You are here
Uncategorized 

புதிய ஆராய்ச்சி

சிற்றிதழ் அறிமுகம் ஆய்வாளர், ஆசிரியர், தோழர் நா.வானமாமலை ஒரு சகாப்தம்.தென் தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கத்தின் ஓர் அங்கமாக ஓர் அறிவியக்கத்தை உருவாக்கிய முன்னோடி.எண்ணற்ற அறிவுஜீவிகளை மார்க்சியப் பாதையில் நடைபயின்று, மார்க்சியப் பார்வையில் தமிழக வரலாறு,சமூகம்,இலக்கியம்,அரசியல்,அழகியல் ஆகியவற்றை நுணுகி ஆய்வு செய்யப் பழக்கியவர். அவர்களது பணிக்கும் அர்ப்பணிப்பிற்கும் காரணமான ஓர் ஆதர்சமாக விளங்கியவர். அவர்களது ஆய்வும்,விவாதங்களும் அரங்கேற ஓர் ஊர்தியாக ‘ ஆராய்ச்சி ‘ என்ற தனித்துவம் கொண்ட இதழையும் நடத்தியவர். தமிழக மக்கள் தாங்கள் வாழும் மண்ணையும் அதன் பாரம்பரியத்தையும்,பிரச்சனைகளையும் அவற்றின் தீர்வுகளுக்கு நடக்க வேண்டிய திசைவழியையும் சுட்டிக்காட்டி அரும்பணியாற்றியது ஆராய்ச்சி. நா.வா.வின் பாரம்பரியத்தில் அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடரும் விதமாக அவரின் மாணவர்கள்,தோழர்களால் இப்போது நடத்தப்படும் இதழ் ‘ புதிய ஆராய்ச்சி. ‘ ஆண்டிற்கு இரு இதழ்களாக வெளிவரும் எனத் தெரிகின்றது. 2016, ஜூலை –…

Read More

பேச மறுக்கும் சமூகத்தின் அசிங்கம்

– பழனி ஷஹான் நமக்குள் நிகழ்ந்திடாத அனுபவத்தின், நாம் அறியாத மனித வாழ்க்கையின் பக்கங்களைத் தூக்கிச் சுமப்பதே புத்தகங்களின் தார்மீகக் கடமையாக இருக்கின்றது. வ.கீரா-வின் எழுத்தில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “மோகினி” எனும் சிறுகதைத் தொகுப்பு அப்படியான வலிகள் நிரம்பிய வாழ்க்கையின் கதைகளையே நமக்குச் சொல்கிறது. கதைகளின் பெரும்பான்மையானவை, பாரதிராஜாவின் படங்களைப் போல கிராமத்தின் வாசனையால் நிரம்பியிருக்கின்றன. நம் ஆழ் மனதில் படிந்திருக்கும் கிராமத்தின் தோரணைகள் ‘மோகினியில்’ அப்படியே வெளிப்பட்டிருந்தாலும், அது சொல்லும் கதைகளில் சில கிராமத்தின் தனியுடைமையிலிருந்து சற்று விலகி நின்று காட்சியளிக்கின்றன. ஒரு சொல் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது. அலிகள், அரவானிகள் என்கிற சொல்லுக்கு மாற்றாய் ‘திருநங்கைகள்’ எனும் சொல்லாடல் பிறந்தது. அதுவெறும் சொல் மாற்றமல்ல. ஓர் இனத்தின் அல்லது சமூகத்தின் மீதான கறையைத் துடைக்கும் புரட்சியாகும். ஆனால் திருநங்கை என்கிற சொற்பிரயோகம் அவர்களின்…

Read More
Uncategorized 

அ. பாக்கியம் எழுதிய பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல்

நூல் வெளியிடு மூளை வளர்ச்சிக்கு அடிப்படையே அசைவ உணவுதான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள “பசு பாதுகாப்பு: பாசிச அணிதிரட்டல்” சிறுநூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (மே 28) சென்னையில் நடைபெற்றது. இந்நூலை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் வெளியிட, மாவட்டக் குழு உறுப்பினர் வி.செல்வி பெற்றுக்கொண்டார். இந்நூல் குறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வே.மீனாட்சிசுந்தரம் பேசியது வருமாறு:இந்தியாவில் உள்ள 120 கோடி பேரில் 20 கோடிபேர்தான் சைவம் உண்பவர்கள். மீதமுள்ள 100 கோடிபேர் அசைவ உணவு உண்பவர்கள். அனைவரும் சைவம்உண்ண ஆரம்பித்தால் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படும். மூளை வளர்ச்சிக்கு அடிப்படையே அசைவ உணவுதான். குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற காரணமாக…

