ஷோபா சக்திக்கு சர்வதேச விருது

கான் திரைப்படவிழா (Cannes Film Festival) ஒவ்வோர் ஆண்டும் பிரான்சில் உள்ள கான் நகரில் நடக்கும். சர்வதேசத் திரைப்பட விழா. ஆஸ்கார் விருதுகள் பரவலாக அறியப்பட்டவை என்றாலும் அவை அடிப்படையில் அமெரிக்க-ஹாலிவுட் திரைப்படங்களுக்கு அமெரிக்க திரைப்படக் கழகம், அதன் உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படுபவைதான். அங்கு ஒரே ஒரு விருதுதான் அமெரிக்காவிற்கு வெளியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு (Best Foreign Flim) வழங்கப்படும். கான் திரைப்பட விழாவில் வழங்கப்படும் விருதுகள் உண்மையிலேயே சர்வதேச விருதுகள். விருதுகள் ஒவ்வோர் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லுனர் குழு தேர்வு செய்து வழங்குபவை. அந்த வகையில் பெரும் பெருமைக்குரியவை. இந்த ஆண்டு சிறந்த படத்திற்கான பாம் டியோர் (Palme d’or)  விருது ஃபிரெஞ்சு இயக்குநர் ஜாக் ஓட்யர் (Jacques Audiard)  இயக்கிய தீபன் படத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘சிறீலங்காவின் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பிக்க ஒரு முன்னாள்…

Read More