You are here
நேர்காணல் 

ஆசிரியர் தினத்தில் கல்வி சில சிந்தனைகள்…

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம். இந்நாளில் கல்வித்துறை குறித்த பல்வேறு சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வித்திட்டம் மற்றும் அதன் நடைமுறை குறித்தும் இன்னும் பல்வேறு விஷயங்கள் இதில் அடங்குவன. ஆசிரியர் பிரதிநிதிகள், மாணவர் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் எனப் பல்வேறு இயக்கங்களில் உள்ளோரிடம் இன்றைய கல்வித்துறை குறித்த சில கேள்விகளை புத்தகம் பேசுது இதழ் சார்பில் பேராசிரியர் என்.மணி முன்வைத்தார். அதற்கான அவர்களுடைய பதில்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை கல்வித்துறைக்கான ஆரோக்கியமான ஆலோசனைகளாக உள்ளன என்பதில் ஐயமில்லை. முழுமையான சமச்சீர் கல்விக்கான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் ஜோ. ராஜ்மோகன், மாநிலச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம் அரசுப் பள்ளியை பாதுகாக்க அரசும் பொதுமக்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டியது என்ன? தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாதவர்களும்…

Read More
தலையங்கம் 

ஆசிரியர் தினத்தின் ஆணிவேர்… வாசிப்பு!

எழுத்தறிவிப்பது என்பதை நமது முன்னோர்கள் ஒரு  வேலைக்கான படிநிலையாகக் கருதவில்லை. அதை ஒரு வாழ்க்கையாகக் கருதினார்கள். அதை வகுப்புகள், பாடங்கள், வருட அடிப்படைப் படிநிலைகள் எனப் பிரித்தது ஒரு வசதிக்காகத்தான். ஏதோ ஒரு குறிப்பிட்ட வயதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட வயதில் பொதுத் தேர்வு அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெற்றதும் முடிந்துவிடும் இயந்திர சுழற்சியாக  இன்று கல்வி பார்க்கப்படுவதில் நியாயம், தர்க்கம் ஏதுமில்லை. கல்வி, வாழ்க்கை முழுவதும் நடைபெறுவது ஆகும். வெகுஜன மக்களின் பெருந்திரள் இந்தியாவில் கல்வியறிவு பெறாமல் இருப்பதே வறுமைக்கும் பிணிக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கும் காரணம் என்பது அமர்தியா சென் உட்பட்ட உலக அறிஞர்களின் கருத்து. எனவே சமூகத்தின் உயர்நிலை நோக்கி புதிய சிந்தனை மரபுகளைத் தோற்றுவித்தவர்களுக்கும் ஆசான்கள் என்றே பெயர் வந்தது. ஆசிரியர் பணி அப்படிப்பட்டது. சமீபத்தில் காலமான தோழமையின் சின்னமான நீலமேகம் போன்ற…

Read More