You are here
நூல் அறிமுகம் 

பயணங்கள் முடிவதில்லை

முனைவர் அ. வள்ளிநாயகம் பயணங்கள் முடிவதில்லை என்ற சோ. சுத்தானந்தம் அவர்களின் வாழ்க்கைப்பயணக் கட்டுரைகள் ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற முகவுரையுடன் 21 பயணங்களின் அனுபவமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நடைப்பயணத்தில் ஆரம்பிக்கும் கட்டுரைத் தொகுதிகள் 7ம் வயதில் தொடங்கி அவரது 70 வயதுவரை தொடர்வதாகக் கருதலாம். அவர் இக்கட்டுரைகளில் ஓரிடத்தில் கூட அவரது வயது பற்றிக் குறிப்பிடவில்லை. இந்த நூல் பயணங்களின் தொகுப்பாக இருந்தாலும், இந்நூலின் மூலம் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நாம் அறிந்துகொள்ள வழிவகுக்கிறது. ஆண்டு முழுவதும் லாபம், நட்டம் என்றே புலம்பவைக்கும் இந்த மூலதனத்தின் மனிதநேயமற்ற பலநிகழ்ச்சிகளை அனுபவரீதியாக உணர ஒருவாய்ப்புக் கிடைத்தது என்ற வார்த்தைகள் இவரது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகின்றன. காலமெல்லாம் இடதுசாரியாக வாழ்ந்த இவரது வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். இவரது வாழ்க்கை ஒரு கதைபோல் அமைந்தாலும் அதைக்கூறுவது மிகச்சிரமம். இவர்…

Read More
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள் ச.மாடசாமி

கல்வி குறித்த பதிநான்கு கட்டுரைகளடங்கிய ஒரு சிறு தொகுப்பு இந்நூல். பா.ப்ரீத்தி அவரவர் இயல்பு மாறாமல் எதார்த்தமாய்ச் சிரிக்கிற குழந்தைகளின் முகம் பதித்த அட்டைப்படமே நிச்சயமாக குழந்தைப் பிரியர்களை வசீகரிக்கும். குழந்தைகளின் நூறு மொழிகள் என்று பெயரிட்டு ஆயிரம் மொழிகளைப் பேசியிருக்கிறார் ஆசிரியர். “கேட்பது நல்லது என்றறிவோம்.ஆனால் பேசத்தான் விரும்புவோம் -வகுப்பறையில்” என்ற வாசகத்தை வாசித்துவிட்டு அத்தனை சுலபமாய்க் கடந்துவிட முடியவில்லை. ‘Say Yes or No’ என்ற நமது ஒற்றைப் பதில் கேள்விக்குள் அடங்கிட முடியாத குழந்தைகளின் பதில்கள் எத்தனை எத்தனை… நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஆசிரியரைப் பல்வேறு கண்கள் பல்வேறு கண்ணோட்டத்தில் கவனித்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மாணவர்களின் கண்கள் அந்த இளங்கண்கள்- எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் நம்மை மட்டுமே கவனிக்கின்றன என்பதை அழுத்தமாய் மனதில் ஊன்றிச் செல்கிறது ஒரு கட்டுரை. Yes…

Read More
நூல் அறிமுகம் 

பொதுவுடைமை அறிக்கையின் நடையைக் குறித்து….

உம்பர்டோ இகோ தமிழாக்கம்: க. பஞ்சாங்கம்   ஆழமாகவும் நயமாகவும் எழுதப்பட்ட ஒரு சில பக்கங்கள், இந்த உலகத்தையே மாற்றின என்று எண்ணிப்பார்ப்பது கடினமான ஒன்றுதான். தாந்தேவினுடைய ஒட்டுமொத்த எழுத்துகள் எல்லாம் சேர்ந்தும் கூட, இத்தாலியின் ரோமப் பேராட்சியைப் புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1848_இல் எழுதப்பட்ட ‘பொதுவுடைமை அறிக்கை,’ ஒரு பிரதி என்கிற முறையில், இருநூற்றாண்டு மனித வரலாற்றின் மேல் மிகப் பெரிய செல்வாக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளது என்பது நிச்சயம். எனவேதான் இலக்கிய நோக்கில் இதன் நடை அழகைக் கட்டாயம் மறுபடியும் அணுக்கமாக நாம் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இதன் மூலத்தை வாசிக்க வாய்ப்பு அமையாத நிலையிலும் கூட! ஒருவர் அசாதாரண முறையில் இப்பிரதியில் வெளிப்படும் விவாதங்களின் அமைப்பையும், அழகியல் திறத்தையும் புலப்படுத்தும் பாங்கில் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்….

