ஆபே

ஹசன் மாலுமியார் ஒரு தச்சரின் மகன்தான் ஆபே. இவன்தான் பிற்காலத்தில் அமெரிக்காவின் மிகச் சிறந்த அதிபராக ஆனான். இது உங்களுக்கு வியப்பளிக்கிறதா? ஆயினும் இது உண்மைதான்! சிறு வயதில் ஆபே என்று அழைக்கப்பட்ட ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கையில் இதுபோன்ற நம்ப முடியாத சம்பவங்கள் நிறைய உண்டு. ஆபிரகாம் லிங்கனின் தந்தையின் பெயர் தாமஸ் லிங்கன். தன் பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. அதைத் தவிர, அவரது வேலையும் அடிக்கடி இடம் மாறிக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் புதிய இடங்களுக்குக் குடிபெயரவேண்டியிருக்கும். தந்தையால் எந்த இடத்திலும் நிலைத்திருக்க முடியவில்லை. இந்தக் காரணங்களால் ஆபேவுக்கு இளம் பருவத்தில் கல்வி கிடைக்கவில்லை. அவன் மிகவும் கஷ்டப்பட்டு தானே படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டான். படிக்கத் தெரிந்தவுடன் ஆபே, புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டான். ஆனால் புத்தகங்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. எனவே,…

Read More

கிளிப்பேச்சு

இருப்புப் பாதையில் கருங்கல் ஜல்லிகள் இருப்புப் பாதையில் கருங்கல் ஜல்லிகள் நிறைப்பது ஏன் தெரியுமா? இருப்புப் பாதையில் மிகப் பெரும் எடையுள்ள ரயில் வண்டிகள் தொடர்ந்து செல்லும்போது ஏற்படும் அழுத்தங்களைத் தாங்கிக்கொண்டு, இருப்புப் பாதையின் மட்டம் (Level) மாறாமல் இருப்பதற்கு கருங்கல் ஜல்லி உதவுகிறது. இருப்புப் பாதைகளுக்குக் குறுக்காகப் பிணைத்திருக்கும் கட்டைகளை ஸ்லீப்பர் (Sleeper) கட்டைகள் என்று சொல்வார்கள். இந்த ஸ்லீப்பர் கட்டைகளின் மீது கருங்கல் ஜல்லிகளைத் திணித்துக் கெட்டித்து, இருப்புப் பாதையைச் சீராக அமைப்பது வழக்கம். இந்தச் சம மட்டமான அமைப்பில் மாற்றம் ஏதும் வந்திருக்கிறதா என்று அடிக்கடி பரிசோதிப்பார்கள். தேவைப்பட்டால் தண்டவாளத்தின் அடியில் கூடுதல் ஜல்லிகளைக் கெட்டிக்கவும் வேண்டியிருக்கும். ரயில் வண்டிகள் செல்லும்போது ஏற்படும் குலுங்கல்களையும் அதிர்ச்சிகளையும் அழுத்தங்களையும் தாங்கிக்கொண்டு ரயில் பாதையின் சீரான நிலையைக் காப்பதற்கு கருங்கல் ஜல்லிகளால் முடியும். எனவேதான் இருப்புப்…

Read More

காடு

உவமைக் கவிஞர் சுரதா கார்த்திகைத் தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடி – கிளியே பார்வை குளிருமடி! காடு பொருள் கொடுக்கும் காய்கனி ஈன்றெடுக்கும் கூடிக் களித்திடவே – கிளியே குளிர்ந்த நிழல் கொடுக்கும்! குரங்கு குடியிருக்கும் கொம்பில் கனி பறிக்கும் மரங்கள் வெயில் மறைக்கும் – கிளியே வழியில் தடையிருக்கும்! மாவும் பழுத்திருக்கும் மலர்கள் விழித்திருக்கும் பூவின் மது சுரக்கும் – கிளியே போவார் அடி வழுக்கும்! பச்சை மயில் நடிக்கும் பன்றி கிழங்கெடுக்கும் நச்சரவங்* கலங்கும் – கிளியே நரியெல்லாம் ஊளையிடும். கல்லுரல் போன்ற முகம் காட்டிடும் பன்றிகளை மெல்லிய மான் தடுக்கும் – கிளியே வேங்கைகள் வால் நிமிர்க்கும்! சிங்கம் புலி கரடி சிறுத்தை விலங்கினங்கள் எங்கும் திரியுமடி – கிளியே இயற்கை விடுதியிலே!

