You are here

கிளிப் பேச்சு

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ் அதிசயப் பாட்டு ‘கிளப் விங்டு மானக்கின்’ (Club Winged Manakin) எனும் பறவையின் பாட்டு மிகவும் அபூர்வமானதாகும். வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத ஒரு சிறப்புத் தன்மை இந்தப் பறவையின் பாட்டுக்கு உண்டு. அது என்னவென்றால், இந்தப் பறவை தன் வாயால் பாடுவதில்லை. தன் இறக்கைகளால் ஒலி எழுப்புகிறது. இந்த ஒலி உரத்த ஓசையுடன் ஒரே விதமாக இருக்கும். தன் தோழியைப் பார்த்த உடனே மானக்கின் ஆண் பறவை, தன் இரண்டு இறக்கைகளையும் பட்டென்று மேல் நோக்கி விரிக்கும். அப்போது இறக்கைகளில் ஏற்படும் அதிர்வு, பாட்டாக வெளிவரும். இந்தப் பறவை இறக்கை உயர்த்துவதும் பாடுவதும் சில நொடிகளுக்குள் முடிந்துவிடும். இது இப்படியே விட்டு விட்டுப் பாடிக்கொண்டேயிருக்கும். இந்தப் பறவைகள் கொளம்பியா மற்றும் ஈக்வடார் வனங்களில் வசிக்கின்றன. மனிதனுக்கு வால் இருக்கிறதா? நான்கு வாரம்…

Read More
மற்றவை 

கண்கள்

மாதவன் வெளிச்சம் குறைவான இடத்தில் படிப்பதோ, வேலை செய்வதோ கூடாது. மங்கிய வெளிச்சத்தில் படிக்கும்போது நம் கண்களுக்கு அதிக சிரமமாக இருக்கும். அதனால் கண்கள் சோர்வடையும். சூரியனுக்கு நேராக ஒருபோதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. புற ஊதாக் கதிர்கள் (Ultra Violet) நேரடியாகக் கண்களின் மீது பட்டால், அது கண்களின் விழித்திரையை (Retina) கடுமையாகப் பாதிக்கும். கணிப்பொறித் திரையையோ, கைப்பேசித் திரையையோ நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. வெறும் கண்களால் நீண்ட நேரம் இப்படிப் பார்த்துக்கொண்டிருந்தால் கண்களில் உள்ள நீர் வற்றிப்போகும். இது கண்களுக்கும் பார்வைத் திறனுக்கும் கேடு விளைவிக்கும். கண்கள் ஆரோக்கியத்துடன் இருக்க நம் உணவில் பழங்களும் காய்கறிகளும் முட்டையும் பாலும் சேர்த்துக்கொள்ளவேண்டும். கண்களில் ஏதும் அரிப்பு ஏற்பட்டால் உடனே கண்களைப் பலமாகக் கசக்கிக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் கண்களில் உள்ள அணுக்கள் சேதமடையும்….

Read More

வண்ண நதி

தொகுப்பு: ஜார்ஜ் அலெக்ஸ் வண்ண நதி கொலம்பியாவில், மேடா (Meta) மாகாணத்தில் ‘கானோ கிரிஸ்டல்ஸ்’ (Cano cristales river) எனும் நதி இருக்கிறது. இந்த நதியின் சிறப்புத் தன்மை என்ன தெரியுமா? செப்டம்பர் நவம்பர் மாதங்களில் இந்த நதி பல நிறங்களில் ஓடும். இந்த நதியை, ‘திரவ வானவில்’ (Liquid Rainbow) என்றும் ‘வண்ணங்களின் நதி’ (River of colors) என்றும் குறிப்பிடுகிறார்கள். மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், கருப்பு ஆகிய நிறங்களில் இந்த நதியைப் பார்க்க முடியும். மழைக்காலத்துக்குப் பிறகு ஏற்படும் இந்த நிறங்கள் நதியை மிகவும் அழகாக்குகின்றன. மழைக்குப் பிறகு ‘மக்கரீனியா க்லாவிகெரா’ (Macarena Clavigera) எனும் சிவப்பு நீர்த் தாவரம் நதியில் நிறைய உண்டாகிறது. இந்த தாவரம்தான் நதியில் நிற வித்தியாசம் ஏற்படுத்துகிறது. மூங்கில் பாலம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையான விஷயங்களில் பாலங்களும்…

