You are here
நூல் அறிமுகம் 

எல்லோருக்குமான புத்தகம் ஏலகிரியில் சிறுத்தைவேட்டை

சா. கந்தசாமி உலகம் என்பது லட்சக்கணக்கான விலங்குகள், புழு, பூச்சிகள், பறவைகள், மனிதர்கள் என்று பலவிதமான உயிரினங்கள் வாழக்கூடியது. நிலத்தில் பல உயிரினங்கள் வாழ்வதுபோல நீரிலும் சில உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் பரிணாம வளர்ச்சியில் கடைசியாக இருப்பது மனிதன். மனிதனைத் தொல்லியல் ஆய்வாளர்கள் இளைய விலங்கு என்று குறிப்பிடுகிறார்கள். இளைய விலங்காகிய மனிதர்கள் தங்களின் அறிவு, ஆற்றல் மூலமாக உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பகுத்தறிவு, நினைவாற்றல், பேசும் திறமை, எழுதும் வல்லமை இருக்கிறது. ஆயுதங்கள் செய்து விலங்குகளையும், வானத்தில் பறக்கும் பறவைகளையும் வேட்டையாடினார்கள். பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற சில வகை விலங்குகளைப் பிடித்துப் பழக்கி வேலைக்கு வைத்துக் கொண்டார்கள். வனத்தில் திரியும் வீட்டில் வளர்க்க முடியாத சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை அவை வாழும் காட்டிற்குள் புகுந்து வேட்டையாடினார்கள். அது அவர்களின்…

Read More
கட்டுரை சா.க. பக்கம் 

சிற்றிதழ்கள்!

சிற்றிதழ்கள் தங்கள் மீது சொல்லப்படும் குற்றம் குறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு படைப்பிலக்கியத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டிருக்கின்றது. சிற்றிதழ் என்பது புதிய சோதனை, புதிய முயற்சி என்பதைச் சார்ந்தது. அது ஒரு நவீன இயக்கியம். மரபு என்பதற்கும், ஏற்கப்பட்டது, அங்கீகாரம் பெற்றது என்பதற்கும் எதிரானது. அதற்கு எழுத்தாளனே முக்கியம் கிடையாது, எழுத்து என்பதுதான் முக்கியமானது. புத்தம் புதிய படைப்பு எந்த வயதினரால் எழுதப்பட்டாலும் அதனை ஏற்று வெளியிட்டு நிலைநாட்டுவது என்பது சிற்றிதழ் மரபு.

Read More