You are here
வாசித்ததில் யோசித்தது 

படித்ததில் பிடித்தது

தொகுப்பு: ஆயிஷா இரா.நடராசன் 1. கல்வி ஒருவர்க்கு…. தொகுப்பு : ச. பாலகிருஷ்ணன் (புலம் வெளியீடு) கல்விகுறித்த 22 கட்டுரைகளின் தொகுப்பு. இப்போதுதான் முழுமையாக வாசித்தேன். அமர்தியாசென், கே.என். பணிக்கர் தவிர ஏனையவர்கள் தமிழ்ச் சூழலில் இயங்குபவர்கள். நம் இந்திய மாணவர் சங்கம் 2010ல் வெளியிட்ட கல்வி மலர்தான் இந்தத் தொகுப்பின் அச்சாணி. பாரம்பரிய இந்தியக் கல்வி என இந்துத்வா சொல்வதன் பித்தலாட்டத்தைத் தோலுரிக்கும் த.வி. வெங்கடேஸ்வரனின் கட்டுரையோடு தொடங்கும் தோழர் பாலகிருஷ்ணனின் பயணம், கல்விச் சந்தைகளை உடைக்கும் வசந்திதேவி வழியாக, தோழர் கனகராஜின் வகுப்பறை ஜனநாயகம் கட்டுரையோடு அ. மார்க்ஸின் கல்வி உரிமை சட்டம் என்பதுகூட ஒருவகை மோசடிதான் என அடைந்து இன்றைய கல்வி குறித்த தீர்க்கமான விமர்சனத்தை அரசியல் பூர்வமாகத் தொகுத்துரைத்துள்ளது.  கல்வி மணி அவர்களின் நேர்காணல் சிறப்பு. 2. மார்க்ஸ் உண்மையில் கூறியது…

Read More

வாசித்ததில் யோசித்தது

        சொல்லுக்குள் ஈரம்          ஆர். சூடாமணியின் படைப்புலகம்   கே.பாரதி, வானதி பதிப்பகம், சென்னை – 17,            ரூ. 75 பக். 184   போன்  044- 24342810 ஆர். சூடாமணி தமிழ் இலக்கிய உலகில் அழுத்தமாகப் பதிவு பெற்ற பெண் படைப்பாளி. நாவல், குறுநாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என அவர் இயங்காத தளம் இல்லை. நம்முடைய தமிழ்ப் படைப்பாளிகளில் சிலர் ஆங்கிலத்திலும் எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். ஆனால் சூடாமணி ஆங்கிலத்தில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். மிகுந்த உளவியல் கூறுகளுடன் தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர் சூடாமணி. அவருடைய கதைகளின் பிரதான அம்சம் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான் என்கிறார் சிறந்த சிறுகதையாளராகிய திலீப்குமார். நான்கு வயதிலிருந்தே நோயின் கோரப்பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட சூடாமணி…

Read More
மற்றவை வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

பெவிலியனில் காத்திருக்கும்  தலைகள் ஏறிய வாய் பார்த்து| எருக்கலாம் பால் வைத்து| முள்வாங்கியில் களைந்தெடுத்து விடுகின்ற| உன் பிரியம்தான்|முறிந்த முள் நுனியைப் |பூவின் இதழ்களாய் |மாற்றி விடுகிறது. ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில்   ஆசிரியராகப் பணியாற்றும் மாகா என்கிற மா.கார்த்திகேயன்  நீண்டகால இலக்கியவாசகர். படைப்பாளிகளுடன் வியந்து சினேகம் பாராட்டுபவர். தொடர்ந்த வாசிப்பும்,  வாழ்வனுபவங்களும்  மாகாவைக் கவிஞனாகப் பரிணாமம் கொள்ள வைத்துள்ளது. எல்லாப் படைப்பாளிகளும் இப்படித்தான் பிறப்பெடுக் கின்றனர். முதல் தொகுப்பென்று சொல்லிவிட முடியாத அளவிற்கு கவிதைகளில் முதிர்ச்சி தென்படுவதும், எதைக் கவிதையாக்குவது  என்பதில் மாகாவுக்குள்ள தெளிவும், அவரை வருங்காலத்தின் நம்பிக்கைக்குரிய  படைப்பாளிகளுள்  ஒருவராக நிறுத்துகிறது. மாகாவின் கவிதைகளில் தென்படும் கிராமத்து வாழ்வின் எச்சங்களைத்தான் இன்றைய நவீன கவிதை இழந்து தவிக்கிறது. நகர வாழ்வின் அவலங்களே இன்றையக் கவிதையின் கச்சாப்பொருளாகிவிட்ட சூழலில்  மாகா தன் கவிதையை ‘மண் எங்கும்…

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! நா. முத்துநிலவன் | அகரம் தஞ்சாவூர்- 7 | பக்.157 | ரூ.120 போன்: 04362 239289 மலர்ந்த பூக்களாய் மணம் வீசுகிற இந்தக் குழந்தைகள் பாடப் புத்தகங்களைக் கண்டதும் வாடிப் போவது ஏன்? இந்தக் கல்வித் திட்டம் ஏன் கசக்கிறது? இது ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகள் என்னென்ன? கல்வி பயணிக்கும் பாதை சரியானதுதானா? இத்தகைய கேள்விகளுக்காகவும், எதிர்காலத் தலைமுறை கேட்கப் போகிற கேள்விகளுக்காகவும் விடை காண புதிய களமிறங்கி கண்டுபிடிக்கப்பட்ட அறிவார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள்தான் கவிஞர். நா. முத்துநிலவன் அவர்களின் ‘‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’’ தலைப்பில் ஒலிக்கும் குரலில் எண்ணற்ற முற்போக்காளர்களின் குரலும் அடங்கியிருப்பதைப் போல என் குரலும் அடங்கியிருக்கிறது. ஆனாலும் மதிப்பெண்களைத் தான் துரத்துகிறது கல்வி. ஓடிப்போய் பிடித்தவர்கள் படித்தவர்களாகிறார்கள். தவறவிட்டவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள்….

