You are here

”இயற்கையைப் பொதுவுடமையாகக் காணும் மார்க்ஸின் சிந்தனையை நிலை நிறுத்த வேண்டும்”

– நக்கீரன்    கேள்விகள்: ப.கு. ராஜன் “அரசியல் சாராத கவிதைகளிலும் அரசியல் உண்டு” என்ற விஸ்லாவா ஸிம்போர்ஸ்க்காவின் முகப்பு வரியோடு வந்த ‘என் பெயர் ஜிப்சி’ எனும் கவிதைத் தொகுப்பு மூலம் கவனிப்பும் பாராட்டுகளும் பெற்ற கவிஞராக அறிய வந்தவர் நக்கீரன். ‘பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் பூக்கிறது ஒரு பூ பென்சிலை சீவ சீவ சுருள் சுருளாய் விரிகிறது ஓர் சிறகு’ என்று எளிமையும் தனித்துவமும் கொண்ட அழகியலோடு கவிதைகள் எழுதிவந்த நக்கீரன் எழுதிய அடுத்த நூலோ ‘மழைக்காடுகளின் மரணம்’ எனும் சூழலியல் நூல். நக்கீரன் அடுத்து எழுதியது தமிழில் முன்னுதாரணம் இல்லாத ‘காடோடி’ எனும் நாவல்(அடையாளம் பதிப்பகம் பக்.340 ரூ.270). நாவல் என்பதன் சாதாரணமான எதிர்பார்ப்பிற்கு மாறான விவரணங்களோடும் விளக்கங்களோடும் ஆனால் ஒரு புனைவிற்கு மட்டுமே உரித்தான உணர்வுமயமான இழைகள் நெகிழ்ந்தோடும்…

Read More

நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்…

– பெருமாள்முருகன் பெருமாள் முருகன்(1966)  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர்.கொங்கு வட்டார நாவலின் முன்னோடியான எழுத்தாளர் ஆர்.சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும்  இவர் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, அகராதி என தமிழ் இலக்கியத்தின் பலதளங்களில் தீவிரமாக இயங்கிவருகிறார்.தற்போது காலச்சுவடு ஆசிரியர் குழுவில் பணியாற்றிவரும் பெருமாள் முருகன் இதுவரை ஏழு நாவல்களும் நான்கு சிறுகதை தொகுப்புகளும் நான்கு கவிதைத் தொகுப்புகளும் ஒரு கொங்கு வட்டாரச் சொல்லகராதியும் எட்டு கட்டுரைத் தொகுப்புகளையும் படைத்திருக்கிறார். பதிப்பாசிரியராக நான்கு புத்தகங்களும் தொகுப்பாசிரியராக ஏழு சிறுகதை தொகுப்புகளையும் கொண்டுவந்திருக்கும் இவரின் கூளமாதிரி,நிழல் முற்றம்,மாதொருபாகன் ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.கதா விருது ,கனடா இலக்கியத் தோட்ட விருது உட்பட இதுவரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நூற்றாண்டு காலமாகத் தொன்றுதொட்டு…

Read More

சினிமாவைப் பயிற்றுவிப்பதில் ஆத்மதிருப்தி கொள்கிறேன்…

எம். சிவகுமார் கேள்விகள்: கொங்குநாடன் எம். சிவகுமார்  திரைப்படக் கல்லூரியில் 1981லிருந்து  1984 வரை திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல் பயின்றவர்.  ‘சினிமா ஒரு பார்வை’ ‘சினிமா ஓர் அற்புதமொழி’,  ‘சினிமா கோட்பாடு’ போன்ற திரைப்படம் சார்ந்த புத்தகங்களை எழுதியும், மொழிபெயர்த்தும், சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் இல்லையே என்ற மனக்குறையைப் போக்கியவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் அறிவியல் சார்ந்த படங்களை இயக்கியவர். படங்களை இயக்குவதோடு தற்போது லி.க்ஷி. பிரசாத் ஃபிலிம் & டிவி அகெடமியிலும்  ஷிஸிவி பல்கலைக் கழகத்தின் சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரியிலும் திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை இயக்கம் குறித்து வகுப்புகள் எடுக்கிறார்.  சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு நூலிலிருந்து சில கேள்விகளை இயக்குநர் சிவகுமாரிடம் முன்வைத்தபோது அவரளித்த பதில்களை வாசகர்களுடன் பகிர்ந்து…

Read More