Read More
நூல் அறிமுகம் 

குழந்தைகளின் நூறு மொழிகள்

மொழி, பண்பாடு, கல்வி குறித்த கட்டுரைகள் ச. மாடசாமி வகுப்பறையும் அறிவொளியும்தான் இந்தக் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. கல்வியிலும் கலாச்சாரத்திலும் பேச்சிலும் மொழியிலும் தட்டுப்பட்ட மேடுபள்ளங்களை அறிந்தது இந்த வெளிச்சத்தின் வழிதான். நான் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இந்த வெளிச்சத்தில் கிடைத்ததுதான். இது சன்னமான வெளிச்சம். இருந்தபோதும், இதன்மீது இருட்டு வந்து அடைந்தது இல்லை. பேச்சிலும், தோற்றத்திலும், அறிவாளித் தனத்திலும் மிகச் சாதாரணமாய்த் தெரிவோர் இடையறாமல் இந்த வெளிச்சத்தை வழங்கிக் கொண்டிருக்கையில் இருட்டு எப்படி வரும்?… எளிய மக்களோடு கலக்கையில்தான் என் இறுக்கம் நெகிழ்கிறது. மெல்லக் கற்ற மாணவர்கள்தான் ஆத்மார்த்தமாய் என்னோடு நெருங்கி இருந்திருக்கிறார்கள். என்றென்றைக்கும்நம்பிக்கைக்குரிய அவர்களுக்காகவே நான் தொடர்ந்து பேசுகிறேன். எழுதுகிறேன். ச. மாடசாமி கல்வி,கலாச்சாரம்,மொழி,பேச்சு உட்பட சமூகத்தின் நிலப்பரப்பில் எத்தனையோ மேடு பள்ளங்கள். அவற்றை இனங்கண்டு பாதுகாப்பாய் சமூகத்தைச் சமன் செய்ய ஒரு வெளிச்சம் தேவையாயிருக்கிறது….

Read More
நூல் அறிமுகம் 

(முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்)

பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய Murder in Mudukulathur: Caste and Electrol Politics in Tamilnadu (முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்) புத்தக வெளியீட்டு விழா பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய (Murder in Mudukulathur: Caste and Electrol Politics in Tamilnadu) முதுகுளத்தூர் படுகொலை, தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும் என்னும் நூல் வெளியீட்டு விழா 29.05. 2017 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேனாள் துணைவேந்தர் ம.சு.பல்கலைக் கழகத்தின், முனைவர் வே. வசந்திதேவி தலைமை வகித்தார். இந்நூலை கஸ்தூரி – சன்ஸ் லிமிட்டெட்டின் தலைவர் என். ராம் நூலை வெளியிட்டார். விழாவில் முதல் பிரதியை (உள்துறை அமைச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, மூத்த ஆலோசகர் கே.விஜயகுமார் பிரதியைப் பெற்றுக் கொண்டார்….

Read More
நூல் அறிமுகம் 

பண்பாட்டுக் களத்தில்

மார்க்சிஸ்ட் மாத இதழ்   உண்மையில் பாஜக ஆட்சிக்குவருவதும், ஆர்.எஸ்.எஸ் வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றிதோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது. அவர்களின் செயல்திட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது. அது நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் அமைப்பை பலவீனப்படுத்துகிறது. அந்த இடத்தில் சகிப்புத் தன்மையற்ற குருமார்களின் சித்தாந்தத்தைக் கொண்ட வெளிப்படையான பயங்கரவாத சர்வாதிகார அமைப்பு ஒன்றால் மாற்றி அமைக்கப்படுகிறது. இத்தகைய அபாயத்தை எதிர்கொள்ள தேவையான தெளிவை இந்த நூல் வழங்கும்.

Read More

பேச மறுக்கும் சமூகத்தின் அசிங்கம்

– பழனி ஷஹான் நமக்குள் நிகழ்ந்திடாத அனுபவத்தின், நாம் அறியாத மனித வாழ்க்கையின் பக்கங்களைத் தூக்கிச் சுமப்பதே புத்தகங்களின் தார்மீகக் கடமையாக இருக்கின்றது. வ.கீரா-வின் எழுத்தில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “மோகினி” எனும் சிறுகதைத் தொகுப்பு அப்படியான வலிகள் நிரம்பிய வாழ்க்கையின் கதைகளையே நமக்குச் சொல்கிறது. கதைகளின் பெரும்பான்மையானவை, பாரதிராஜாவின் படங்களைப் போல கிராமத்தின் வாசனையால் நிரம்பியிருக்கின்றன. நம் ஆழ் மனதில் படிந்திருக்கும் கிராமத்தின் தோரணைகள் ‘மோகினியில்’ அப்படியே வெளிப்பட்டிருந்தாலும், அது சொல்லும் கதைகளில் சில கிராமத்தின் தனியுடைமையிலிருந்து சற்று விலகி நின்று காட்சியளிக்கின்றன. ஒரு சொல் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது. அலிகள், அரவானிகள் என்கிற சொல்லுக்கு மாற்றாய் ‘திருநங்கைகள்’ எனும் சொல்லாடல் பிறந்தது. அதுவெறும் சொல் மாற்றமல்ல. ஓர் இனத்தின் அல்லது சமூகத்தின் மீதான கறையைத் துடைக்கும் புரட்சியாகும். ஆனால் திருநங்கை என்கிற சொற்பிரயோகம் அவர்களின்…

