பூமணிக்கு சாகித்திய அகாதெமி விருது

கருவேலம் பூக்கும் கரிசல் மண்ணின் மணத்தை மக்கள் வாழ்வை தன் எளிய சரளமான மொழி வளத்துடன் படைப்புக்களாகத் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பூமணிக்கு 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. பூமணி 1970-களில் தனது தொடர்ச்சியான படைப்புச் செயல்பாட்டின் காரணமாக கவனம் பெற்றவர். அவருடைய சமீபத்திய நாவலாகிய ‘அஞ்ஞாடி’க்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அஞ்ஞாடி இருநூற்றாண்டு தமிழ்ச்சமூக வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகத் தமிழ்வாசகனை வந்தடைந்த பிரதி. அடித்தட்டு மக்களின் பாடுகளை பரிதவிப்பை அழுத்தமாகப் பேசிய பூமணியின் பிறகு, வெக்கை, நைவேத்தியம், வாய்க்கால், வரப்புகள், இவை ஐந்தும் அஞ்ஞாடிக்கும் முந்தைய நாவல்கள். வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புகள், கருவேலம்பூக்கள் என்கிற ஆவணப்படம் என அவருடைய படைப்புலகம் விரிவானது. அஞ்ஞாடிக்குப் பிறகான அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கும் பூமணியை விருதுபெற்ற இத்தருணத்தில் புத்தகம்பேசுது ஆசிரியர்குழு…

Read More