You are here

என் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல் – 6: மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு

பேரா.மோகனா “மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”…                        – மாக்சிம் கார்க்கி உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! – சிக்மண்ட் ஃப்ராய்ட் உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..   – டெஸ்கார்டஸ் சமீபத்தில் நான் வாசித்து முடித்த சில  புத்தகங்கள், மீண்டும் மீண்டும் இந்த சமூகத்தின்பால் கோபம் கொள்ள வைத்து, உங்களுக்குள் ஓடும் ரத்தம் ஒன்றுதான்.. சாதியில்லை என என்று உணரப்போகிறீர்கள்  எந்த DNA விலும் சாதியில்லையடா.. என்ற குமுறலையும் ஒரு புயலையும் என்னுள் உருவாக்கியது, தகழி சிவசங்கரன் பிள்ளையின் “தோட்டியின் மகன்” இது 1947 ல்…

Read More

தலையங்கம்: ஆதலினால் திரண்டெழுவோம்!

விடியல் நெருங்கும் களங்களின் மீது அணிவகுத்துச் செல்ல எப்போதும் கட்டளைக்கு காத்திருக்கிறேன்… நாளுக்கு நாள் என் உறுதிப்பாடு வளர்கிறது.   – சே குவரா. விவசாயிகளின் தற்கொலைப் பட்டியலில் நம் தமிழகத்திற்கு மூன்றாமிடம்… பொது (தற்கொலை) எண்ணிக்கையில் இரண்டாமிடம்… விவசாயிகள் மற்றும் பெண்கள்… 76 சதவிகிதம். பத்து பன்னிரண்டு வகுப்புகள் கல்லூரி மாணவர்கள் தற்கொலையில் 16 சதவிகிதம் தலைவர்களின் ஊழல் சிறை வைப்பில் (தலா இரண்டு லட்சம் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றா?) எட்டு சதவிகிதம் என அந்தப் பட்டியல் விரிவாகப் பேசுகிறது. சமூகம் சேர்ந்து செய்யும் கொலை தான் தற்கொலை என்பது நிதர்சன உண்மை என்றாலும் சென்ற ஒரே வருடத்தில் தமிழகத்தில் 16, 927 தற்கொலைகள் நிகழ்ந்திருப்பது கடந்த பத்தாண்டுகளில் அதிகம் யூனியன் பிரதேச பட்டியலில் புதுச்சேரிக்கே முதலிடம். நம் தமிழ் மண்ணில் மரணங்கள் சரியாக கணக்கெடுக்கப் படுவடுதால்…

Read More

தலையங்கம் : படிக்கத் தெரிந்திருந்தும்…

‘படிக்கத் தெரிந்திருந்தும் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், படிக்கவே தெரியாதவர்களிடமிருந்து எவ்வகையிலும் வேறுபடவில்லை’ என்பது மார்க் ட்வெயின் சொன்ன நெத்தியடி வாக்கியம். காரல் மார்க்ஸ் சின்ன வேலைகளுக்கும் கால்நடையாகவே செல்வாராம். அவ்விதமான நடைப்பயணங்களில் புத்தகம் அவரது கூடவே செல்லும். வாசித்தபடி நடப்பது. அல்லது நடக்கும்போது வாசிப்பது.. இவ்வகையானவர்களை ஆங்கிலத்தில் பிப்லியோ பெடஸ்ட்ரியன் (Bibelio Pedesterion) என அழைக்கிறார்கள். வாசிப்புபற்றி மார்க் ட்வெய்ன் சொன்னதைப் போலவே, நாம் நடப்பது பற்றியும் கூறலாம். நம்மில் பலர் நடக்கவே முடியாதவர்களிடமிருந்து பெரிதாய் வேறுபடவில்லை. இன்று பக்கத்து வீட்டுக்குக் கூட இரு சக்கர மோட்டார் வாகனத்தில் தான் போவேன் என்பவர்களே அதிகம் என்றாலும், கணிசமாக ஒரு கூட்டம் காலைமாலை நடைபயிற்சிக்குப் போகவே செய்கிறது. நீரிழிவு முதல் உடல்பருமன் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு அஞ்சி நடப்பவர்கள் காதுகளில் சங்கீதம். வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், சமீபத்தில் நடைவாசிப்பாளர்கள் ஜெர்மனியில்…

Read More

எழுத்தால் எழுவோம்! கலையால் ஒன்று கூடுவோம்!

‘நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களை சிந்திக்க வைக்கவும் செயலில் இறங்குமளவு உத்வேகம் அளிக்கவும் தேவைப்படுவது எழுத்தும் மக்கள் கலையும் சார்ந்த உழைப்பாளர் அமைப்பு’         அஸ்திரா டோனி குளோவர் (மன்த்லி ரிவ்யூ)  கார்ல்மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் ஒரு பத்திரிகையாளராகவே இருந்தார். எழுத்தை தனது வாழ்வின் பிரதான அம்சமாக்கிக் கொண்டவர்களே மக்களின் போராட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்திருக்கிறது. ‘ஒரு பத்திரிகை கூட்டுப் பிரச்சாரகன்… கூட்டுப் போராளி மட்டுமல்ல.. அது ஒரு கூட்டு அமைப்பாளனும்கூட’ என்று லெனின் அறிவித்தார். 1848ல் தொடங்கி மார்க்சும் எங்கெல்சும் ட்ரிப்யூன் இதழில் எழுதிக் குவித்த கட்டுரைகளே அந்த இதழை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் மக்கள் இதழாக்கியது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி தனது அனைத்துப் போராட்டங்களின் அடித்தளஅம்சமாக மகாத்மா காந்தி எழுத்தையே…

Read More