You are here
Uncategorized 

வானவில் யூகலிப்டஸ் (Rainbow eucalyptus) செல்வி ஹவாயில் (Hawaii) கவாய் (Kauai) எனும் இடத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்தால் யாரோ வண்ணம் தீட்டி வைத்த மரங்கள்போன்றிருக்கும். இந்த மரங்கள் ரெயின்போ யூகலிப்டஸ் மரங்கள் என்று அறியப்படுகின்றன. மரத்தின் மேல் தோல் வருடத்தில் ஒருமுறை பல சமயங்களில் உதிர்ந்துபோகும். அப்போது உள்ளிருக்கும் மரத்தின் பச்சை நிறத்தைப் பார்க்க முடியும். இந்தப் பச்சை நிறம் நாட்கள் செல்லச் செல்ல நீலம், ஊதா, ஆரஞ்சு, செம்பழுப்பு ஆகிய நிறங்களாக மாறும். அவ்வாறு மரத்தின் தோல், வானவில்போன்று பல நிறங்களில் காணப்படும். இந்த மரங்கள் ஏறத்தாழ 250 அடி உயரம் வளரும். அகலம் ஏறத்தாழ ஆறு அடி. ஒவ்வொரு மரத்தின் வண்ண அமைப்பும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.

Read More
Uncategorized 

சிங்கத்தின் நேர்காணல்

லாத்விய நாடோடிக்கதை ஓவியர்: இலோனா சிபி தமிழில்: கயல்விழி காட்டில் ஒரு சிங்கம் விலங்குகளின் ராஜாவாக வாழ்ந்துவந்தது. அதற்கு மிகவும் வயதாகிவிட்டது. முன்பைப்போல பாய்ந்து சென்று வேட்டையாட முடியவில்லை. இனி எப்படி உயிர்வாழ்வது என்று அது தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது. கடைசியில், விலங்குகள் அனைத்தையும் தன் குகைக்கு அழைத்துச் சொன்னது: “அன்பான என் குடிமக்களே, என் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். அதற்கு முன்பு உங்களில் சிறந்த ஒருவரை என் வாரிசாகத் தேர்ந்தெடுத்து இந்தக் காட்டுக்கு ராஜாவாக நியமித்துவிட்டால் என் கடமை முடிந்துவிடும். அதன் பிறகு நான் நிம்மதியாக இறந்துபோவேன். அதனால் உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேர்காணல் செய்து உங்கள் திறமையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும்.” காட்டுக்கு ராஜா ஆகிவிடவேண்டும் என்று எல்லா விலங்குகளும்…

Read More
Uncategorized 

அந்தக் கடைசி நாள்கள்…

கவிஞர் புவியரசு ‘‘உலகம் எப்போது அழியப் போகிறது?’’ இது ஒரு மகத்தான கேள்வி. யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். உடனே எதிர்க்கேள்விதான் எழும். ‘‘யார் சொன்னது?’’ “எதுக்கு அழியணும்?’,’ ஏன் அழியணும்?’’ என்பதுபோல…. கொஞ்சம் விவரமான ஆளிடம் கேட்டால்… சற்று யோசித்து நிதானமாகப் பதில் சொல்லக்கூடும். ‘‘இப்படியே போய்ட்டிருந்தா ஒரு அஞ்சு வருஷத்துக்குள்ளே அழிஞ்சு போயிறலாம். அதுக்கான வாய்ப்பு நெறயவே இருக்கு… கொஞ்சம் சுருக்கமா, விளக்கமா சொல்ல முடியுமா?’’ என்று பவ்வியமாகக் கேட்டால், அவர் இப்படிச் சொல்வார். ‘‘அழிவுக்கு ரெண்டு மூணு காரணங்கள் இருக்கு. எது முந்திக்கிதோ, தெரியலெ. ஒண்ணு. பூமி சூடாயிட்டே போறதாலெ பனிமலைகள், துருவப்பகுதிகளோட பனியுருகி, ஆறுகள் வெள்ளம் பெருகி, நதிக்கரை நகரங்கள் எல்லாம் அழியும். பெருகின தண்ணியெல்லாம் கடல்ல சேந்து, கடல் மட்டம் ஒசந்து சென்னை மாதிரி நகரங்களெல்லாம் அழியும். தப்பினவங்க உள்நாநட்டைப் பாத்து…

