கோடை வசந்தமான பொழுதுகள்

புதுவை ஹேமா எந்த முன் திட்டமும் இல்லாமல் கோடை விடுமுறை சாதனாவிற்கு துவங்கியது…. அன்றைய மாலை முழுவதும் விடுமுறை வந்தாயிற்று.. என்று குதூகலம் பொங்கி வழிந்தபடி கொண்டாட்ட திட்டங்கள் வடிவம் பெறத் துவங்கியது.                         அவளின் புத்தக சேகரிப்பு கலைந்து கிடந்த புத்தக அலமாரியின் முன் அமர்ந்தபடி என்னுடன் (அம்மா) பேசத் துவங்கி, தன்னூக்கமாக புத்தகங்களை அடுக்கும் பணி துவங்கியது. இப்படி ஒரு சுகானுபவமாக ஒரு சலிப்பூட்டும் வேலை எப்படி மாறும் என்ற திகைப்பிலிருந்து இந்த நிமிடம் வரை நாங்கள் மீளவில்லை.                         சூழலை மறந்து, கிள்ளியெடுக்கும் பசியைத் தாங்கி, கார்டூன்களை புறக்கணித்து மூன்று பொழுதுகள் புத்தக அலமாரி பணியினை மனம் கோர்த்து தாயும், மகளும் கிடந்தோம்.                         ஒவ்வொரு புத்தகமாய் துடைப்பதற்கு கைகள் ஏறி வந்து, மடியில் கிடந்து, விரல் வருடல்களுக்கு உள்ளாக, கண்கள் பிடித்த…

Read More