Read More
Uncategorized 

துன்பங்கள் தரும் பாடம்

உக்ரேனிய நாடோடிக் கதை தமிழில்: கலைவாணி முன்னொரு காலத்தில் ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. ஆனால், அது ஒரு முட்டாள் பறவை. அது முட்டையிலிருந்து வந்தது முதல் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. அதனால் எதையுமே செய்ய முடியவில்லை. ஒரு கூட்டைக் கட்டிக்கொள்ளவோ, அலைந்து திரிந்து உணவு தேடவோ அது விருப்பம் இல்லாதிருந்தது. இருந்த இடத்திலேயே நன்றாகத் தூங்கிவிடும். கண்ணில் பட்ட உணவைச் சாப்பிடும். ஆயினும் அது மற்றவர்களிடம் எப்போதும் சண்டைபோடும். அது போடும் சண்டைகளுக்கு காரணம் இருக்கும், இல்லாமலும் இருக்கும். ஒரு நாள் அந்த சிட்டுக்குருவி, மற்ற குருவிகளுடன் ஒரு விவசாயியின் வீட்டருகே பறந்துகொண்டிருந்தது. அப்போது தரையில் மூன்று விதைகள் தென்பட்டன. உடனே நம் சிட்டுக்குருவி சொன்னது: “இந்த விதைகள் என்னுடைய விதைகள். நான்தான் அவற்றை முதலில் பார்த்தேன். நான்தான் அவற்றைக் கண்டுபிடித்தேன்.” ஆனால், மற்ற பறவைகளும் அப்படியே…

Read More
Uncategorized 

பாட்டு

ஆதவன் அழகனார் வட்ட மான ஆதவன் வானில் வந்து நிற்கிறான். தட்டுப் போல மின்னி மின்னித் தங்கமாகத் தெரிகிறான். கண்ணைக் கூசும் ஆதவன் காண்பாய் என்னை என்கிறான். விண்ணில் எங்கும் ஒளி நிறைத்து வியப்பை நமக்குத் தருகிறான். செம்மை ஒளியை ஆதவன் செடிகள் மீது தெளிக்கிறான். நம்மை நோக்கி நகைத்த வண்ணம் நானிலத்தைப்* பார்க்கிறான். பார்க்கப் பார்க்க ஆதவன் பள பளப்பாய் ஆகிறான். வளர்ந்து விட்ட வெள்ளி போல வடிவம் மாறி வருகிறான். *நானிலம்: நால்வகை நிலம் (குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்,)

Read More
Uncategorized 

காண்டாமிருகம் (Rhinoceros)

அழிந்துகொண்டிருக்கும் விலங்குகள் ஹசன் மாலுமியார் முகமூடிக் கொள்ளையர்கள் டப்ளினில் ஓர் அருங்காட்சியகத்தை உடைத்துத் திறந்து 65 லட்சம் டாலர் மதிப்புள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டார்கள். அவர்கள் தங்கத்தையோ வைரத்தையோ கொள்ளயடித்துச் செல்லவில்லை. அவர்கள் வேறு எதைத் திருடிச் சென்றார்கள்? நான்கு காண்டாமிருகத் தலைகளைத்தான்அவர்கள் எடுத்துச் சென்றார்கள். காண்டாமிருகத்தின் கொம்புகளில் கேன்சர் நோய்க்கான மருந்து இருக்கிறது எனும் மூடநம்பிக்கைதான் அந்த விலங்கின் உயிருக்கு அச்சுறுத்தலாகிறது. காண்டாமிருகத்தின் கொம்புக்கு மிக அதிகமான விலை கிடைப்பதால் காண்டாமிருகங்கள் கொல்லப்படுகின்றன. சீனாவிலும் வியட்னாமிலும் பழைய வீடுகளில் காண்டாமிருகக் கொம்பை காட்சிப்படுத்துவதுண்டு. இந்த வழக்கம், பெருமையைக் காட்டும் அடையாளமாகக் கருதப்பட்டது. காண்டாமிருகத்தின் தோல் ஒன்றரை சென்டிமீட்டர் முதல் ஐந்தரை சென்டிமீட்டர்வரை கனமுள்ளதாக (Thickness) இருக்கும். காண்டாமிருகத்தின் கொம்புகள் அதன் வாழ்நாள் முழுதும் வளர்ந்து கொண்டிருக்கும். இந்தியக் காண்டாமிருகத்துக்கு ஒரு கொம்புதான் இருக்கிறது. உலகத்தில் மொத்தம்…

Read More
Uncategorized 

வானவில் யூகலிப்டஸ் (Rainbow eucalyptus) செல்வி ஹவாயில் (Hawaii) கவாய் (Kauai) எனும் இடத்தில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களைப் பார்த்தால் யாரோ வண்ணம் தீட்டி வைத்த மரங்கள்போன்றிருக்கும். இந்த மரங்கள் ரெயின்போ யூகலிப்டஸ் மரங்கள் என்று அறியப்படுகின்றன. மரத்தின் மேல் தோல் வருடத்தில் ஒருமுறை பல சமயங்களில் உதிர்ந்துபோகும். அப்போது உள்ளிருக்கும் மரத்தின் பச்சை நிறத்தைப் பார்க்க முடியும். இந்தப் பச்சை நிறம் நாட்கள் செல்லச் செல்ல நீலம், ஊதா, ஆரஞ்சு, செம்பழுப்பு ஆகிய நிறங்களாக மாறும். அவ்வாறு மரத்தின் தோல், வானவில்போன்று பல நிறங்களில் காணப்படும். இந்த மரங்கள் ஏறத்தாழ 250 அடி உயரம் வளரும். அகலம் ஏறத்தாழ ஆறு அடி. ஒவ்வொரு மரத்தின் வண்ண அமைப்பும் ஒவ்வொரு வகையில் இருக்கும்.