Read More
Uncategorized 

ஒரு மானுடப்பறவையின் பயணம்

பாவண்ணன் 20.06.1987 அன்று எங்களுக்கு மகன் பிறந்தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக என் தோள்பை நிறைய சாக்லெட்டுகளை எடுத்துச் சென்று மருத்துவமனைக் கூடத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினேன். அது ஒரு கொண்டாட்டமான கணம். என் உடலில் முளைத்த ரகசிய இறக்கைகளை அசைத்தசைத்து திக்குத்திசை புரியாமல் பறந்தபடி இருந்தேன். ஒரு கூடத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் கொடுத்த பிறகு, அடுத்தடுத்த கூடங்களில் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் என்னவென்று தோன்றியது. மறுகணமே அங்கே நுழைந்து எல்லோருக்கும் சாக்லெட்டுகளை வழங்கிவிட்டுத் திரும்பினேன். இப்படியே நடந்து நடந்து மருத்துவர்கள் அறைவரைக்கும் சென்றுவிட்டேன். எல்லா மருத்துவர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்குப் பேறு பார்த்த மருத்துவரை மட்டும் காணவில்லை. இருந்தவர்கள் அனைவருமே வாழ்த்துச் சொல்லோடும் புன்னகையோடும் சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டார்கள். அன்று மாலையில் மீண்டும் அந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். அறையில் அவரைக் காணவில்லை. அதற்கடுத்த…

Read More
Uncategorized 

அறிவியலின் நிறம் சிவப்பு

ஆயிஷா இரா. நடராசன் டேவிட் பொடானிஸ் எழுதிய ஐன்ஸ்டீனின் வாழ்க்கை வரலாறு e=mc2 வாசித்துக்கொண்டிருந்த போது ஓர் இன்ப அதிர்ச்சி.ஐன்ஸ்டீன் தனது ரஷ்ய அறிவியல் நண்பர்களை 1931-இல் சந்திக்கிறார்.இடம் ஸ்டாக்ஹோம் – ஸ்வீடன். “எங்கள் நாட்டு க்யூரி” என அவர் பெருமையோடு அழைத்த லைஸ் மெய்ட்னர்,ஓட்டோ ஹான், ஹெய்ஸின்பர்க் இவர்களோடு கணிதமேதை ஹெர்மன் மின்கோவஸ்கி உட்பட ஆறேழு சோவியத் இயற்பியல் விஞ்ஞானிகள் அங்கிருந்தனர். மார்ச் -14 அன்று,ஐன்ஸ்டீனின் பிறந்த நாள்! பிறந்தநாள் பரிசு பற்றி பேச்சு வந்த போது ஐன்ஸ்டீன் தனது சோவியத் சகாக்களிடம் கேட்டது: யெவ்ஜெனி சம் யாட்டின்(yevjeny zam yatin) ரஷ்ய அறிவியல் நாவல், நாம் (We)! என் அதிர்ச்சியும்,ஆச்சரியமும் அதோடு முடிந்து விடவில்லை. சமீபத்தில் என் கவனம் பெற்ற மற்றொரு கட்டுரை, “நான் எப்படி சோஷலிஸ்ட் ஆனேன்?” எனும் தலைப்பில் தி வீக்லி…

Read More

சிவாஜிகணேசன் படிக்காத சுயசரிதை

ச.சுப்பாராவ் Bricks between and at any cost, The Surgeon-General’s Prescription and Vichu’s Wife, The Gypsy girl and Vaikunta Vaithiyar, The wedding of Valli, The Good Sister போன்ற ஏராளமான நாடகங்களை எழுதியவர் அவர் என்றதும் வாசகர்கள் அவரை ஓர் ஆங்கிலேயர் என்று நினைத்துவிட வேண்டாம். நாடக நடிகர்களை கூத்தாடிகள் என்று சமூகம் ஏளனமாக நடத்திய காலத்தில், படித்தவர்களை வைத்து நாடகம் போட்டு, நாடக நடிகர்களுக்கு கலைஞர்கள் என்ற அந்தஸ்து கிடைக்க தன் சிறுவயதிலிருந்து பாடுபட்டவர் அவர். அதன் காரணமாகவே தாம் எழுதிய நாடகங்களுக்கு படித்தவர் மத்தியில் ஒரு மரியாதை ஏற்பட வேண்டும் என்பதற்காக மேற்குறித்தவாறு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியவர். அவற்றில் கடைசி இரண்டு நாடகங்கள் நாம் காலம்காலமாகப் பார்த்து வரும் வள்ளி திருமணம், நல்ல தங்காள் என்பதை…

Read More

பயிலுவோம் அழ. வள்ளியப்பா

தேனி ருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல், சீனி யுள்ள இடத்தினைத் தேடி ஊரும் எறும்புபோல், பழம் நிறைந்த சோலையைப் பார்த்துச் செல்லும் கிளியேபோல், வளம் நிறைந்த நாட்டிலே, வந்து சேரும் மக்கள்போல், பள்ள மான இடத்தினைப் பார்த்துப் பாயும் வெள்ளம்போல், நல்ல நல்ல நூல்களை நாடி நாமும் பயிலுவோம்!

