You are here
நூல் அறிமுகம் 

இந்துத்துவப் பாசிசத்தின் நுண் முகங்களை அடையாளம் காட்டும் யெச்சூரியின் நூல்

அ. மார்க்ஸ் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேற்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் மட்டும் உள்ள கட்சி என்கிற நிலை போய் இன்று அது கிழக்கு மற்றும் தெற்கில் சில மாநிலங்களிலும் கால் பதித்து ஒரு அகில இந்தியக் கட்சி என்கிற நிலையைப் பெற்றுள்ளது. இந்து உயர்சாதியினரின் கட்சி என்கிற நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் என்கிற அனைத்துப் பிரிவினரிடமும் அது இன்று சென்றடைந்துள்ளது. இதை நாம் முதலில் மனம் கொள்ள வேண்டும். வெறும் 31 சத வாக்குகளைத் தானே அவர்கள் பெற்றுள்ளனர் என நாம் ஆறுதல் கொண்டு அமர்ந்து விட இயலாது. மதச் சார்பற்ற சக்திகளும், இடதுசாரிகளும் பலவீனமடைந்துள்ளதை நாம் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிடக் கூடாது. இந்தப் பின்னணியில் வெளிவந்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில்…

Read More
மார்க்சியம் 

சீர்திருத்தம் பலனளிக்குமா?

என். குணசேகரன் இன்றைய ஆளும்வர்க்க முகாமைச் சார்ந்தவர்களும்,கார்ப்பரேட் ஊடகங்களில் உள்ள உயர்நடுத்தர வர்க்கம் சார்ந்தோர் பலரும் இடதுசாரி எதிர்ப்பைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருகின்றனர். வேறுசிலர்,இடதுசாரிகள் மீது அனுதாபம் கொண்டவர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இடதுசாரிகள் முன்னேற வேண்டுமெனில் இப்படியெல்லாம் இருக்க  வேண்டுமென்று  ஏராளமான  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகின்றனர். இவர்களில்  பலர் அமைப்புரீதியாக, அமைப்புக்கோட்பாடுகள் கொண்டு செயல்படும் இடதுசாரி இயக்கங்கள் மீது அதிக ஆத்திரத்தை  வெளிப்படுத்துவார்கள். சோசலிச இலட்சியம் கொண்ட இடதுசாரிகள் இயக்கங்களின் வளர்ச்சி, தேக்கம்  பற்றிய பிரச்சனைகளை எப்படிப் புரிந்து கொள்வது? சரியான  புரிதல் ஏற்பட ரோசா லக்சம்பர்க் துணை நிற்கிறார். சோசலிசம் என்பது சிலரின் நல்லெண்ண நடவடிக்கைகளால் உருவாவது அல்ல; திறமையும் ஆற்றலும் கொண்ட, மிகக் “கவர்ச்சிகரமான” தலைவர்களால் உருவாக்கப்படுவதும் அல்ல. அதற்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்று கூறும் ரோசா, மூன்று முக்கிய…

Read More