Read More

பொன்மொழிகள்

• மகிழ்ச்சி பனித்துளிபோன்றது. சிரிக்கும்போதே உலர்ந்துவிடுகிறது – மகாகவி தாகூர் • ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம் – வோயஸ் • நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்ப்பது சிறுமைக் குணமே ஆகும் – தந்தை பெரியார் • அறிவின் வழியே செல்பவன் புகழப்படுவான். உணர்ச்சியின் வழியே செல்பவன் இகழப்படுவான் – வி.ச. காண்டேகர் • உன்னை ஒருவர் குறைத்துப் பேசும்போது அடக்கமாக இரு – அது உன் வீரம். உன்னை ஒருவர் புகழ்ந்து பேசும்போது எச்சரிக்கையாக இரு -அது உன் விவேகம் – ஃபிராங்க்வுட் • படித்து வளர்ந்த பின் நான் கற்றுக்கொண்டதைவிட, படிக்கத் தெரியாத என் தாயிடம் நான் கற்றுக்கொண்டவையே அதிகம் – காந்தியடிகள் • கேலியைக் கண்டு ஏன் கவலைப்படவேண்டும்? உன் மீது…

Read More

புத்தரும் மேய்ப்பனும்

அன்வர் அலி புத்தர் தவம் செய்துகொண்டிருந்தார். கடுமையான கோடைக்காலம். மனிதர்களாலும் மற்ற பிராணிகளாலும் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. வெப்பத்தால் புத்தரும் கஷ்டப்பட்டார். உடல் சோர்ந்து பலவீனமடைந்தார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர் மயங்கி விழுந்தார். கொஞ்சம் நேரம் சென்றது. ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் ஆடுகளை ஓட்டியபடி அந்த வழியாக வந்தான். மர நிழலில் மயங்கிக் கிடக்கும் புத்தரைப் பார்த்து அவன் அதிர்ச்சியடைந்தான். பக்கத்தில் சென்று பார்த்தான். புத்தரைத் தொட்டுப் பார்ப்பதற்கு அவனுக்குத் தைரியம் வரவில்லை. ‘நான் கீழ் சாதிக்காரன் ஆயிற்றே. நான் தொட்டால் இவரின் தூய்மை கெட்டுவிடும். இவரைத் தொடுவதன் மூலம் எனக்குப் பாவம் ஏற்பட்டுவிடுமே!’ என்று அவன் நினைத்தான். ஆயினும் புத்தரை அப்படியே விட்டுச் செல்ல அவனுக்கு மனம்வரவில்லை. ஏதாவது செய்யவேண்டுமே, என்ன செய்வது? வாயிலும் முகத்திலும் தண்ணீர் பட்டால் புத்தர் மயக்கம் தெளிந்து…

Read More
கட்டுரை 

நதிகள்

மழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது. நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன. பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும்…

Read More
Uncategorized 

மூங்கில் பூச்சிகள்

பார்த்தால் உயிருள்ள பூச்சிகளைப்போன்று தோன்றும் இவை, மூங்கிலில் செய்யப்பட்ட சின்னச் சிற்பங்கள். ஜப்பானியர் ‘நோரியுகி சைதோ’ (Noriyuki saitoh) உருவாக்கியவை.

