You are here
Ullam Negizhum Oriya Kadhaigal நூல் அறிமுகம் 

உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள் – த. முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

நூலின் பெயர் : உள்ளம் நெகிழும் ஓரியக் கதைகள் ஆசிரியர் : த. முனைவர் ஆனைவாரி ஆனந்தன் விலை – ரூ.125/- ஒரிசாவின் கோரபுட் பகுதியில் மலைவாழ் மக்களிடையே இன்றும் வானொலி இருக்கிறது. தொலைக்காட்சி, கணினி, கைபேசி கிடையாது. இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் வெளி ஆட்கள் மிக அரிதாகவே வருகிறார்கள். கோபிநாத் மொகந்தி அந்த பகுதிக்கு ஒரு துணை நீதிபதியாக வெளி உலகிலிருந்து சென்று அவர்களோடு தோழமையோடு கலந்து அவர்களது மலைப்பகுதிக் கதைகளை தொகுத்துள்ளார். அம்ரிதரா சந்தனா மற்றும் பரஜா போன்றவை நாடு முழுக்க பிரபலமாகிவிட்ட ஒரிய கதைகள். மலைவாசிகள் உலகின் சடங்கு சம்பிரதாயங்கள் கதைகளின் ஊடாக இடம் பெறுகின்றன. மரங்களே கடவுள். மழையே வரம். சின்ன சின்ன வேண்டுதல் குட்டி விலங்குகளே பலி. மனித நேயமே வாழ்க்கை. மதிமதலா கதையில் கதாநாயகிகள் ஒரு இலட்சியவாதி. இந்த கதைகளில்…

Read More
Jeyandhan Book மற்றவை 

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன்

ஜெயந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொ. அகரமுதல்வன் பதிப்பகம் –  டிஸ்கவரி புக்பேலஸ் விலை. ரூ.200 ஜெயந்தன் எனும் சிறுகதை ஜாம்பவானை இளைய தலைமுறை அவசியம் வாசிக்க வேண்டும். தமிழ்ச் சிறுகதைக்கு எழுபதுகளில் அறிமுகமானவர் ஜெயந்தன். ஜெயகாந்தனை ஜி. நாகராஜனை சேர்த்து குழைத்த சுவை. ஆனால் எதில் மேலிட இருக்கும் என்பது ஒரு திரில். இத்தொகுப்பில் உள்ள 18 கதைகளையும் வாசித்து எடுப்பது ஒரு பயிற்சிப் பட்டறைபோல வாழ்க்கையை அதன் முடைநாற்றங்களோடும் ஜீவமரணப் போராட்டங்களோடும் நேருக்கு நேர் சந்திக்கும் அனுபவம். ஜெயந்தனின் கதைகளில் ஒரு வகை ஆழ்மனவெளி புதையுண்டு இருப்பதை நாம் காணலாம். ஆதிக்கங்கள் நிறைந்திருக்கும் மிகவும் வெட்கக்கேடான சமூகத்தையும், அதையே தனக்கு ஆதரவாக மாற்றிக் கொள்ளும் ஆணவத்தை, கவுரவத்தை பகடி செய்வது அவருக்கே வந்த கலை. சம்மதங்கள், மனச்சாய்வு, துக்கம் போன்ற கதைகளை வாசித்தால் பல நாட்கள்…

