You are here
நேர்காணல் 

பின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன!

– ரொமிலா தாப்பர் சந்திப்பு: பயாப்தி சுர், கனாட் சின்ஹா தமிழில்: ச.சுப்பாராவ் ஒரு வரலாற்றாளராக இந்தியாவில் கல்விப்புலம் சார்ந்த வரலாற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவருவதில் நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள். அரசின் கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ள ‘பொதுவான அறிவுஜீவிகள்‘ உதவவேண்டும் என்ற உங்களது கருத்து மிகவும் கவனம் பெற்றது. அரசியலில் வரலாற்றை நன்முறையில் பயன்படுத்துவதையும், தவறாகப் பயன்படுத்துவதையும், ஒரு ஜனநாயக சமூகமாக, இந்தியா எந்த அளவிற்குப் புரிந்துகொண்டுள்ளது? வரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். வரலாற்றை ஜனரஞ்சகமாக்கி, கல்விப்புலம்சார்ந்த வரலாற்றை மாற்றி எழுதிவிடும் போக்கு இருக்கிறது. கல்விப்புலம் சார்ந்த வரலாறு மாறுபட்ட ஒன்று என்பதைப் புரியவைப்பதே பெரிய போராட்டமாக இருக்கிறது. மக்களுக்கு தம் கடந்த காலம் பற்றித் தெரிய வைப்பது என்பதால்…

Read More
நேர்காணல் 

உண்மைக் குற்றவாளிகளின் தடத்தில்

ரானா அயுப்  – ஆசிரியர், குஜராத் ஃபைல்ஸ். ஆங்கிலத்தில்: ஸியா உஸ் சலாம். தமிழில்: கவிதா முரளிதரன் 2013ன் இறுதியிலும் 2014ன் ஆரம்பத்திலுமான காலகட்டம் அது. பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருந்த நரேந்திர மோடியைப் பற்றிய புத்தகங்களை எப்படியாவது கொண்டு வந்துவிட வேண்டும் என்று எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் போட்டிபோட்ட காலகட்டம். ஒரு வாரம் விட்டு மறு வாரம் மோடியைப் பற்றிய ஏதாவதொரு புத்தகம்-அவருடைய வாழ்க்கை வரலாறாக வேண்டும் என்கிற நோக்கத்தோடு – வெளி வந்துகொண்டிருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர் 1970களின் மத்தியில் நரேந்திர மோடி ஹிமாலயாவில் தங்கியிருந்ததைப் பற்றி எழுதினார். அந்த நேரத்தில் மோடி தில்லி பல்கலைக்கழகத்தில் அவருடைய பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இன்னொரு எழுத்தாளரோ மோடி எப்படி ஒரு முதலையுடன் மோதி வெல்லும் அளவுக்கு வீரனாக இருந்தார் என்று எழுதியிருந்தார். டீ விற்பவராக மோடி இருந்ததையும்…

Read More
நேர்காணல் 

குறுகத் தெரித்த குரல் – பெருகத் தெறித்த சிந்தனைகள்

எடுவர்டோ கலியானோ உடன் ஒரு பேட்டி ஜோனா ரஸ்கின்     தென் அமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள பராகுவே நாட்டில் 1940ஆம் ஆண்டு பிறந்த எடுவர்டோ கலியானோவின் எழுத்துக்கள் மிகுந்த வீரியம் கொண்டவை. அவரது லத்தீன் அமெரிக்காவின் ரத்த நாளங்கள் என்ற நூல் தென் அமெரிக்காவின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை நம் கண் முன்னால் கொண்டு வரும் ஓர் ஆவணமாகும். வெனிசுவேலாவின் அன்றைய அதிபர் ஹூகோ சாவேஸ் ஏப்ரல் 2009இல் நடைபெற்ற அமெரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு கலியானோவின் ரத்த நாளங்கள் புத்தகத்தை பரிசாக அளித்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றதாகும். ஐந்து நூற்றாண்டுகளாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை வளங்களை உறிஞ்சி உரம்பெற்ற அமெரிக்காவின் செயல்களை நமது ரத்த நாளங்கள் கொதிக்குமளவிற்கு மிகுந்த உஷ்ணத்துடன் வெளிப்படுத்துவதாக அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன….