Read More
Uncategorized 

கண்ணாடிப் பூக்கள்

மேலே உள்ள வெள்ளைப் பூக்களைப் பாருங்கள். இப்போது கீழே பாருங்கள், கண்ணாடி இதழ்களுள்ள அருமையான பூக்கள்! இரண்டும் ஒரே பூக்கள்தான். வெள்ளைப் பூக்களில் தண்ணீர் விழுந்தபோது இதழ்கள் கண்ணாடிபோன்று ஆகிவிட்டன! தண்ணீர் காய்ந்துவிட்டால் இந்தப் பூக்கள் மீண்டும் வெள்ளை நிறமாகிவிடும்! இந்தக் கண்ணாடிப் பூவின் பெயர் ‘எலும்புக்கூடுப் பூ’ (Skeleton Flower). இதன் அறிவியல் பெயர், ‘Diphelleia grayi.’ அமெரிக்காவில் அப்பலாச்சியன் மலைகளிலும் (Appalachian Mountains) சீனாவிலும் ஜப்பானிலும் மட்டுமே இந்தப் பூக்கள் இருக்கின்றன.

Read More
Uncategorized 

படகு

வி. சுதேயெவ் | தமிழில்: பூ. சோமசுந்தரம் தவளை, கோழிக்குஞ்சு, சுண்டெலி, எறும்பு, வண்டு ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உலாவச் சென்றன. சற்று நேரத்தில் ஓடைக் கரைக்கு வந்தன. “ஆகா! குளிக்கலாம், வாருங்கள்!” என்று சொல்லி, ‘டபக்’ என்று தண்ணீரில் பாய்ந்தது தவளை. “எங்களுக்கு நீந்தத் தெரியாதே!” என்று கோழிக்குஞ்சும் சுண்டெலியும் எறும்பும் வண்டும் கத்தின. கோழிக்குஞ்சுக்கும் சுண்டெலிக்கும் எறும்புக்கும் வண்டுக்கும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘தவளை நம்மை அவமானப்படுத்திவிட்டதே! எப்படி இந்த அவமானத்தைப் போக்குவது?’ என்று ஆலோசித்தன. யோசித்தன, யோசித்தன, அப்படி யோசித்தன. பிறகு இப்படிச் செய்தன. “கர்ர் – புர்ர், கர்ர் – புர்ர்” என்று ஏளனமாகச் சிரித்தது தவளை. “உங்களுக்கெல்லாம் நீந்தக்கூடத் தெரியவில்லையே, நீங்களெல்லாம் உதவாக்கரைகள், சோம்பேறிகள்” என்று தவளை கேலி செய்தது. கோழிக்குஞ்சு ஓடிப்போய், ஒரு இலையைக் கொத்தி எடுத்து…

Read More
Uncategorized 

ஆசிரிய முகமூடி அகற்றி

பா. ப்ரீத்தி   அமெரிக்கப் பள்ளி ஆசிரியர் பிராங்க் மக்கோர்ட் (Frank Mccourt) என்பவர், தனது கற்பித்தல் அனுபவங்களை Teacher man என்ற நூலாக எழுதியிருக்கிறார். ஆசிரியர் மக்கோர்ட்டின் அனுபவத்தையும் தனது வாசிப்பு அனுபவத்தையும் இணைத்து ‘ஆசிரிய முகமூடி அகற்றி’ என்ற தலைப்பில் பேராசிரியர் ச.மாடசாமி இந்நூலை எழுதியிருக்கிறார். 1950களில் அமெரிக்கப் பள்ளிகளில் தனக்குக் கிடைத்த வகுப்பறை அனுபவங்களை உள்ளது உள்ளபடியே எழுதியிருக்கிறார் மக்கோர்ட். வகுப்பறையை ஆசிரியர்- மாணவர் மோதும் களமாகத்தான் பார்க்கிறார் மக்கோர்ட். கூச்சலிடும்-கட்டுப்பட மறுக்கும்-சண்டையிடும் விடலைகளின் வகுப்பில்தான் மக்கோர்ட் ஆசிரியராக முதன்முதலில் நுழைகிறார். மாணவர்களைப் பேசவைத்து எந்த விதத்திலும் அவர்களை வெல்ல முடியாமல் கடைசியில் கத்திக்குத்து பட்டு அவர்களை வெல்கிறார். மாணவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆசிரியரிடம் என்ன இருக்கிறது? பிரம்பா? துப்பாக்கியா? ஆசிரியரிடம் இருப்பது வாய் மட்டுமே! A Teacher has nothing but…

Read More