Read More
Melum Sila Sorkal கட்டுரை 

மேலும் சில சொற்கள் – நவநீதன்

ஒரு எழுத்தாளனின் உள்ளக்கிடங்கில் எப்போதும் இச்சமூகத்திற்கு சொல்லக்கூடிய, அதனோடு உரையாடல் நடத்தக்கூடிய எண்ணற்ற சங்கதிகள் என்றுமே நிரம்பியிருக்கும். தனது படைப்பின் வழியேயும், உரையாடல்களின் வழியேயும் அதை அவன் பகிர்ந்துகொள்கிறான். அப்படியாக நடத்தப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பே மதுசுதன் அவர்கள் தொகுத்து இந்த நேர்காணல்கள். அனலி பதிப்பம் வெளியிட்டுள்ள புத்தகம் பேசுது, தீக்கதிர், இளைஞர் முழுக்கம் போன்றவற்றில் வெளியான நேர்காணல்களைத் தொகுத்து புத்தகமாக்கியுள்ளனர் படைப்பு உருவாக்கப்பட்ட காலத்தையும் நேர்காணல் கண்ட காலத்தையும் இணைக்கும் ஒரு கண்ணியாக கேள்விகளும் அதற்கான பதில்களும் அமைந்துள்ளன. நேர்காணலில் பங்குபெற்ற எழுத்தாளுமைகளின் படைப்பை வாசிக்க ஒரு உந்துதலை தருகிறது என்பதே இத்தொகுப்பின் சிறப்பாகும். ‘உம்மத்’ நாவலின் மூலம் உலகில் தமிழ் இலக்கியம் பரவலாக அறியப்பட்ட இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா ஸயித் தனது நாவல் குறித்த அனுபவங்களையும், போருக்கு பின்னான இலங்கையின் அரசியல் சூழலையும் பகிர்ந்து கொள்கிறார்….

Read More
Kongai book நூல் அறிமுகம் 

வலியோடு விமர்சனத்திற்கு உள்ளாகும் உடலரசியல் – மயிலம் இளமுருகு

வாழ்விலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியலும் தோன்றுகின்றன. நாம் உலகில் காணும் ஏதேனும் ஒரு கதாபாத்திரம் கூட கவிதையில், சிறுகதையில், நாவலில், பிரதிபலிக்கிறது. அதேசமயம் கற்பனை கதாபாத்திரங்களின் புனைவின் வழியாக பல்வேறு விஷயங்களைப் பேசுவதாக இலக்கியங்கள் தோன்றியுள்ளன. சமூக மாற்றங்களையும் எண்ணங்களையும் மாறுபட்ட பார்வையில் தருகின்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் அவ்வப்போது எழுதப்பட்டு வருகின்றன. இவற்றைப் பேசுவதும் இன்றைய சூழலில் நடந்தேறிக் கொண்டுதான் வருகிறது. அவ்வகையில் தற்போது வெளிவந்திருக்கும் ‘கொங்கை’ என்ற நாவல் அண்டனூர் சுரா அவர்களால் எழுதப்பட்டது. இந்நாவல் குறித்து ஆசிரியர் பின்வருமாறு கூறியுள்ளார். “உண்மையில் இப்படியான ஒன்று நடந்துவிடக்கூடாதுதான். இது என் விருப்பம் மட்டுமல்ல. ஆனால் ஒரு மூலையில் யாரோ ஒரு சிறுமிக்கு நடந்த இச்சம்பவம்; என் மூலையில் யாருக்கும் எப்போதும் நடக்கக்கூடும் என்பது வெறும் பயமூட்டல் அல்ல” என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே ஒரு…

Read More
Charlie Chaplin நூல் அறிமுகம் 

ஹிட்லரின் மனது! ப. திருமாவேலன்

1980களின் மத்தியில் வெளியான ‘தினசரி’ நாளிதழின் நடுப்பக்கக் கட்டுரைகள் மிகப் புகழ் பெற்றவை. ஜேம்ஸ் பிரெடெரிக் நடத்திய நாளிதழ் இது. திடீரென்று ஒரு நாள் ‘தினசரி’ நாளிதழ் எங்கள் வீட்டில் நிறுத்தப்பட்டது. அதற்கு என்ன காரணம் தெரியுமா? சட்டமன்ற மேலவைக்கு நடந்த தேர்தலில் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனை எதிர்த்து ஜேம்ஸ் பிரெடெரிக் போட்டியிட்டார். எனது தந்தையார், பி.டி.ஆர். பழனிவேல் ராஜனுக்காக வேலை பார்த்தார்கள். அதனால்தான் ‘தினசரி’ நாளிதழ் திடீரென்று நிறுத்தப்பட்டது. இந்த நாளிதழ் மூலமாக நான் அறிந்து கொண்ட மனிதர்கள் இரண்டு பேர். ஒருவர் ரஜினீஷ். மற்றொருவர் ஹிட்லர். ரஜினீஷை இன்றும் தொடர்கிறேன். ஹிட்லரை படிக்கப் படிக்க நிராகரித்துக் கொண்டிருக்கிறேன். ‘தினசரி’ நாளிதழ் மூலமாக அறிமுகமான அடால்ப் ஹிட்லரைத் தேடிப் படிக்கத் தொடங்கினேன். எங்களது கோவில்பட்டி நூலகத்தில் ‘பலரால்’ படிக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியலில் இருந்த புத்தகம் ஒன்று…

