You are here

தூரத்துப் புனைவுலகம் – 9 கால்களிலும் கண் முளைத்த பறவை

ம. மணிமாறன் பழகிய பாதையினில் பயணிப்பவர்கள் பாக்கியவான்கள். சிக்கலில்லை. உருவாக்கிப் போடப்பட்டிருக்கிற தடத்தினில் புரண்டு விடாமல் சீராக இயங்குகிறவர்கள், வாழ்க்கையொன்றும் அவ்வளவு எளிதானதில்லை என்று அச்சப்பட்டு நிலைகுலையப் போவதில்லை. இப்படியானவர்களால் நிறைந்த இப்பெரு உலகினில் விலகி நின்று யாவற்றையும் உற்று நோக்குகிறவர்கள் தனித்தவர்கள். ஒவ்வொரு நொடியையும் துளித்துளியாக ஏற்று, அதனுள் இயைந்து கரைந்து வேறு ஒன்றாகத் தானும் மாறி புறத்தையும் கூட மாற்றிடத் துடிக்கிறவர்கள் அவர்கள். அப்படியானவர்களுக்கு வாழ்க்கை வரமா? சாபமா? என்றறிந்திட முடியாத புதிராகவே அமைந்து போகிறது. தனிமனிதர்களின் புதிர்சூழ்ந்த வாழ்வெனும் விளையாட்டு வடிவம் பெறுவதில் அவனுக்கு மட்டுமே பெரும் பங்கிருக்கிறது. அவனே அவனின் அனைத்திற்கும் கா£ரணமாகிப் போகிறான் என்பதை முற்றாக ஏற்றிட இயலாது. அவனுடைய உருவாக்கத்தில் அவன் ஊடாடித் திரியும் புறச்சூழலுக்கும் சரிசமமான பங்கிருக்கிறது. இந்தப் பிரம்மாண்டமான புறஉலகம் அவனுக்குள் இறக்கியிருக்கிற பேராற்றலை உணர்ந்து…

Read More

இடதுசாரி அரசியல் பணி எனப்படுவது

இடதுசாரிகளில் அதிதீவிரமாக இருப்பவர்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அரசியல் வேலை என்ற கருத்தைக் கொண்டிருகின்றனர். மாறாக சீர்திருத்தவாதிகளாக இருக்கும் இடதுசாரிகள் பலர், அரசாங்க நிர்வாகத்தில் தலையிடுவதே பிரதான அரசியல் நடைமுறையாகக் கருதுகின்றனர்.வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பிரிவினரும் இடதுசாரி இலட்சிய அமலாக்கத்தின் முக்கிய கதாநாயகர்களான மக்களை மறந்து விடுகின்றனர் !

Read More

எரிக்கும் பூ கரிந்து சாம்பலாகும் நாற்காலிகள்

“விலகி விலகியே சென்றோம் விலக வேண்டும் என்ற விருப்பத்தோடும் விலக முடியாத துக்கத்தோடும்” என்கிற கவிதை வரிகளை ஒரு கட்டுரையின் மேற்கோளாக சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தபோது, நிச்சயமாக இதை எழுதியது ஒரு பெண்ணாகவே இருக்க முடியுமென யூகித்தேன். என் யூகம் சரியானது தான். ஆனால் பாலபாரதி என்னும் பெயரை இந்தக் கவிதை வரிகளுடன் பொருத்திப் பார்த்து நம்ப முடியாமல் கண நேரம் தவித்தேன்.  தோழர் பாலபாரதியின் ஆளுமை குறித்து எனக்குள் இருந்த சித்திரம் மேற்குறிப்பிட்ட கவிதை வரிகளுக்கு மாறானது. ஜனநாயக மாதர் சங்கத்தின் துடிப்புமிக்க அங்கமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக, செறிவான வாதத் திறமையுள்ளவராக, மக்களை பாதிக்கிற எந்தப் பிரச்சனைக்கும் அஞ்சாமல் களம் இறங்கிப் போராடுபவராக, அவரை ஒரு வீராங்கனையாக நான் அறிந்து வியந்திருக்கிறேன். இதையெல்லாம் கடந்து, அவர் எங்கள் மாவட்டத்துக்காரர் அல்லது…

Read More