காலமெல்லாம் புலவோரின் வாயில் துதியறிவாய்…

ச.சுப்பாராவ் ‘உன் நண்பர்களைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்பது வாட்ஸ்அப் காலத்திற்கு முன்னாலேயே சொல்லப்பட்ட மூதுரை. எனவே அவரது நண்பர்களைப் பற்றி முதலில். டி.கே.சிதம்பரநாத முதலியார் அவரது நண்பர். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தனது மனோன்மணியத்தில் திருத்தங்கள் செய்து தரும்படி கேட்ட நண்பர். அவர் வீட்டிற்கு வந்து அவரது பணிகளைப் பற்றி விசாரித்துவிட்டு அவர் மீது வங்கமொழியில் ஒரு பாடலைப் பாடிச் சென்றார் தாகூர். நீர் இளைஞர்… நானோ முதியவன்.. உங்களைப் போல் என்னால் செயல்பட முடியவில்லையே.. என்றும், பாரி, அவனது மகளிற், (ஆம், எழுதியவர் இந்தற் தான் போட்டுள்ளார்) கபிலர்; பிசிராந்தையார் பற்றி கட்டுரை ஒன்று எழுதுகிறேன்; அவர்கள் பற்றிய கர்ணபரம்பரைக் கதைகள் வேண்டும் என்றும் ஆக்ஸ்போர்டிலிருந்து இவருக்குக் கடிதம் எழுதுகிறார் ஜி.யு.போப். கடிதத்திற்கு நடுவில் ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப…

Read More

வாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை

வாசிப்போடு வரவேற்போம் ஆசிரியர் தினத்தை இதோ இன்னோர் ஆசிரியர் தினம் வந்துவிட்டது. கல்வியில் அனைத்து சமூக ஆர்வலர்களும் முன்மொழியும் ஒரு பிரதான மாற்றம் குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பை அறிமுகம் செய்வது பற்றியது ஆகும். பாடப்புத்தகச் சுமையின் இரக்கமற்ற திணிப்பால் புத்தகம் என்றாலே ஒரு வகை அச்சமும் தயக்கமும் அவர்களிடம் குடிகொண்டு விட்டது. வாசிப்பு உலகமே தனது சாகசங்களும் அறிவுப் புதையலுமாய் அவர்களுக்காகவே காத்திருக்கிறது. புத்தகங்களை வாசிக்கும் ஒரு செலவில்லாத, ஆனால் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு அவர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே வீடியோ விளையாட்டுகளும் உடலைக் கொல்லும் கார்ப்பரேட் ரக தின்பண்டங்களும் அறிமுகமாகி விடும் அவலத்தை நாம் நமது கல்வி மாற்றங்கள் வழியே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். புளூவேல் வீடியோ விளையாட்டின் மூலம் குழந்தைகளை தற்கொலை செய்து கொள்ள நஞ்சை கொடுத்திருக்கிறார்கள். இன்று நகர்ப்புற பள்ளிகளில் பல குழந்தைகள்…

Read More
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள்

மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள் ச. மாடசாமி வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. கல்வியிலும் கலாச்சாரத்திலும் பேச்சிலும் மொழியிலும் தட்டுப்பட்ட மேடுபள்ளங்களை அறிந்தது இந்த வெளிச்சத்தின் வழிதான். நான் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இந்த வெளிச்சத்தில் கிடைத்ததுதான். இது சன்னமான வெளிச்சம். இருந்தபோதும், இதன்மீது இருட்டு வந்து அடைந்தது இல்லை. பேச்சிலும், தோற்றத்திலும், அறிவாளித் தனத்திலும் மிகச் சாதாரணமாய்த் தெரிவோர் இடையறாமல் இந்த வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்கையில் இருட்டு எப்படி வரும்?… எளிய மக்களோடு கலக்கையில்தான் என் இறுக்கம் நெகிழ்கிறது. மெல்லக் கற்ற மாணவர்கள்தான் ஆத்மார்த்தமாய் என்னோடு நெருங்கி இருந்திருக்கிறார்கள். என்றென்றைக்கும்நம்பிக்கைக்குரிய அவர்களுக்காகவே நான் தொடர்ந்து பேசுகிறேன். எழுதுகிறேன். ச. மாடசாமி கல்வி,கலாச்சாரம்,மொழி,பேச்சு உட்பட சமூகத்தின் நிலப்பரப்பில் எத்தனையோ மேடு பள்ளங்கள். அவற்றை இனங்கண்டு பாதுகாப்பாய் சமூகத்தைச் சமன் செய்ய ஒரு வெளிச்சம் தேவையாயிருக்கிறது….

