மீண்டெழும் மறுவாசிப்புகள் – 2 ஹரப்பாவில் அட்டாச்டு பாத்ரூம்

ச. சுப்பாராவ் உயர்ந்த கலாச்சாரமும், ​தொழில்நுட்ப அறிவும் உள்ள ஒரு சமூகம். ஆனால் அந்த சமூகத்திற்கு எதிரிகளின் ​தொல்​லையால் நிம்மதியாக இருக்க முடியவில்​லை. அந்த சமூகத்​தைக் காக்க ஒருவன் வருவான் என்று அவர்களது புனித நூல்களில் ​பெரியவர்கள் ​​சொல்லி ​வைத்திருக்கிறார்கள். அதன்படியே ஒருவன் வருகிறான். எதிரிக​​ளை அழிக்கிறான். இந்த சமூகத்தின் அழகிய இளவரசி​​யை மணந்து ​கொள்கிறான். இத்​தோடு முதல்பாகத்திற்கு சுபம். மிக எளிய இந்த அம்புலிமாமா க​தை பற்றி இந்தக் கட்டு​ரையில் ஏன் சொல்கி​றேன் என்று வாசகர்கள் ​டென்ஷன் ஆக​வேண்டாம். இந்த நான்கு வரிக் க​தைக்கு நடு​வே இதன் ஆசிரியர் சுற்றும் ரீலில் இது நானூறு பக்கக்   க​தையாக வளர்ந்துள்ளது. அந்த ரீல்க​ளைச் சற்று ​சொல்கி​றேன். அந்த நாட்டில் ​வெளியுறவுத் து​றை என்று ஒரு துறை தனியாக இருக்கிறது. குடி​யேற்றச் சட்டங்கள் இருக்கின்றன. அந்த நாட்டின் வீடுகளில்,…

Read More