மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள்

ச. முருகபூபதி மரஉடம்புகளின் தளிர் விரல்கள் கொண்டு சிறகென எழுதிக்கொண்டிருப்பார்கள். வறண்ட கண்மாய்களில் பிஞ்சுப்பாதங்கள் குதித்தோடி தவளைகளை மீன்குஞ்சுகளை நண்டுகளை தம்வெற்றுக் கரங்களால் சித்திரமிட்டுக்கொண்டிருப்பார்கள். சாணி மொழுகிய வீட்டு முற்றத்தில் தரைகீறிய வகுப்பறைகளில் வெயில் மழைகளில் தனியே உரையாடிக் கொண்டிருக்கும் காரை உதிர்ந்த மதில்களின் களத்துமேட்டு நிலத்தின் விழிப்புற்ற பொழுதிலிருந்து சொப்பன நிலம் நுழையும் வரை கதைபோட்டு பாடியபடி சதா தம் புல்வரிக்கோடுகளால் வரைந்துகொண்டிருப்பது இப்பிரபஞ்ச வெளிகளில் கலையின் தான்யங்களை விதைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளே. பெரியவர்களாகிய நாம் உணர்ந்திராத காற்றின் ஏடுகள் மறைந்திருக்கும் வெற்றுவெளியில் திசாதிசைதொட்டு ஓடியோடி நின்று பெரியவர்களிடம் தாம் பெற்ற மனக்காயங்களை கண்களில் வழிந்த உப்பு மைத்தொட்டு குழந்தைகள் முடிவற்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டி இண்டர்நெட்டை தம் வழிகாட்டியாகக் கொண்ட இன்றைய தலைமுறை பெற்றோர்களுக்குள் குழந்தைமையின் கனவுகள் புரியாது விளம்பரக் கல்வியின் மோகத்துள் சிக்கி…

Read More