Read More
நூல் அறிமுகம் 

(முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்)

பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய Murder in Mudukulathur: Caste and Electrol Politics in Tamilnadu (முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்) புத்தக வெளியீட்டு விழா பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய (Murder in Mudukulathur: Caste and Electrol Politics in Tamilnadu) முதுகுளத்தூர் படுகொலை, தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும் என்னும் நூல் வெளியீட்டு விழா 29.05. 2017 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேனாள் துணைவேந்தர் ம.சு.பல்கலைக் கழகத்தின், முனைவர் வே. வசந்திதேவி தலைமை வகித்தார். இந்நூலை கஸ்தூரி – சன்ஸ் லிமிட்டெட்டின் தலைவர் என். ராம் நூலை வெளியிட்டார். விழாவில் முதல் பிரதியை (உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் பிரதியைப் பெற்றுக் கொண்டார்….

Read More
நூல் அறிமுகம் 

பண்பாட்டுக் களத்தில்

மார்க்சிஸ்ட் மாத இதழ்   உண்மையில் பாஜக ஆட்சிக்குவருவதும், ஆர்.எஸ்.எஸ் வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றிதோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது. இத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூல் வழங்கும்.

Read More
Uncategorized 

புதிய ஆராய்ச்சி

சிற்றிதழ் அறிமுகம் ஆய்வாளர், ஆசிரியர், தோழர் நா.வானமாமலை ஒரு சகாப்தம்.தென் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் ஓர் அங்கமாக ஓர் அறிவியக்கத்தை உருவாக்கிய முன்னோடி.எண்ணற்ற அறிவுஜீவிகளை மார்க்சியப் பாதையில் நடைபயின்று, மார்க்சியப் பார்வையில் தமிழக வரலாறு,சமூகம்,இலக்கியம்,அரசியல்,அழகியல் ஆகியவற்றை நுணுகி ஆய்வு செய்யப் பழக்கியவர். அவர்களது பணிக்கும் அர்ப்பணிப்பிற்கும் காரணமான ஓர் ஆதர்சமாக விளங்கியவர். அவர்களது ஆய்வும்,விவாதங்களும் அரங்கேற ஓர் ஊர்தியாக ‘ ஆராய்ச்சி ‘ என்ற தனித்துவம் கொண்ட இதழையும் நடத்தியவர். தமிழக மக்கள் தாங்கள் வாழும் மண்ணையும் அதன் பாரம்பரியத்தையும்,பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளுக்கு நடக்க வேண்டிய திசைவழியையும் சுட்டிக்காட்டி அரும்பணியாற்றியது ஆராய்ச்சி. நா.வா.வின் பாரம்பரியத்தில் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடரும் விதமாக அவரின் மாணவர்கள்,தோழர்களால் இப்போது நடத்தப்படும் இதழ் ‘ புதிய ஆராய்ச்சி. ‘ ஆண்டிற்கு இரு இதழ்களாக வெளிவரும் எனத் தெரிகின்றது. 2016, ஜூலை –…

Read More
புரட்சி இலக்கியங்கள்: ஒரு மீள்வாசிப்பு 

இருபதாம் நூற்றாண்டில் மார்க்சியம்

என்.குணசேகரன் மார்க்சியம், இரண்டு நூற்றாண்டுகளில் அடைந்த வளர்ச்சியை ஆழமாக வாசிப்பவர்கள்,லெனின் குறிப்பிட்ட ஓர் அற்புதமான கருத்து சரியானது என்பதனை உணருவார்கள்.லெனின் எழுதினார்: “மார்க்சிய கருத்தாக்கங்கள் சர்வ வல்லமை கொண்டவை; ஏனென்றால், அவை உண்மையானவை’ (மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்,மூன்று மூலக்கூறுகளும்.) மார்க்சிற்கு முந்தைய காலங்களில் உருவான மேன்மையான சிந்தனைகளை உள்வாங்கி,அவற்றை ‘இரக்கமற்ற விமர்சனம்” என்ற உரைகல்லில் உரசி, மார்க்ஸ், எங்கெல்ஸ் கட்டியமைத்த மகத்தான தத்துவம்தான் மார்க்சியம். இதனை இன்னும் நுட்பமாக லெனின் விளக்கினார்: “ஜெர்மானிய தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மனித சிந்தனை உருவாக்கிய அனைத்து மேன்மையான படைப்பாக்கங்களுக்கெல்லாம் வாரிசாகத் திகழ்வது, மார்க்சியம்.”19-ஆம் நூற்றாண்டில் உருவான மார்க்சியத்திற்கு, வளமையான பங்களிப்புக்கள் 20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் பல மார்க்சிய சிந்தனையாளர்கள் பங்களிப்பு செலுத்தியது மட்டுமல்ல;ஆசிய,ஆப்பிரிக்க கண்டங்கள் உள்ளிட்ட பல…