Read More
Uncategorized 

சிங்கத்தின் நேர்காணல்

லாத்விய நாடோடிக்கதை ஓவியர்: இலோனா சிபி தமிழில்: கயல்விழி காட்டில் ஒரு சிங்கம் விலங்குகளின் ராஜாவாக வாழ்ந்துவந்தது. அதற்கு மிகவும் வயதாகிவிட்டது. முன்பைப்போல பாய்ந்து சென்று வேட்டையாட முடியவில்லை. இனி எப்படி உயிர்வாழ்வது என்று அது தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது. கடைசியில், விலங்குகள் அனைத்தையும் தன் குகைக்கு அழைத்துச் சொன்னது: “அன்பான என் குடிமக்களே, என் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். அதற்கு முன்பு உங்களில் சிறந்த ஒருவரை என் வாரிசாகத் தேர்ந்தெடுத்து இந்தக் காட்டுக்கு ராஜாவாக நியமித்துவிட்டால் என் கடமை முடிந்துவிடும். அதன் பிறகு நான் நிம்மதியாக இறந்துபோவேன். அதனால் உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக நேர்காணல் செய்து உங்கள் திறமையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதனால் தினமும் ஒரு விலங்கு என் குகைக்கு வரவேண்டும்.” காட்டுக்கு ராஜா ஆகிவிடவேண்டும் என்று எல்லா விலங்குகளும்…

Read More
Uncategorized 

அந்தக் கடைசி நாள்கள்…

கவிஞர் புவியரசு ‘‘உலகம் எப்போது அழியப் போகிறது?’’ இது ஒரு மகத்தான கேள்வி. யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். உடனே எதிர்க்கேள்விதான் எழும். ‘‘யார் சொன்னது?’’ “எதுக்கு அழியணும்?’,’ ஏன் அழியணும்?’’ என்பதுபோல…. கொஞ்சம் விவரமான ஆளிடம் கேட்டால்… சற்று யோசித்து நிதானமாகப் பதில் சொல்லக்கூடும். ‘‘இப்படியே போய்ட்டிருந்தா ஒரு அஞ்சு வருஷத்துக்குள்ளே அழிஞ்சு போயிறலாம். அதுக்கான வாய்ப்பு நெறயவே இருக்கு… கொஞ்சம் சுருக்கமா, விளக்கமா சொல்ல முடியுமா?’’ என்று பவ்வியமாகக் கேட்டால், அவர் இப்படிச் சொல்வார். ‘‘அழிவுக்கு ரெண்டு மூணு காரணங்கள் இருக்கு. எது முந்திக்கிதோ, தெரியலெ. ஒண்ணு. பூமி சூடாயிட்டே போறதாலெ பனிமலைகள், துருவப்பகுதிகளோட பனியுருகி, ஆறுகள் வெள்ளம் பெருகி, நதிக்கரை நகரங்கள் எல்லாம் அழியும். பெருகின தண்ணியெல்லாம் கடல்ல சேந்து, கடல் மட்டம் ஒசந்து சென்னை மாதிரி நகரங்களெல்லாம் அழியும். தப்பினவங்க உள்நாநட்டைப் பாத்து…

Read More
Uncategorized 

ஒரு மானுடப்பறவையின் பயணம்

பாவண்ணன் 20.06.1987 அன்று எங்களுக்கு மகன் பிறந்தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக என் தோள்பை நிறைய சாக்லெட்டுகளை எடுத்துச் சென்று மருத்துவமனைக் கூடத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் வழங்கினேன். அது ஒரு கொண்டாட்டமான கணம். என் உடலில் முளைத்த ரகசிய இறக்கைகளை அசைத்தசைத்து திக்குத்திசை புரியாமல் பறந்தபடி இருந்தேன். ஒரு கூடத்தில் தங்கியிருந்த அனைவருக்கும் கொடுத்த பிறகு, அடுத்தடுத்த கூடங்களில் இருப்பவர்களுக்கும் கொடுத்தால் என்னவென்று தோன்றியது. மறுகணமே அங்கே நுழைந்து எல்லோருக்கும் சாக்லெட்டுகளை வழங்கிவிட்டுத் திரும்பினேன். இப்படியே நடந்து நடந்து மருத்துவர்கள் அறைவரைக்கும் சென்றுவிட்டேன். எல்லா மருத்துவர்களும் அங்கே இருந்தார்கள். ஆனால் என் மனைவிக்குப் பேறு பார்த்த மருத்துவரை மட்டும் காணவில்லை. இருந்தவர்கள் அனைவருமே வாழ்த்துச் சொல்லோடும் புன்னகையோடும் சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டார்கள். அன்று மாலையில் மீண்டும் அந்த மருத்துவரைச் சந்திக்கச் சென்றேன். அறையில் அவரைக் காணவில்லை. அதற்கடுத்த…

Read More