You are here
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

சோழம்பேட்டையிலிருந்து அறிவியல் இயக்க தலைவராக….

சோ. மோகனா “மனிதனின்  சமுதாய  வாழ்வே..அவனுடைய  சிந்தனையை  உருவாக்கி, நிரணயிக்கிறது”  – மாவோ “மனிதன் பிறந்து பயனின்றி  அழியக்கூடாது”                                                                 லெனின். “உன்னை எவராலும்  தோற்கடிக்க முடியாது..உனது நம்பிக்கையில்  தோற்காத வரை”                                            நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் “நாங்கள்  எதார்த்தவாதிகள்.. அதனால் அசாத்திய கனவுகளைக் காண்கிறோம்”     – சே குவேரா.. “ஒரு புத்தகம், ஒரு பேனா, ஓர் ஆசிரியர் ”  என்பவை உலகை மாற்றும் வல்லமை வாய்ந்த கருவிகள், இவற்றைக் கருத்தில் கொண்டு தொடருவோம்.. இன்றைய இந்த நிலையையும்,, ஒரு 60 ஆண்டுகளுக்கு முன் உள்ள எனது நிலையையும் எண்ணிப் பார்க்கிறேன். ரொம்பவே பிரமிப்பாக உள்ளது. இன்று  சமூகத்தால்  மதிக்கக்கூடிய நிலையிலும், அதைவிட முக்கியமாக, மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபடும், அவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை…

Read More

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்-3 : ஆறு தாண்டி படித்த மொத பொம்பளப் புள்ள…

பேரா. சோ. மோகனா “பெண்களின் எழுத்தறிவின்மையைப் பொருத்தவரை, அதன் காரணம், ஆண்களிடம் இருப்பதுபோல், சோம்பலோ செயலின்மையோ அல்ல. இன்னும் வலிய காரணம், காலங்காலமாய் நம் பாரம்பரியம் அவர்களைக் கீழானவர்களாய் முத்திரை குத்தியதுதான். அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய அவளுக்கும் நமக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.” — மகாத்மா காந்தி.(ஹரிஜன், 18-2-39) பழசை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் பிரமிப்பாகவும், கொஞ்சம் பெருமையாகவும், அப்பவே இப்படியான்னு சந்தோஷமாகவும் இருக்கிறது. சோழம் பேட்டை மெயின் ரோட்டில், எங்க வீட்டுக்கு எதிரில் உள்ள உமா மகேஸ்வரன் பிள்ளை வீட்டில் மூணு பொண்ணுங்க. ரெண்டு புள்ளைங்க (தஞ்சைப் பகுதியில் ஆண்களைத்தான் புள்ளைகள் என்பார்கள்).திடீரென ஒரு நாள் அவர்கள் வீட்டில், ஒரு புதிய குடும்பம் வண்டி நிறைய சாமான்களுடன் நிறைய, மூட்டை முடுச்சுகளுடன் வந்து இறங்குகிறது..எதிர் வீட்டில் உள்ள பானு, இது எங்க பெரியப்பா குடும்பம். இனிமே…

Read More