Read More
நேர்காணல் 

4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை 4 ஆண்டுகளில் சாதித்தோம்…

எம்.எஸ்.சுவாமிநாதன் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை. சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர். இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர், மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல. பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய, சர்வதேசப் பல்கலைக் கழகங்கள் வழங்கியுள்ள டாக்டர் பட்டங்களும் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் ராமன் மக்சாயிசே விருது உட்பட பல விருதுகளும் இதில் அடக்கம். 90 வயதைக் கடந்து இன்றும் பணி தொடரும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் இரண்டு நாட்களில் இரண்டு மணி நேரம் ஒதுக்கித் தந்து வழங்கிய நேர்காணல் இது. நேரமும், புத்தகம் பேசுது…

Read More
நேர்காணல் 

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

ஜி. ராமகிருஷ்ணன் தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் எழுதிய புத்தகங்கள் ஏராளம் உண்டு. எளிய தொண்டர்களைப் பற்றித் தலைவர் எழுதிய முதல் புத்தகம் இதுதான். இதை எழுத வேண்டும் என்று உங்களைத் தூண்டியது எது. பதில் : மாநிலக்குழு உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ஒருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை எடுத்தோம். அவருடைய கட்சி வாழ்க்கையில் கட்சி அவருக்கு எல்லாக் கட்டத்திலும் முக்கியத்துவம் கொடுத்தது. கூட்டுறவு சங்கத் தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி மாநாட்டில் மாவட்டச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். நகர்மன்றத் தேர்தலில் நகராட்சித் தலைவர் வேட்பாளர் ஆனார். சட்டமன்ற தேர்தலில் நிற்க வைத்து அவரை கட்சி சட்டமன்ற உறுப்பினராக்கியது. ஆனாலும் அவர் ஒரு கட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியைவிட்டே வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் வரையில்…

Read More
நேர்காணல் 

அச்சுறுத்தும் புதிய நோய், பரிணாமம், ஆரோக்கியம்

டேனியல் இ லிபர்மேன் மானுடப் பரிணாம உயிரியல் பேராசிரியர் டேனியல் இ லிபர்மேன் ஹார்வார்ட் பல்கலையில் பணியாற்றுகிறார். மனித உடல் தற்போது நாம் காண்பதைப் போல இருப்பதன் காரணத்தையும், அது இப்போது செயல்படுகிற விதத்தில் செயல்படுவதன் காரணத்தையும் குறித்து நிறைய ஆய்வுகளை வெளியிட்டிருக்கிறார். தற்போது அவர் செய்து வரும் ஆய்வு, காலணிகள் இன்றி ஓடுவதன் சாதகங்கள் பற்றியது. எனவே அவருக்கு ‘வெறுங்கால் பேராசிரியர்’ என்று பட்டப்பெயரும் உண்டு. 2013ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட டேனியல் லிபர்மேனின் The Story of Human Body: Evolution, Health and Disease என்ற நூல் (அண்மையில் இந்நூலை, மனித உடலின் கதை: பரிணாமம், ஆரோக்கியம், நோய் என்ற தலைப்பில் பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டிருக்கிறது.) குறித்து இயன் டக்கர் நூலாசிரியருடன் உரையாடியதிலிருந்து: [ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு] மக்கள் படித்தறிந்து, தங்களின் நடத்தையை…

Read More
நேர்காணல் 

தன்னின உயர்வுவாதமே பிரிவினைகளுக்கு முக்கியக் காரணம்…

– சு.கி. ஜெயகரன் நேர்காணல்: சஹஸ் படங்கள்: சுஜித் சுஜன் தாராபுரத்தில் பிறந்த சு. கிறிஸ்டோபர் ஜெயகரன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் புவியியல் பட்டமும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் இங்கிலாந்து கிளாஸ்ப்பரோ பல்கலைக் கழகத்தில் நிலத்தடிநீர் ஆய்வு தொடர்பான சான்றிதழ் பட்டமும் பெற்றவர். பல ஆண்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும், பாபுவா நியூகினியாவிலும் பணியாற்றியவர். கடைசியாக, ஜெர்மானிய நிறுவனம் ஒன்றிற்காகச் ஜாம்பியாவில் பணியாற்றி 2011ல் ஓய்வுபெற்றுத் தற்சமயம் பெங்களூருவில் வசித்துவருகிறார். தொல்லியல், ஆதி மனிதக் குடியேற்றம், தமிழின வரலாறு ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜெயகரன் எழுதிய குமரி நில நீட்சி (காலச்சுவடு)பழங்காலத் தமிழக வரலாற்றின பின்னணியில் உருவான மாயைகளை உடைக்கும் ஓர் அறிவியல் நூல். அவரது இதர நூல்கள் மூதாதையரைத் தேடி (காலச் சுவடு), தளும்பல் (உயிர்மை), கறுப்புக் கிஸ்துவும்,…

