கிய எழுத்துலகம், சந்தேஷ் இதழ், ரேயின் பிற படைப்புகள் பற்றிய தகவல்களைத் தந்தார். ஃபெலுடா கதை வரிசை நூல்களை கமலாலயன் வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும், அம்ஷன்குமாரும் பெற்றுக் கொண்டனர். பின் எஸ்ரா நிகழ்த்திய உரை:

ரே பதேர் பாஞ்சாலி பட இயக்குநராக அறிமுகமாகிப் புகழ் பெற்ற பன்முக ஆளுமையாளர். சிறந்த இசையமைப்பாளர், ஓவியர், திரைப்படங்களின் கலை, வடிவமைப்புகளை உருவாக்கியவர், விளம்பரப் பலகைகள், பல வங்கமொழிப் புத்தகங்களின் மேலட்டைகள் ஆகியவற்றையும் வடிவமைத்துத் தந்தவர். இவர் படைத்த ஃபெலுடாவை, பதின் பருவத்தினருக்கான வங்காள ஷெர்லாக் ஹோம்ஸ் என்று கூறலாம். தமிழில் சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் போல, இக்கதைகளில் ஃபெலுடாவும், தபேஷ§ம் இடம் பெறுகின்றனர்.

பொதுவாக, உலகெங்கிலும் துப்பறியும் கதைகள் எல்லா வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன. மிகப் பிரபலமான அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள் உட்பட எல்லாத் தரப்பினரும் இக்கதைகளின் வாசகர்களே. ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற பிரபலமான துப்பறியும் நிபுணர்களின் கதைகள் உலகெங்கிலும் கோடிக்கணக்கில் விற்பனையாகின்றன என்று உலகளாவிய பெரிய பதிப்பகங்களின் செய்திகள் கூறுகின்றன.

ஏன் இக் கதைகளின் மீது இப்படியோர் ஆர்வம்? 100 ஆண்டுகட்கு முன் ஒரு கொலையை, திருட்டைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் நேரடியாகக் கண்ட சாட்சியோ, மிக வலுவான கண்கூடான சான்றாதாரமோ ஏதாவது கிடைத்தால் மட்டுமே முடியும். 18 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சியும், அறிவியல் கண்டு பிடிப்புகளும் ஏற்பட்ட பிறகுதான் குற்றங்களை புலனாய்வு செய்வதற்குரிய பல நவீன சாதனங்களும், முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பிரிட்டிஷ்காரர் களில் பெரிய பிரபுக்களின் நடுவிலிருந்துதான் ஆரம்ப காலங்களில் போலீஸ் அதிகாரிகள் உருவாகி வந்தார்கள். சாதாரண மனிதர்கள் இப்பொறுப்புகட்கு வர முடியாது. இந்தப் போலீஸ் அதிகாரிகளால் கண்டு பிடிக்க முடியாமற் போனவற்றை ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற தனியார் துப்பறிவாளர்கள் கண்டுபிடித்துத் தருவதாக நாவல்கள் வரலாயின. மனித மனதில் அடிப்படையான ஓர் உணர்வு இந்த நாவல்களைப்

நூல் வெளியீட்டு விழாவில் இடமிருந்து மயிலை பாலு, கமலாலயன், அம்சன்குமார், எஸ்.ராமகிருஷ்ணன், வீ.பா.கணேசன்.13 புதிய புத்தகம் பேசுது | டிசம்பர் 2013

