இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்…

என்.குணசேகரன் மார்த்தா ஹர்நேக்கர், சிலி நாட்டில் 1970-1973 ஆம்-ஆண்டுகளில் நடந்த புரட்சி இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதே போன்று கியூபப் புரட்சி அனுபவங்களையும் ஆழமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். வெனிசுலாவின் புரட்சிகர மாற்றங்களில் நேரடிப் பங்களிப்பு செய்துள்ளார். இந்த தனது விரிந்த அனுபவப் பரப்பை அடிப்படையாகக் கொண்டு இடதுசாரி புரட்சிகர இயக்கங்கள், தற்காலத்திய சவால்களை எதிர்கொள்வதற்கான பல புதிய வியூகங்களை அவர் தனது நூல்களில் பதிவு செய்துள்ளார். அவற்றுள், முக்கியமானது சமூக இயக்கங்கள் பற்றிய அவரது சிந்தனை. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் சமூக இயக்கங்கள் குறித்து இடதுசாரி இயக்கங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டுமென அவர் விளக்கியுள்ளார். மக்கள் நல நடவடிக்கைகள் பலவற்றைச் செய்து, முதலாளித்துவம் தனது இயல்பான மக்கள் விரோத முகத்தை மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறது.ஆனால், அதன் அன்றாட இயக்கம் மக்களை உளவியல், வாழ்வியல்ரீதியாக, அந்நியப்படுத்தி…

Read More