லெனினியம் கற்றிட ஒரு கையேடு
என்.குணசேகரன் லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது.கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை.ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை.இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும். உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்சனை உண்டு.அது,என்ன பிரச்சனை? தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான், ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால்.இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது. இதற்கு உதவிடும் நோக்கத்துடன்தான் மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு” (Lenin:A study in the Unity of…
Read More