Read More

பொன்மொழிகள்

முதியோர்களின் அறிவுரைகள் குளிர்காலச் சூரியன்போல சுடாது ஒளிரும். – அ. எர்மான் கட்டுப்பாடும் கவனமும் இன்றி செய்யத் தகாதவற்றைச் செய்பவனும், செய்யத் தக்கவற்றை செய்யாது இருப்பவனும் பெரிய துன்பத்துக்கு ஆளாவான் – புத்தர் உண்மையைக் கடைப்பிடிக்கும் மனிதன் அதிர்ஷ்டமில்லாதவனாக இருந்தாலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான் – அரிஸ்டாட்டில் நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் ஏற்படாது – கன்ஃபூசியஸ் வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் தேடி ஓடும்போதுதான் நாம் கால்கள் இடறி விழுந்துவிடுகிறோம் – ஷேக்ஸ்பியர் கற்பனை நம் வாழ்க்கையை உயர்வடையச் செய்கிறது – எமர்சன் நான் அனைத்தையும் நேசிக்கிறேன். அதனால்தான் என்னால் அனைத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது – டால்ஸ்டாய் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் விளக்காக இரு. அப்போதுதான் மற்ற விளக்குகளை ஏற்றி வைக்கலாம்…

Read More
மற்றவை 

மனிதக் குரங்கு

அழிந்துகொண்டிருக்கும் விலங்குகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு மனிதக் குரங்குகளிலிருந்து உருவானவன்தான் மனிதன் என்று சொல்லப்படுகிறது. ஆப்பிரிக்காவில் நிறையக் காணப்படும் ஹோமினிடே (Hominidae) எனும் இனத்திலிருந்துதான் முதல் மனிதன் தோன்றினானாம். ஆப்பிரிக்கக் காடுகளில் சிம்பன்ஸி குரங்குகள் (Chimpanzee: மனித உருவத்தை அதிகமாக ஒத்திருக்கும் வாலில்லாத ஆப்பிரிக்கக் குரங்கு வகை) அதிகமாக இருக்கின்றன. இவை கூர்மையான அறிவு கொண்டவை. சிம்பன்ஸியின் உருவமும் செயல்களும் மனிதனைப்போன்றே இருக்கின்றன என்பது நமக்கு வியப்பளிக்கும் விஷயமாகும். சிம்பன்ஸி அமர்ந்திருப்பது, நிற்பது, நடப்பது எல்லாம் மனிதனைப்போன்றிருக்கும். மனிதனைப்போல கூவவும் சிம்பன்ஸிக்குத் தெரியும். தூரத்தைப் பார்த்துக்கொண்டு சும்மா அமர்ந்திருக்கவும் அதற்கு முடியும். மரங்களுக்கிடையில் தாடைக்குக் கை கொடுத்து உட்கார்ந்திருக்கும் சிம்பன்ஸியைப் பார்த்தால், ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோலத் தோன்றும். அதுபோல, வயிறு நிறையச் சாப்பிட்ட பிறகு ஓய்வெடுப்பதும் சிம்பன்ஸிகளின் பழக்கம். மனிதர்களைப்போல கூட்டமாகச் சேர்ந்து நடக்கும். ஒரு…

