You are here
நூல் அறிமுகம் 

தேவ.பேரின்பனின் தமிழர் வளர்த்த தத்துவங்கள் பரந்த வெளியில் நின்று பேச வேண்டிய பிரதி

நா. விச்வநாதன் இந்திய மரபென்பது வைதிக மரபாகத்தான் தொடக்க காலத்திலிருந்தே கற்பிக்கப்பட்டு வந்து அதுவே நிலை பெற்றுவிட்டது. தத்துவம் என்றாலே ஆன்மிகம் பக்தி என்ற கருத்தே முன்னிலைப்படுத்தப் பட்டது. பல்வேறு சமூகங்கள் இணைந்த ஒரு நிலப்பரப்புக்கான பொது அடையாளங்கள் இந்த மரபிலிருந்தே பெறப்பட்டது. நாம் விரும்பியோ விரும்பாமலோ இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க வேண்டும். தமிழர் தத்துவம் என்ற அழுத்தமான சொல்லாடல் இல்லாமல் ஆனது. அரசர்களும் அவர்களுக்கு அடுத்த படிநிலையிலிருந்த அல்லது அவர்களுக்கு இணையாக இருந்தவர்களும் உபதேசித்ததே ஞானம் என்றானது. அறம் என்று சொல்லப் பட்டது. அடித்தட்டு மக்களுக்கோ உழைப்புதவிர வேறெதுவும் தேவையில்லை என்ற கருத்து உருவானது. வறியவர்களுக்கு அறம் எப்போதுமே கூற்றாகவே இருந்திருக்கிறது. தண்டனைக் குரியவர்கள் என எளிய மக்கள் அடையாளப்படுத்தப் பட்டனர். இது ஒருவிதத்தில் எளிய மக்களை சமூகத்திலிருந்து விலக்கம் செய்வதே. இவற்றைக் கவனத்தில்…

Read More
நூல் அறிமுகம் 

மூடுபனிச்சிறையில் வண்ணங்கள்

மெல்லியமிகமிகமெல்லியகலகக்குரல் நா. விச்வநாதன் தலைமுறைகள் தாண்டியும் பெண்களின் வளர்ச்சி குறித்த விவாதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. காலந்தோறும் பெண்களின் நிலை என்ற சொற்பயன்பாடே சரியாக இருக்கும். பொருத்தமானதும்கூட. பெண் என்பவள் சுமக்கும் ஒரு சாதனம்தான். நல்லவைகளையோ, அல்லாதவைகளையோ ஏற்பதும் சுமப்பதும் பெண்கள்தாம். நிலஉடைமைச் சமூகத்தில் இதுதான் மேலான அறம். பெண் போகப் பொருள். அடுத்த படி நிலை குடும்பத்தை வழிநடத்துவது என்பதான மறைமுக வன்முறை. இந்திய மரபில் ஆண், பெண் சமநிலை இருந்ததே இல்லை. இந்த சமத்துவமற்ற தன்மையைப் பெருமையாகத் தூக்கிப் பிடிக்கும் வரலாறு. இந்தியப் பெண் சமூகம் என்பது இன்றளவும் அடிமைச் சமூகம்தான். ‘மூடுபனிச் சிறையில் வண்ணங்கள்’ என்ற இந்தி நாவலை மொழிபெயர்ப்பில் படித்தபோது இது மேலும் உறுதிப்பட்டது. பெண்களின் வீடு சிறைதான். இதமான முன்பனிச் சிறையில் இருந்தாலும் பெண்களின் முகங்கள் மங்கலாகவே தெரிகின்றன. பொலிவற்றதாயும்…

Read More

காடு கண்டவனைக் காடு விடாது …

இயற்கையின் வெறிபிடித்த காதலனாக வனாந்திரமெங்கும் விச்வநாதன் அலைவுறுகிறார். அவருக்குப் பக்கத் துணையாக சக்தி, கோட்டையம்மா, காத்தாயி, பிடாரி, முனீஸ்வரன், அய்யனார், சுடலைமாடன், பத்ரகாளி என ஏராள காவல் தெய்வங்கள். மக்கள் வாழ்வதன் நிமித்தம் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதன் கோரத்தை சிறுகதையில் இவரளவு பதைபதைப்புடன் சித்தரித்தவர்கள் குறைவு.

Read More