படிப்பதில் ஈடுபாடு கொண்டதாக இருக்கிறது. ஜே.கே. என்ற ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரு மிகப் பெரிய மெய்யியல் சிந்தனையாளர், ஆனால் காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதில் தனக்கு ஈடுபாடு உண்டு என்று அவரே சொல்லியிருக்கிறார். தமிழில் தேவன் எழுத்தின் மூலம் உருவான துப்பறியும் சாம்பு ஃபெலுடாவின் சம காலத்தவர்தான். இவர்கள் -துப்பறிவதில் வல்லவர்கள். விநோதமான சில இயல்புகளைக் கொண்டவர்கள். மற்றவர்கள் கவனிக்கத் தவறுகிறவற்றை இவர்கள் கூர்ந்து கவனித்து அவற்றிலிருந்து தமது துப்பறியும் நுμக்கத்தால் ஆதாரங்களைத் திரட்டுகிறவர்கள். இவர்களைப் பார்த்துத்தான் பின்னாட்களில் தமிழ்வாணன் Ôசங்கர்லால்Õ என்ற துப்பறியும் நிபுணரை உருவாக்கினார்.

சத்யஜித்ரே யிடமும் இப்படியான இரட்டைப் பரிமாணங்களைக் காணலாம். ஒருபுறம் அவரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கலைத் திரைப்படங்கள்; மறுபுறம் ஃபெலுடா என்ற துப்பறியும் நிபுணரை உருவாக்கியது. உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஸ்பீல்பெர்க் எடுத்த ஏலியன் படம் அந்நிய கிரகத்திலிருந்து பூமிக்கு வரும் வினோத உயிரினங்கள் பற்றிய கற்பனைத் திரைப்படம். இதை அவர் உருவாக்குவதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே இதேபோல் வேற்றுகிரக வாசியைப் பற்றிய கற்பனைத் திரைப்படம். இதை அவர் உருவாக்குவதற்குப் பல ஆண்டுகட்கு முன்பே இதேபோல் வேற்றுகிரக வாசியைப் பற்றிய சில கற்பனைகளைக் கோட்டோவியங் களாக ரே தீட்டியிருந்திருக்கிறார். அவற்றில் ஏலியன் போன்ற ஒரே ஓர் ஓவியத்தைத் தான் பார்த்திருந்ததாக ஸ்பீல் பெர்க் சொல்லியிருக்கிறார். அப்படியான ஒரு கற்பனைக்கு ரே முன்னோடியாக இருந்திருக்கிறார்.

Trust seeking என்பது தத்துவ மரபு சார்ந்தது; மெய்யியல் உண்மையைத் தேடுவது. துப்பறியும் நாவலிலும் இதேபோல், புதைந்திருக்கும் ஓர் உண்மையைத் தேடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. கொலை என்ற அம்சத்தைப் பற்றிய கதைகளை இரண்டு வகையிலும் உருவாக்கலாம். ஷேக்ஸ்பியரின் மேக்பெத், தாஸ்தாவ்ய்ஸ்கியின் குற்றமும்-தண்டனையும் போன்ற தீவிரமான ஆழ்மன உளவியல் சார்ந்த கதைகளாகவும் எழுதலாம்; அல்லது துப்பறியும் நாவல்களில் வருவது போல சாதாரண, ஜனரஞ்சகமான கதைகளின் மூலமும் சொல்லலாம்.

உலகின் எல்லா மொழிகளின் துப்பறியும் கதைகளிலும் ஒரே ஒரு சொல் மட்டும் அனைத்து மொழிகளுக்குமான ஒற்றைச் சொல்லாக அமைந்திருக்கிறது. அது – பிளாக் மெயில் இந்தச் சொல்லுக்கு எந்த மொழியிலும் மாற்றுச் சொல் கிடையாது; ஒருவரின் இரகசியங்களை அறிந்து வைத்துக் கொண்டு அவரை மிரட்டி பணமோ- வேறு ஆதாயமோ அடைவது போன்ற விளக்கங்களை வேண்டுமானால் அவரவர் மொழிச் சொற்களில் தரலாமே தவிர பிளாக் மெயில் என்ற சொல்போல நேரடியான பிறமொழிச் சொல் கிடைப்பதில்லை.