Read More
மற்றவை 

…வேக எல்லை கடக்கும் தருணம்… கவிஞர் புவியரசு

எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதிர்வுகளை உண்டாக்கிய ஒரு சில படைப்புகளில், முக்கியமானது இந்த ஞானப் பறவையின் கதை. வானம்பாடி இயக்கத்தின் சூறாவளி நடுவே சுழன்று கொண்டிருந்த காரணத்தால், இந்தப் புத்தகத்தின் மேலட்டையில் சிறகு விரித்த பறவை என் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். அதனால், சட்டென எடுத்து பிரித்துப் பார்த்ததில் உள்ளே எம்மைப் போலவே பல பறவைகள் சிறகு விரித்துப் பறப்பது கண்டு, உடனே படிக்க ஆரம்பித்தேன். மிகப் பெரிய ஆலய கோபுரத்தின் கனத்த பெரிய கதவுகள், தடாலெனத் திறந்து கருவறைக் காட்சிகள் தெரிவதுபோல, அதுவரை, புதிராய்ப் புலப்படாதிருந்த பிரபஞ்சக் கதவுகள் என் முன் திறந்து கொண்டன அப்போது. கருவறைக்குப் பதிலாக மாபெரும் வெட்டவெளி என்முன் விரிய, கண்கள் கூசின. ‘சீகல்’ என்ற பறவைச்சாதிக்கு விதிக்கப்பட்ட பறக்கும் எல்லையைக் கடக்க, ஜோனதன் என்ற பறவைக்கு உந்துதல்…

Read More
நூல் அறிமுகம் மற்றவை 

இடைவெளி காலாண்டிதழ் மே-2017

காலனிய நுகத்தடியிலிருந்து இந்தியா விடுதலை பெறும் வரையிலும் அந்த ஒற்றை லட்சியத்தின் பேரொளியில் சுதேசி மனப்பான்மையையும், சுய பெருமிதம்,தொன்மை மரபுகள் போன்றவற்றையும் உயர்த்திப் பிடிப்பது உள்நாட்டுப் பத்திரிகைகள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் ஆகியோரின் கடமையாய் இருந்தது.விடுதலை பெற்றபின்னரோ கனவுகள் அனைத்தும் கருகிப்போன நிலையில் ஏமாற்றமும் விரக்தியும்,கசப்பும் மண்டிப்போயின.அதன் வெளிப்பாடுகளாக கலையும்,கவிதையும், இலக் கியமும் அமைந்திருந்தன.எழுபதுகள் வாக்கில் தமிழ்ச் சிற்றிதழ்கள் இத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தின.கலகக்குரல்களின் காலம் அது.வானம்பாடிகள் சிறகடித்தன. இலக்குகள், நடைகள், புதிய நம்பிக்கைகள் பிறந்தன.நவீனம்,நவீனத்துவம்,பின்னை நவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வெறிகொண்டு ஆடின.இன்று…? சந்தை..அதிலும் உலகமகாச்சந்தையே விசுவரூபம் எடுத்து வரம் கொடுத்த சாமிகளின் தலையிலேயே கைவைத்துச் சாம்பலாக்க முனைந்து விட்டது..சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி அதிகமாகி விட்ட இந்தச் சூழலில் “இடைவெளி” காலாண்டிதழாக வந்திருக்கிறது. வரவேற்கிறோம். “சென்ற நூற்றாண்டு மனிதனுக்கு மொழி, தேசம், விடுதலை, சமத்துவம், உலகளாவிய மானுடம், இலட்சியவாதம் என பலவிதப்…

Read More
மற்றவை 

அறிவியலை நம் ‘தோழர்‘ ஆக்கிய தோழர்! ஆயிஷா இரா. நடராசன்

அயர்ன் ஹீல் எனும் அறிவியல் புனைவைப்பற்றி பின்னாட்களில் கிராம்சி எழுதினார்: அந்தப்புத்தகத்தில் ஒரு புரட்சி மையம் கொண்டுள்ளது.’உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் ‘ எனும் மார்க்சின் அறைகூவலை அறிவியல் மயமாக்கிய பிரமாண்ட படைப்பே அயர்ன் ஹீல்.ஜாக் லண்டனின் உலகை உலுக்கிய 354 பக்க நாவல்.இந்தப்புத்தகம் 1908-இல் வெளிவந்தபோது சிவந்தமண் ஆட்சி ஒன்றுகூட இருக்கவில்லை என்பதை நாவலை வாசிக்கும் யாருமே நம்பமாட்டார்கள்.ஆனால் இந்தப்புத்தகத்தை தமிழக காவல்துறை தாதாக்கள் விரும்புவார்களா என்பது சந்தேகம்.ஏனெனில் ‘தோழர்’ எனும் சொல் நாவலில் இரண்டாயிரத்துப் பதினேழுமுறை வருகிறது.(எண்ணி வைத்திருக்கிறது இலக்கிய ஆய்வு உலகம்!)’ அப்போது நான் கரூரில் பஸ்-பாடி தொழிலகம் ஒன்றில் தற்காலிக வேலையில் சேர்ந்திருந்தேன்…..முதல்நாள்.பல்வேறு கோரிக்கைகளுக்காக ‘நுழைவாயில்’ தர்ணா.அன்று மக்ஸீம் கார்க்கியின் தாய் நாவல் பாத்திரமாகவே என்னை உணர்ந்து தொண்டை கிழிய முழக்கமிட்டபடி என் முதல்வேலை நாளைத் தொடங்கினேன்..என்றாலும் தோழர், வழக்கறிஞர் பி.ஆர்.கே. எனும்…