Read More
நூல் அறிமுகம் 

ஸ்தாபனம்… மக்களிடமிருந்து மக்களுக்கு…

“பியானோவை வாசிக்க பத்து விரல்களையும் இயக்க வேண்டும்.சில விரல்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைத் தவிர்த்தால் அதை இயக்க முடியாது.பத்து விரல்களையும் ஒரே நேரத்தில் அழுத்தினால் இன்னிசை பிறப்பதில்லை.ஒரு நல்ல இசையை உருவாக்குவதற்கு பத்து விரல்கள் நயமாகவும் ஒன்றிணைந்தும் இயங்க வேண்டும்….” இசைக்கலைஞர் ஒருவரின் கருத்து இது என்றால் அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆனால்,கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் தொடர்பாக செஞ்சீனப்புரட்சி நாயகர் மாவோ சொன்ன மேற்கோள் இது.இதை எதற்கு உவமையாக மாவோ சொன்னார்? “கட்சிக்கமிட்டி தனது மையமான கடமையினை உறுதியாகப் பற்றி நிற்க வேண்டும்.ஆனால் அதே நேரத்தில் மையமான கடமைகளுக்கு மத்தியில் மற்ற தளங்களில் வேலைகள் திறந்து விடப்பட வேண்டும்.தற்சமயத்தில் நாம் பல தளங்களில் இந்த கவனத்தைக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.சில பிரச்சனைகளில் மட்டும் நமது மொத்தக் கவனத்தையும் செலுத்துதல் கூடாது.” என்று சொல்லுகிற மாவோ மீண்டும் பியானோவைக் கையில்…

Read More
நூல் அறிமுகம் 

ஈசாப் கதைகள் தொகுப்பு: முல்லை முத்தையா

வாய்மொழி மரபில் உலகப்புகழ் பெற்ற கதைகள் இவை. எகிப்திய மன்னன் ஃபாரோ அமாசீஸ் காலத்தில்,அதாவது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஈசாப் என்று சொல்கிறார்கள்.எழுத்தறிவு இல்லாத இவரின் வாழ்நாள் முழுவதும் வறுமையும் துன்பமுமே நிறைந்திருந்தது. இவரின் மரணமும் கூட இயற்கையானதல்ல எனப்படுகிறது.ஏதோ ஒரு குற்றச்சாட்டின் பேரில் மலைமீதிருந்து உருட்டிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. புரட்சியாளர்களுக்கும்,புதுமையான கருத்தாளர்களுக்கும் அக்காலத்தில் இயற்கையான மரணம் இல்லை. எழுதப்படிக்கத் தெரியாமல் அடிமையாகத் துயரப்பட்டாலும் உலகமே வியக்கும் கதைகளை வழங்கியவர் ஈசாப். கிரேக்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட இக்கதைகள் காலத்தை வென்று நிற்பவை..பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே.அவற்றின் வழியே உணர்த்தப்படும் நீதி மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.

Read More
நூல் அறிமுகம் 

பாரதியார் சரித்திரம்‘

மகாகவி பாரதியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த செல்லம்மாள் படிப்பறிவு மிகவும் குறைவாகப் பெற்றிருந்த  ஓர் எளிய கிராமத்துப் பெண். அவர் கண்ட கனவுகளெல்லாம்  நிராசையாகி நொறுங்கிப் போயிருந்திருக்க வேண்டும். எனினும் பாரதியின் கவிமனதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து ஈடு கொடுத்து வந்திருக்கிறார் அவர் என்பதை இந்நூலைப் படிப்போர் உணர முடியும். கண்ணீரை வரவழைக்கும் பல வரிகள் செல்லம்மாவினால் கூறப்பட்டுள்ளன. அவருடைய பேதை நெஞ்சின் அடியாழத்திலிருந்து, ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுடன் வெளிப்பட்ட உண்மை மொழிகள் இவை. எனவேதான் ’கவியோகி’ சுத்தானந்த பாரதி,  ‘நேரே நின்று பேசுவதுபோல்’ அவ்வளவு சரளமாக இந்த நூலை எழுதியளித்த ஸ்ரீமதி பாரதிக்குத் தமிழர்கள் நன்றி  செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று பாராட்டியிருக்கிறார். அதோடு, பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், ஈகை, சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்ததுபோல்…

Read More