Read More
Uncategorized 

தப்பிச் சென்ற கைப்பேசி

ஷினோரா சித்திரங்கள்: கி. சொக்கலிங்கம் ஒரு கைப்பேசி மேசை மீது இருந்தது. நீண்ட நேரம் தனியாக இருந்ததால் அதற்கு சலிப்பாக இருந்தது. அதனால் அது மேஜையிலிருந்து ஒரே தாவாக கீழே தாவியது. மெதுவாக நடந்து வாசலுக்கு வந்தது. வளாகக் கதவைப் பிடித்துக்கொண்டு சாலையைப் பார்த்தது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் ஏதும் வரவில்லை. எனவே, சாலையில் வேக வேகமாக ஓடியது. அப்படி நீண்ட தூரம் ஓடியது. நீண்ட தூரம் ஓடியதால் அதற்குக் களைப்பாக இருந்தது. அதனால் அது ஒரு கிளாஸ் சர்பத் குடித்துவிட்டு மீண்டும் ஓடியது. மீண்டும் அதற்குக் களைப்பாக இருந்தபோது பூரி சாப்பிட்டது. பிறகு கொஞ்ச நேரம் ஒரு பூங்காவில் படுத்திருந்தது. பிறகு அது சாலைக்கு வந்து, அங்கு ஓடிக்கொண்டிருக்கும் கார்களுடன் போட்டி போட்டுக்கொண்டு ஓடியது. இரவானபோது தூங்கிவிட்டது. மறு நாள் எழுந்ததும் அதற்குப் பயமாக…

Read More

இஸ்மத் சுக்தாய் கதைகளும் திரை விலகி வெளிப்படும் குரல்களும்

முபீன் சாதிகா இஸ்மத் சுக்தாய் எழுதிய கதைகளின் தொகுப்பு மொழிபெயர்க்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக விரைவில் வரவிருக்கிறது. இஸ்மத் சுக்தாய் உருது மொழி பெண் இலக்கியவாதிகளில் முதன்மையானவர். மிகவும் துணிச்சலான சர்ச்சைக்குரிய எழுத்தாளர். 1911ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி உத்தரப்பிரதேசம் பதௌனில் தன் பெற்றோருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தவர். இவருடைய தந்தை மேஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். இஸ்மத்துடன் பிறந்தவர்கள் பத்து பேர். நான்கு அக்காக்களும் நான்கு அண்ணன்களும் ஒரு தம்பியும் இவருக்கு இருந்தனர். தனது அண்ணன்மார்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியதால் நேரடியாகவும் துணிவுடனும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் முடிந்தது என்று இஸ்மத் கூறியிருக்கிறார். இஸ்மத் சுக்தாய் பல சிறுகதைகளையும், குறுநாவல்களையும், சினிமாவுக்கான திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகள்தான் அவருடைய படைப்பாக்கத்தைச் செம்மையாக வெளிப்படுத்தும் இலக்கிய வடிவங்களாக இருந்தன. உருது மொழியின் அடர்ந்த பண்பை தனது படைப்புகளில் செறிவுற்ற வகையில்…

Read More
Uncategorized 

புவி வெப்பமேற்றத்தை புரிய வைத்தவர்

ஆயிஷா இரா. நடராசன் மனிதனுக்கு ஏழாவது அறிவு என்ற ஒன்று இருக்குமேயானால் அதைப் பகுத்தறிவித்தவர் ஃபிராங்க் ஹெர்பர்ட் (Frank Herbert) 1962ல் வெளிவந்து இன்று வரை மிக அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட அறிவியல் புனைகதை எனும் தகுதியைத் தக்க வைத்து வரும் அவரது டியூன் (Dune) உலகின் முதல் சுற்றுச் சூழலியப் படைப்பாக உயர்ந்து நிற்கிறது. டியூன் ஒரே நீண்ட (1100பக்கம்) படைப்பு. ஆனால் அதுதான் முதலில் மூன்று பிரதான விஷயங்களை முன் வைத்து உலகின் ஆன்மாவை உலுக்கியது. 1. புவியின் வெப்பம் அதிகரித்துவருகிறது (Global Warning) இதனால் கடலின் மட்டம் உயரும்போது பேரழிவுகள் ஏற்படப்போகின்றன. 2. மனிதனின் வியாபாரத் தலையீடுகளால் முற்றிலும் அழிந்து போகும் உயிரினங்களை திரும்ப படைத்து புவிக்கு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. 3. மனிதனின் உயிரின தக்க வைப்பு சுற்றுச் சூழல்…

Read More