Read More

பேச மறுக்கும் சமூகத்தின் அசிங்கம்

– பழனி ஷஹான் நமக்குள் நிகழ்ந்திடாத அனுபவத்தின், நாம் அறியாத மனித வாழ்க்கையின் பக்கங்களைத் தூக்கிச் சுமப்பதே புத்தகங்களின் தார்மீகக் கடமையாக இருக்கின்றது. வ.கீரா-வின் எழுத்தில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “மோகினி” எனும் சிறுகதைத் தொகுப்பு அப்படியான வலிகள் நிரம்பிய வாழ்க்கையின் கதைகளையே நமக்குச் சொல்கிறது. கதைகளின் பெரும்பான்மையானவை, பாரதிராஜாவின் படங்களைப் போல கிராமத்தின் வாசனையால் நிரம்பியிருக்கின்றன. நம் ஆழ் மனதில் படிந்திருக்கும் கிராமத்தின் தோரணைகள் ‘மோகினியில்’ அப்படியே வெளிப்பட்டிருந்தாலும், அது சொல்லும் கதைகளில் சில கிராமத்தின் தனியுடைமையிலிருந்து சற்று விலகி நின்று காட்சியளிக்கின்றன. ஒரு சொல் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது. அலிகள், அரவானிகள் என்கிற சொல்லுக்கு மாற்றாய் ‘திருநங்கைகள்’ எனும் சொல்லாடல் பிறந்தது. அதுவெறும் சொல் மாற்றமல்ல. ஓர் இனத்தின் அல்லது சமூகத்தின் மீதான கறையைத் துடைக்கும் புரட்சியாகும். ஆனால் திருநங்கை என்கிற சொற்பிரயோகம் அவர்களின்…

Read More
நூல் அறிமுகம் 

ஸ்தாபனம்… மக்களிடமிருந்து மக்களுக்கு…

“பியானோவை வாசிக்க பத்து விரல்களையும் இயக்க வேண்டும்.சில விரல்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைத் தவிர்த்தால் அதை இயக்க முடியாது.பத்து விரல்களையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் இன்னிசை பிறப்பதில்லை.ஒரு நல்ல இசையை உருவாக்குவதற்கு பத்து விரல்கள் நயமாகவும் ஒன்றிணைந்தும் இயங்க வேண்டும்….” இசைக்கலைஞர் ஒருவரின் கருத்து இது என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால்,கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் தொடர்பாக செஞ்சீனப்புரட்சி நாயகர் மாவோ சொன்ன மேற்கோள் இது.இதை எதற்கு உவமையாக மாவோ சொன்னார்? “கட்சிக்கமிட்டி தனது மையமான கடமையினை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் மையமான கடமைகளுக்கு மத்தியில் மற்ற தளங்களில் வேலைகள் திறந்து விடப்பட வேண்டும்.தற்சமயத்தில் நாம் பல தளங்களில் இந்த கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சில பிரச்சனைகளில் மட்டும் நமது மொத்தக் கவனத்தையும் செலுத்துதல் கூடாது.” என்று சொல்லுகிற மாவோ மீண்டும் பியானோவைக் கையில்…

Read More
நேர்காணல் 

சோஷலிச எழுத்தின் அடிப்படைகள்

தோழர் விஜய் பிரசாத் உடன் ஒரு நேர்காணல் மார்க் நோவாக் தமிழில் – ச.சுப்பாராவ் சோஷலிச எழுத்து என்பது எழுதுபவரின் மேதமை பற்றியதல்ல; அது அவர்கள் சமூகத்தோடு நடத்தும் உரையாடல் பற்றியது. இடதுசாரி எழுத்துகள் பெரும்பாலும் யாராலும் எளிதில் நுழைய இயலாத குழூஉக்குறிகள் கொண்ட, யாரும் நேரம் செலவழிக்கத் தயாராக இல்லாத, மார்க்சிய மொழியில் இருப்பவை என்றோ, அல்லது மிகு எளிமைப் படுத்தப்பட்ட பிரச்சாரம் என்றோ, கேலிச்சித்திரமாக ஆக்கப்படுகின்றன. எனினும், ஒருவரது அரசியல், அவர் புரியாதபடி எழுதுவதை, வறட்டுத்தனமாக எழுதுவதை, அல்லது சாதாரணமாக ஒரு மோசமான எழுத்தாளராக இருப்பதை, ஒருபோதும் தடுக்க முடியாது. ஆனால், இடதுசாரிகளின் வரலாறு, தம்மிடம் சொல்வதற்கு முக்கியமான செய்தி உள்ளது என்பதற்காக பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் செய்தி பரந்த முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கும்…

Read More