ஆசிரியர் தினத்தின் ஆணிவேர்… வாசிப்பு!

எழுத்தறிவிப்பது என்பதை நமது முன்னோர்கள் ஒரு  வேலைக்கான படிநிலையாகக் கருதவில்லை. அதை ஒரு வாழ்க்கையாகக் கருதினார்கள். அதை வகுப்புகள், பாடங்கள், வருட அடிப்படைப் படிநிலைகள் எனப் பிரித்தது ஒரு வசதிக்காகத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதில் பொதுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதும் முடிந்துவிடும் இயந்திர சுழற்சியாக  இன்று கல்வி பார்க்கப்படுவதில் நியாயம், தர்க்கம் ஏதுமில்லை. கல்வி, வாழ்க்கை முழுவதும் நடைபெறுவது ஆகும். வெகுஜன மக்களின் பெருந்திரள் இந்தியாவில் கல்வியறிவு பெறாமல் இருப்பதே வறுமைக்கும் பிணிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் காரணம் என்பது அமர்தியா சென் உட்பட்ட உலக அறிஞர்களின் கருத்து. எனவே சமூகத்தின் உயர்நிலை நோக்கி புதிய சிந்தனை மரபுகளைத் தோற்றுவித்தவர்களுக்கும் ஆசான்கள் என்றே பெயர் வந்தது. ஆசிரியர் பணி அப்படிப்பட்டது. சமீபத்தில் காலமான தோழமையின் சின்னமான நீலமேகம் போன்ற…

Read More