சத்யஜித் ரே எழுதிய இந்த ஃபெலுடா வரிசைக் கதைகளில் துப்பறிவது தான் கதையம்சம்; என்றாலும் ரேயின் வரலாற்று ஞானத்தை – உணர்வை, பிரம்ம சமாஜக் கொள்கைகளின் பால் அவருக்கிருந்த சார்பு நிலையை, மதம் – கடவுள் – போலிச் சாமியார்கள் சார்ந்த மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் எள்ளி நகையாடலைக் காண முடிகிறது. பம்பாய்க் கொள்ளைக்காரர்கள் கதையில் அவருக்கு நன்கு பரிச்சயமான பம்பாயின் சினிமாக்காரர்கள் – நடிகர்கள், படத்தயாரிப்பாளர்கள் – போன்றவர்களையே கொள்ளைக்காரர்கள் என்று சித்தரித்திருக்கிறார். கேங்டேக் கில் வந்த கஷ்டம் – கதை, உண்மையில் சத்யஜித் ரேவுக்கு வந்த கஷ்டம்தான். சிக்கிம் நாட்டைப் பற்றி ஓர் ஆவணப்படத்தைப் படமாக்குவதற்கு ரே பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. அப்படி அரும்பாடுபட்டு அவர் உருவாக்கிய படத்தை 35 ஆண்டுகாலமாக எங்கும் திரையிட முடியாதபடி தடை இருந்தது.

ஃபெலுடா கதைகள் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு புராதனமான கலைப் பொருள் திருடப்படுவது என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. ஜனசத்ரு என்ற தன் கடைசிப் படத்தில் கோயில் – குளம் சார்ந்து வரும் கதையிலும் கலைப்படைப்புகளைத் திருடிப் போகிற பாத்திரங்களைப் படைத்திருக்கிறார். பெங்கால் சர்க்கஸ் – ஒரு பிரபலமான சர்க்கஸ் நிறுவனம். ரஷியன் சர்க்கஸ் தான் அதன் முன்னோடி. இன்று அத்தகைய நிறுவனம் ஏதும் இல்லை. அப்படியான சர்க்கஸ் உலகம் – அதன் உரிமையாளர் சார்ந்து ஒரு கதையில், இன்றைய தலைமுறை அறிந்திராத பல சமகாலப் பதிவுகளை ரே தந்திருக்கிறார்.

வங்காளத்தின் மேன்மைக்குக் காரணமான பலரை, வரலாற்று நூல்களில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட பலரை -இந்தக் கதைகளினூடே ஒற்றை வரிகளில் எழுதிச் சென்றிருக்கிறார் ரே. சத்யஜித்ரேவுக்குத் தெரிந்த அத்தனையும் ஃபெலுடாவிற்குத் தெரிந்திருந்தன என்று சொன்னால் மிகையில்லை. இவற்றைக் குழந்தைகள் படித்துப் புரிந்துகொள்ள இயலாது. 10-18 வயதுப் பதின் பருவத்தினருக்கானவை இவை. நாமும் விரும்பிப் படிக்கலாம்.

ஏற்புரையாற்றிய வீ.பா.கணேசன், இம்மொழி பெயர்ப்புகளைத் தான் மேற்கொள்ளக் காரணமாயிருந்தவரான குண்ணாங் குண்ணாங் குர்ர் என்ற அமைப்பின் செல்வம், அம்ஷன்குமார் ஆகியோருக்கும் நூல்களை வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கும் நன்றி தெரிவித்தார். சுங்க்கு என்ற மற்றொரு கிறுக்குத் தனமான அறிவியலாளரை மையமாகக் கொண்ட ரே யின் வேறு 40 கதைகளையும், ரே யின் வாழ்க்கை வரலாற்றையும் மொழி பெயர்த்து வருவதாகத் தெரிவித்தார். இறுதியில் பாரதி புத்தகாலயம் சார்பில் சிராஜுதின் நன்றி தெரிவித்துப் பேசியதுடன் விழா நிறைவடைந்தது.

Related posts