Read More
நேர்காணல் 

மூளை ஓர் உயிரியல் அமைப்பு

அது ஒரு பொறியாளர் வடிவமைத்த கருவிபோல் இயங்குவதில்லை – டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன் டாக்டர்.வி.எஸ்.ராமச்சந்திரன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்று, தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மனித மூளை ஆராய்ச்சியில் வல்லுநர். நரம்பியல் அறிவியல், தத்துவம், மனச்சாட்சி அதற்கு அப்பாற்பட்ட நிலையிலும் ஆராய்ந்து தெரிந்தவர். அவரது புகழ்பெற்ற நூல்களான உருவாகும் உள்ளம் (emerging mind). மூளை ஒரு புதிர் (Tell tale brain) ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள் விரைவில் பாரதி புத்தகாலயம் வெளியீடாக வரவிருக்கின்றன. பிரண்ட்லைன் இதழில் (மார்ச் 25-எப்ரல் 7, 2006) சசிகுமார் அவர்களுக்கு அளித்த நேர்காணலின் தமிழ் வடிவம் இங்கே ஒரு முன்னோட்டமாக… சந்திப்பு: சசிகுமார் | தமிழில்: பி.கே. ராஜன் சசிகுமார்: இந்த நேர்முக சந்திப்பிற்குத் தாங்கள் சம்மதித்ததற்காக நான் நன்றியைத் தெரிவிக்கிறேன். நரம்பியலும்…

Read More
நேர்காணல் 

தென் இந்திய ஆய்வுகளின் போக்குகளும் வெற்றிடங்களும்

(மறைந்த தமிழறிஞர் நொபுரு கராஷிமாவுடன் ஒரு பேட்டி.  ஃப்ரண்ட்லைன் பிப்ரவரி 22, 1985 இதழில் வெளியானது. பேட்டி கண்டவர் மாலினி பார்த்தசாரதி) சில பத்தாண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவைப் பற்றிய எழுத்துக்கள் என்பவை இப்பகுதியை ஆட்சி செய்த அரச வம்சத்தினரின் வீரதீரச் செயல்கள் பற்றிய விவரிப்புகளாகவே – அதாவது அவர்களின் வாழ்க்கையும் காலமும் என்றதொரு கட்டமைப்பை ஒட்டியதாகவே – அமைந்திருந்தன. எனினும், சமீப காலத்தில் உருவான புது வகையான வரலாற்று ஆய்வாளர்கள் இத்தகைய அரச வம்சத்தினர் நிலைத்து நிற்கக் காரணமாக இருந்த சமூகப் பின்னணியின் முழுமையான தன்மையை இது போன்ற (ஆராய்ச்சி) அணுகுமுறைகள் போதுமான அளவிற்கு விளக்குவதாக அமையவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். கடந்த கால சமூகத்தின் செயல்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அன்றைய நாட்களின் அரசியலின்மீது தாக்கத்தை ஏற்படுத்திய பல்வேறு வகைப்பட்ட, ஒன்றோடொன்று போட்டியிடும் வகையிலான,…

Read More
நேர்காணல் 

இணையத் தமிழால் இணைவோம்!

இணையத் தமிழால் இணைவோம்! – நா.முத்துநிலவன் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அடிக்கடி தென்படும் பேச்சாளர், 34ஆண்டு அரசுப் பள்ளித் தமிழாசிரியராயிருந்த கல்வியாளர், அறிவொளி இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களில் ஒருவர், அதற்கான நாடகங்களுக்காக 500கலைஞர்களுக்குப் பயிற்சியளித்த நாடகர், இனிய பாடலாசிரியர், எடுப்பான பாடகர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா சங்கத்தை மாவட்டத்தில் விதைத்து வளர்த்த இயக்கத் தலைவர், தேர்ந்த ஓவியர், “கம்பன் தமிழும் கணினித்தமிழும்”, “முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே” முதலிய 6 நூல்களின் ஆசிரியர், இணையத் தமிழுலகில் புகழ்பெற்ற எழுத்தாளராகி, அண்மையில் மாநிலஅளவிலான “வலைப்பதிவர் திருவிழா”வைச் சிறப்பாக நடத்திய “கணினித் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர்” என, பன்முக அனுபவத் தழும்புகளைக் கொண்டவர், புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துநிலவன். சமீபத்தில் வேண்டியவற்றை வலைப்பதிவர் திருவிழா நடத்திய முத்துநிலவனிடம், “புதிய புத்தகம் பேசுது” இதழுக்காக நேர்காணல் செய்தோம். இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு எந்த அளவிற்கு…

Read More