Read More
மற்றவை 

நெருப்புடா…நெருப்பு

ச.சுப்பாராவ் தலைப்பைப் பார்த்துவிட்டு வாசகர்கள் நமக்குத் தெரியாமல் ரஜினி எப்போது எழுத்தாளரானார் என்று உணர்ச்சிவசப்பட வேண்டாம். ரஜினி பயன்படுத்தும் முன்பே தமிழின் மிகச் சிறந்த படைப்பாளி இதைப் பயன்படுத்திவிட்டார். ஓர் எழுத்தாளரிடம் கட்டுரை கேட்பதற்காக ஒரு பத்திரிகை ஆசிரியர் வந்திருக்கிறார். அப்போது பக்கத்தில் நான் குறிப்பிடும் படைப்பாளியும் இருந்திருக்கிறார். ப.ஆசிரியர் உபசாரத்திற்காக ”நீங்களும் ஒரு கதை எழுதித் தாருங்களேன்” என்று கேட்டு விட்டார். அந்தப் பத்திரிகை தரமானதல்ல என்பது ஒரு பக்கம். வந்த இடத்தில் போகிற போக்கில் கேட்டது ஒரு பக்கம். நம் படைப்பாளி, அந்த ஆசிரியரைப் பார்த்து, ”அப்பா, நீ என்னிடம் கதை கேட்காதே. என் கதையை உன் பத்திரிகை தாங்காது. என் கதை நெருப்பப்பா… நெருப்பு. உன் பத்திரிகை சாம்பலாகி விடும்!” என்றார். தன் படைப்புகளின் மீது அத்தனை மரியாதை கொண்டிருந்த அந்தப் படைப்பாளி…

Read More
மற்றவை 

‘கனவு’ சுப்ரபாரதி மணியன்

தமிழில் நாளிதழ்கள், வார _ மாத இதழ்கள் வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து இரண்டு வகையாக அவை வெளியாகின்றன. பொழுதுபோக்க உதவும் பிரபலமான பத்திரிகைகள் ஒரு வகை. குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் போன்ற லட்சக்கணக்கில் விற்பனையாகும் இதழ்கள் இவ்வகையில் அடங்கும். ஒரு குறிப்பிட்ட இலட்சிய நோக்குடன், ஆழ்ந்த சிந்தனைகளையும், தீவிரமான இலக்கியப் படைப்புகளையும் தாங்கி வெளியாகிற பத்திரிகைகள் இவை. ‘சிற்றிதழ்கள்’ (Little Megazines) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகிற இவற்றைப் பெரும்பாலும் எழுத்தாளர்களே தனிநபர்களாக தமது சொந்தப் பொறுப்பில் நடத்தி வருவது வழக்கம். தமிழில் மிகத் தொடக்க காலத்திலிருந்தே இத்தகைய சிற்றிதழ்கள் வந்து கொண்டுள்ளன. மணிக்கொடி, சரஸ்வதி, சாந்தி, மனிதன், எழுத்து, நடை, கசடதபற, தீபம், கண்ணதாசன், கொல்லிப்பாவை, சதங்கை, சாரதா இப்படி ஒரு நீண்ட பட்டியலிடலாம். இப்போதும் வந்து கொண்டிருக்கும் ஒரு சில இதழ்களில் கணையாழி,…

Read More