You are here
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளக்கங்களும் வெங்டேஷ் ஆத்ரேயா வெங்டேஷ் ஆத்ரேயா இந்திய சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய்வுகள் வழியே மக்களின் கோரிக்கைகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம் வியட்நாமின் ஹனாய் நகரில் நடத்திய ஒன்பதாம் அமர்வில் அவருடைய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற படைப்பிற்காக சிறந்த சாதனையாளர் விருதை அளித்தது. அதைக் கொண்டாடும் வகையில் அவருடைய அந்த நூலிலிருந்து புத்தகம் பேசுது இதழின் சார்பாக ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. வினாக்களை ப.கு.ராஜன் தொடுத்தார். விரிந்த எல்லைகளைத் தொடும் அவரது பதில்கள்  இப்போது ஒரு சிறு நூலாக வாசகர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் குறித்த பல்வேறு வினாக்களுக்கு வெங்கடேஷ்ஆத்ரேயா விரிவும் ஆழமும் கூடிய பதில்களை அளித்துள்ளார். அவை சுதந்திரமாக அணுகும் போக்கைக்…

Read More
கட்டுரை 

பொருளாதார ஆசானுக்குப் பாராட்டு விழா

வீ.பா. கணேசன் அரசியல் பொருளாதாரத்திற்கான உலக அமைப்பு (World Association For Political Economy) கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய அரசியல் பொருளாதார அறிஞர்களின் கூட்டத்தை நடத்தி அன்றைய பொருளாதார நிலைமை குறித்த விவாதத்தை நிகழ்த்தி வருகிறது. இந்த அமைப்பின் 2013ஆம் ஆண்டிற்கான நிகழ்வு வியட்நாம் தலைநகரான ஹனாய் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக அளவில் அரசியல் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் குறித்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வெங்கடேஷ் ஆத்ரேயா, வி.கே. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இச்சிறப்பைக் கொண்டாடும் வகையில் இந்திய சமூக விஞ்ஞானக் கழகமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிற்கு ஜூலை 11 பாராட்டுவிழா நடத்தின.  வீ.பா. கணேசனின் வரவேற்புரையுடன் துவங்கிய நிகழ்விற்கு  அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்…

Read More

சீனா தன் வழியில் சோசலிசத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கும் ஒரு நாடுதான்

பேராசிரியர்- முனைவர் வெங்கடேஷ். பா. ஆத்ரேயா, சென்னை ஐ.ஐ.டி யில் வேதிப் பொறியியலில் பட்டம் பெற்றவர். சாதாரணமாக ஐ.ஐ.டி. பட்டதாரிகள் போல அல்லாது ‘வறுமையின் காரணம் அறிய’ அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயிலச் சென்றார்.

அங்கே பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். பல்கலைக் கழகப் பாடத்திட்டம் போதிக்காத உண்மைப் பொருளாதாரத்தை அவரைப் போன்ற மாணவர்களோடு இணைந்து ‘மூலதனம்’ நூலைக் கற்பதன் மூலம் கற்றறிந்தார். கல்லூரி வளாகம் விளக்காத உலகத்தை அங்கு வீறுகொண்டு நடந்த வியாட்நாம் போர் எதிர்ப்பு மாணவர் போராட்டங்கள் மூலம் விளங்கிக் கொண்டார்.

Read More