You are here
நேர்காணல் 

சமூகவெளியின் கால அடுக்குகளை உணராதவர்களால் அரசியல் கவிதைகளை எழுதமுடியாது…

–  கலாப்ரியா  சந்திப்பு :  கீரனூர் ஜாகிர்ராஜா     70களில் எழுதத் தொடங்கிய கலாப்ரியா தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்பெயர் சோமசுந்தரம். வண்ணநிலவனின் கையெழுத்து இதழான ‘பொருநை’யில் கவிதை எழுதும்போது ‘கலாப்ரியா’ எனப் பெயர் சூட்டிக் கொண்டார்.  தாமிரவருணிக் கவிஞன் என்பதில் பெருமிதங்கொள்ளும் கலாப்பரியா, வண்ணதாசனின் பேரன்புக்குப் பாத்திரமானவர். கலைமாமணி விருது, சிற்பி இலக்கிய விருது, ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, கண்ணதாசன் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது என பத்துக்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றவர். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற கலாப்ரியா தற்போது இடைகாலில் வசித்து வருகிறார். ‘எட்டயபுரம்’ போன்ற குறுங்காப்பியங்கள், சர்ரியலிசக் கவிதைகள் எழுதியதன் மூலம் தமிழின் மாறுபட்ட கவிஞராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். நினைவின் தாழ்வாரங்கள், உருள்பெருந்தேர், சுவரொட்டி போன்ற தொடர்ச்சியான தன் வரலாற்று நூல்களின் மூலம் சிறந்த…

Read More
என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் 1 மனதில் தோன்றிய முதல் தீப்பொறி

எஸ். மோகனா ‘நம் சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய, பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. அப்படி மாறுதல்கள் ஏற்பட்டாலும் முதலில் அடுப்பங்கரையை விட்டு அவர்களை வெளியேற்றவேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததும் ஆகும். பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது’ –   பெரியார் நான் என்னை, நான் கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறேன். கொஞ்ச நஞ்ச ஆண்டுகளா? 67ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது…? வாழ்க்கையில் நடந்ததெல்லாம் நிஜம்தானா? அதற்கும் மேல்தான் தாக்குப்பிடித்து நிற்கிறேனா? ம். ..ம்… ஒரு பெருமூச்சுதான் பதில். ஆனால் அனைத்தும் உண்மை. பூமி சுற்றுவது எப்படி உண்மையோ.. சூரியன் இந்த பால்வழியை சுற்றுவது எப்படி உண்மையோ… அதுபோல்தான் இதுவும் நிஜம்தான்.. ஆனால் இப்போது அனைத்தையும் நினைத்துப் பார்த்தால் ஒரு…

Read More