Read More
Ilaiyor Ilakiyam Kalandhuraiyadal ஒரு புத்தகம் பத்து கேள்விகள் 

‘இளையோர் இலக்கியம்’ கலந்துரையாடல்

கருத்தாளர்கள்: எழுத்தாளர் தமிழ்ச்செல்வன்,உளவியலாளர் சுமதி சந்திரசேகரன் அருணா ரத்னம், சாலை செல்வம், விழியன், பிரியசகி, கலகலவகுப்பறை சிவா,விஷ்ணுபுரம் சரவணன், ஜெயஸ்ரீ, வித்யா, அக்சயா, நாகராஜன், ராஜன் போன்ற கருத்தாளர்கள் இலக்கியம் பற்றிப் பறிமாறிக்கொண்ட நிகழ்வு இது. 15.09.18 – கலந்துரையாடலும் முடிவுகளும் இளையோருடனான அனைவரின் அனுபவங்களும் இந்நிகழ்வில் பகிரப்பட்டன. இளையோருக்கான கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், பாடல்களின் தேவை குறித்தும் , அவை பிரச்சாரங்கள், முன்மாதிரிகள், வழிகாட்டுதல்கள் கொண்டவையாக இருக்கலாம் ஆனால் அறிவுரை கூறுவதாகவோ அல்லது முடிவுகளைத் திணிப்பதாகவோ இருக்கக் கூடாது என்றும் பேசப்பட்டது. ஏற்கனவே வெளிவந்த சிறந்த படைப்புகளை மீண்டும் மறுபதிப்பு செய்யலாம் என்று பேசப்பட்டது. மேலும் ஆங்கிலத்தில் Young Adult Literature / Juvinile Literature எப்படி இருக்கின்றது, எது பரபரப்பாக விற்பனையாகின்றது, அதன் பொதுத்தன்மைகள் பற்றி விழியன் கூறினார். அழகிய பெரியவன், தொ….

Read More
vanmurai ella vakupparai 1 கட்டுரை 

குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்…? வி.என். சுப்பிரமணியன்

27.05.2017 அன்று ‘வன்முறையில்லா வகுப்பறை’ என்ற புத்தகம் வாங்கினேன். பேருந்தில் பயணம் செய்தபோது சில பக்கங்களைப் படித்து வந்தேன். மேலும் வீட்டிற்கு வந்து படித்தேன். நான் ஒரு தொழில் நுட்பக் கல்லூரியில் 17 ஆண்டுகளாக துறைத் தலைவர் பதவி வகித்தேன். தற்போது 8 ஆண்டுகளாக நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ‘வன்முறையில்லா வகுப்பறை’ புத்தகத்தை ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது என்னை அந்தப் புத்தகத்தில் உள்ள செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே வந்தேன். வன்முறையில்லா வகுப்பறை என்ற புத்தகத்தில் உள்ள சில செய்திகளையும், அதில் உள்ள புள்ளி விபரங்களையும் தெரிந்த பின் அதிர்ச்சி அடைந்தேன். ‘‘குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்…?’’ என்ற தலைப்பில் கூடியுள்ள தேசிய கல்வி கணக்கெடுப்பு (2009) தரும் இறுதி முடிவு என்னை அதிர்ச்சி அடைய செய்கிறது. ‘‘உங்கள் குழந்தை பள்ளியில் பாதிக்கப்படுகிறதா..?’’…

