You are here
உடல் திறக்கும் நாடக நிலம் 

உடல் திறக்கும் நாடக நிலம்-10 ஆதிமொழியினைத் தேடித் தேடித் தொடரும் பயணம்

ச.முருகபூபதி குழந்தைகளின் நினைவுக் குகைகளில் எப்போதும் கிளம்பி பயணத்திற்கு காத்திருக்கும் ரயில் பெட்டிகளுக்கு உற்சாகமிக்க வசீகரம் எவரையும் ஈர்த்து விடக்கூடிய வல்லமை கொண்டது. அவை ஒருவர் சட்டையை ஒருவர் பின்னே பிடிப்பது போன்றும் இரு கரங்கள் கொண்டு நீள் செவ்வகத்தில் இணைத்து அதனுள் எல்லோரும் இருக்க சதா குழந்தைகளின் சிருஷ்டி நிலத்தில் ரயில்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும். எங்கள் தெரு கிணத்து மேட்டு நாடகங்களுக்கு நடிக்கும் அன்றைய குழந்தை நடிகர்கள் பலரும் பல இடங்களிலிருந்து அன்றைய நாடகங்களுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களுடன் இப்படிப்பட்ட விந்தையான ரயிலில் பயணித்து வந்து சேர்வது வழக்கம். சுப்பையா பிள்ளை பொட்டல் பால்யத்தின் விடுமுறை நாட்களில் கூட்டம் கூட்டமாக குழந்தைகளும் இளைஞர்களும் பெண்களும் ஆங்காங்கே விளையாட்டும் பாட்டும் ஆட்டமும் நாடகமுமாக கனவுலகவாசிகளைப் போல உலவிக் கொண்டிருப்போம். பீட்டர்புருகலின், நிலப்பரப்பு காட்சி ஓவியத்தைப் போலவே…

Read More

உலகப்புத்தக தினம்… தினமும் புத்தகமே உலகம் !

தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று உலகப்புத்தக தினம் அனுசரிக்கப்படுகிறது. ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் அது. புத்தகங்கள் இன்றி மனிதவளர்ச்சி இத்தனை உயர்ந்திருக்க முடியாது என்பது அனைவரும் ஏற்கும் உண்மை. காகிதமே கண்டுபிடிக்கப்படாத அந்த நாட்களில் மலைகுகைளில் தொடங்கி ஒலைச்சுவடிகள் வரை அப்போதும் தனது எண்ணங்களை மனித சந்ததியர் அடுத்தப்பல தலைமுறை அறிய அடித்து வைத்தே சென்றார்கள். தமிழர் வாழ்வை பண்பாட்டு கலாச்சாரத்தை முன்வைக்கும் சங்க இலக்கியங்கள், அறஉலகை செறிவோடு செதுக்கிச் செல்லும் திருக்குறள் தொடங்கி, கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியதே புத்தகம். கன்பூஷியஸின் அனலக்டஸ், ஹோமரின் ஒடிசி, பிளேட்டோவின் குடியரசு, அரிஸ்டாட்டிலின் எத்திக்ஸ், சோப்கோளிஸின் ஈடிபஸ் என கி.மு. நான்காம் நூற்றாண்டுக்குள் அணிவகுத்த உலக பொக்கிசங்கள் இன்றி பண்பாடுகள் மலர்ந்திருக்க முடியுமா? கதைகூறும் மரபிற்கு ஈசாப், ஆயிரத்தொரு இரவுகள், சாகுந்தலம்,…

Read More