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

ஆசிரிய முகமூடி அகற்றி… ச. மாடசாமி | அறிவியல் வெளியீடு, சென்னை- 86 | பக்.72 ரூ.60 | போன் : 044-28113630பிராங் மக்கோர்ட் (1930-2009) அமெரிக்காவில் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். ஆங்கில ஆசிரியர். மக்கோர்ட்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. மாணவர் ஒவ்வொருவரும் உரையாடலில் பங்கேற்கும் விதமாக எப்போதும் தம் வகுப்பறையை மக்கோர்ட் திறந்து வைத்தார். அவை கற்பனை நிறைந்த வகுப்பறைகளும் கூட. வெவ்வேறு நாட்டுச் சமையல் குறிப்புகளுக்கு இசையமைத்துப் பாடி மகிழ்ந்த வகுப்பறைகள். மட்டன் அரை கிலோ, மிளகாய்ப் பொடி 100 கிராம், உப்பு  இரு  சிட்டிகை என வரும் அட்டவணையை இசைக்கருவிகளோடு பாட்டாகப் பாடி அமர்க்களப்படுத்திய வகுப்பறைகள். மக்கோர்ட் மகா சாமர்த்தியசாலி. ஆனால் எழுதும்போது அப்பாவிபோல் எழுதுகிறார். எளிமையாகவும் வெளிப்படையாகவும் அமைந்த அவர் எழுத்தை வாசிப்பது நாட்டுப்புறக் கதை கேட்பதுபோல ஒரு குதூகலமான அனுபவம்….

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

இசை என்கிற குசும்புக்காரன் தமிழில் 1995-க்குப் பிறகு கவிதையைப் பெண்கள் வளைத்துப் போட்டுக் கொண்டு சரமாரியாக வெளுத்துக்கட்டிக் கொண்டிருந்தனர். அதிர்ச்சி யில் உறைந்துபோன ஆண் கவிஞர்கள் மண்டை காய்ந்து என்ன செய்வதென விளங்கா மல் ஒப்புக்குச் சப்பாணி ஆடத்தொடங்கி விட்டனர். பலபேர் சிறுகதை எழுதத் தொடங்கினர். ஆயினும் கவிதைத் தொகுப்பு கள் வந்த மயமாயிருந்தன. கவ¤தை… ம்ஹூம்.  உறைந்து போனவர் களிலிருந்து உயிர்த் தெழுந்தவர்கள் சிலர். ஆனால் இசை வேறொரு திசையிலிருந்து தனது சகல குசும்புகளோடும் வந்தவர். ஏகத்துக்குக் கவிதையை உடைத்துக் குழைத்து நசுக்கிப் பிதுக்கி அவர் செய்து வைக்கிற சிலைகளில் என்னவோ ஒருவிதமான வசீகரம், கலைத்தன்மை கைகூடிவிடுகிறது. அவை வடிவம் குறித்துப் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் நவீன கவிதைக்கு என்ன வடிவம் வேண்டிக் கிடக்கிறது? கவிஞனின் உள்ளொளி ஒருநொடியில் பளீரென எங்காவது பொறித்தட்டினால் போதும். கவிதை ஜெயித்துவிடும்….

Read More
வாசித்ததில் யோசித்தது 

வாசித்ததில் யோசித்தது

மார்க்சிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளக்கங்களும் வெங்டேஷ் ஆத்ரேயா வெங்டேஷ் ஆத்ரேயா இந்திய சமூகத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியவர். பல்வேறு பொருளாதார ஆய்வுகள் வழியே மக்களின் கோரிக்கைகளை உருவாக்கியவர்களுள் ஒருவர். சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம் வியட்நாமின் ஹனாய் நகரில் நடத்திய ஒன்பதாம் அமர்வில் அவருடைய மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ற படைப்பிற்காக சிறந்த சாதனையாளர் விருதை அளித்தது. அதைக் கொண்டாடும் வகையில் அவருடைய அந்த நூலிலிருந்து புத்தகம் பேசுது இதழின் சார்பாக ஒரு நேர்காணல் எடுக்கப்பட்டது. வினாக்களை ப.கு.ராஜன் தொடுத்தார். விரிந்த எல்லைகளைத் தொடும் அவரது பதில்கள்  இப்போது ஒரு சிறு நூலாக வாசகர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. மார்க்சியம் குறித்த பல்வேறு வினாக்களுக்கு வெங்கடேஷ்ஆத்ரேயா விரிவும் ஆழமும் கூடிய பதில்களை அளித்துள்ளார். அவை சுதந்திரமாக அணுகும் போக்கைக்…

Read More