Read More
வட்டார மொழி இலக்கியம் சா.க. பக்கம் 

வட்டார மொழி இலக்கியம் – சா. கந்தசாமி

இலக்கியத்தில் வட்டார மொழி இலக்கியம் என்றொன்று உண்டா என்றால், இல்லை, இல்லவே இல்லையென்று சொல்லிவிடலாம். இலக்கியம் மொழியில் எழுதப்படுகிறது. என்றாலும், மொழியே இலக்கியம் இல்லை என்கிறபோது, ஒரு மொழியைத் திருத்தமாகக் கற்காதவர்கள், கூட்டமாக இன்னொரு மொழி பேசிக் கொண்டு புலம் பெயர்ந்து வந்தவர்கள் வாழும் இடத்து மொழியோடு தங்கள் மொழி சொற்கள் சிலவற்றைச் சேர்த்துக்கொண்டு பேசும் சொற்களைப் புராதனமாகக் கொண்டு பேசுவது வட்டார இலக்கியமாகிவிடாது. மனிதர்களே மொழியால் அறியக் கூடியவர்கள் இல்லை. அவர்களின் ஞானம், உளவியல், ஆளுமை மொழி வழியாகவே அறியப்படுகிறது. வட்டார மொழி என்பது மாறக்கூடியது. பத்தாண்டு காலம் கூட ஒரு வட்டாரமொழி அப்படியே பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருவது இல்லை. கல்வி, புலம் பெயர்வு, தொழில், வாணிபம் என்பது வட்டார மொழியை இல்லாமல் அடித்துவிடுகிறது. வட்டார மொழியைப் பேசிக் கொண்டு நகரத்திற்குப் புலம் பெயர்ந்து வருகிறவர்கள்…

Read More
murkamibook கட்டுரை 

எழுத்து எனும் மராத்தான் – ச.சுப்பாராவ்

அவர் அல்ட்ரா மராத்தான் என்ற 100 கிமீ தூர ஓட்டத்தை ஓடியவர். உலகெங்கிலும் பல மராத்தான்களை ஓடியவர். மராத்தான் அலுத்துப் போனபிறகு, ட்ரைதலான் போட்டிகளில் களமிறங்கியவர். ட்ரைதலான் என்றால் முதலில் ஒன்றரைக் கிமீ நீச்சலடிக்க வேண்டும். அப்படியே நீரிலிருந்து வெளியே வந்து நாற்பது கிமீ சைக்கிள் ஓட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு, சும்மா ஒரு 10 கிமீ ஓடினால் ட்ரைதலான் முடிந்துவிடும். வேறு பத்திரிகைக்கு அனுப்பவேண்டிய விளையாட்டு வீரர் கட்டுரை தவறுதலாக இங்கே வந்துவிட்டதோ என்று நினைக்க வேண்டாம். இதையெல்லாம் செய்பவரும் ஒரு எழுத்தாளர்தான். புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமிதான் அவர். ஓட்டப் பந்தயங்கள் மீதான அவரது பெருவிருப்பத்தையும், அது அவரது எழுத்திற்கு எவ்வாறு துணைபுரிகிறது என்பதையும் மிக அழகாக அற்புதமாக ஆனால் சுருக்கமாக அவர் எழுதியிருக்கிறார். ஓடுவதைப் பற்றிப் பேசும்போது நான் எதைப் பற்றிப்…

Read More
Puthagam Pesuthu Wrapper தலையங்கம் 

மொத்தத்தில் வாசிப்பே வாழ்க்கை புத்தகங்களே வாசஸ்தலங்கள்

மொத்தத்தில் வாசிப்பே வாழ்க்கை புத்தகங்களே வாசஸ்தலங்கள் தமிழகத்தில் 100 நூலகங்களில் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என்று தமிழகத்தில் நூலகத்துறையை தன் அமைச்சகத்தோடு வைத்திருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். யாழ்ப்பாணம் சென்று லட்சம் புத்தகங்களை யாழ் நூலகத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் சிறப்பான சமீபத்திய நிகழ்வான சென்னை புத்தக திருவிழா 2018ன் நிறைவு விழாவில்தான் அவர் யாழ் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் அறிவிப்பை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். என்னதான் ‘வைஃபை” வசதி வந்து கணினியில், பிடிஎப் வடிவத்தில் நூல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டாலும், புத்தக வடிவம் அச்சான நூல் வடிவில் கையில் சுமந்து வாசிப்பதே சிறப்பானது என்பதில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை.. அதனால்தான் யுனெஸ்கோ தொழில்நுட்ப அறிவு பெறுதல் என்பதை கல்வியறிவு பெறுதல் எனும் படிநிலைக்கு அடுத்தபடியாகவே வைக்கிறது. உலகிலேயே கல்வியறிவு மற்றும் செலவு செய்து தன் வாசிப்பு…

Read More